Home Notes All Exam Notes வழக்கு, போலி முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

வழக்கு, போலி முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

0
வழக்கு, போலி முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
வழக்கு, போலி முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

வழக்கு, போலி முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான வழக்கு மற்றும் பொலி பற்றிய முக்கிய வினா-விடைகள் இங்கே! இந்த வினா-விடைகள் உங்கள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான தமிழ் இலக்கணம் பயிற்சியில் மிகவும் உதவியாக இருக்கும்.

வழக்கு மற்றும் பொலி என்பது சொற்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்து மிக முக்கியமான பகுதி ஆகும். இந்த வினா-விடைகள் மூலம், நீங்கள் உங்கள் தமிழ் அறிவை மேம்படுத்த முடியும்.

1) வழக்கின் வகைகள் _

அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5

விடை: அ) 2

2) இயல்பு வழக்கின் வகைகள் _

அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5

விடை: ஆ) 3

3) இலக்கண முறைப்படி அமையாவிடினும் , இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள்

அ) இலக்கணமுடையது ஆ) இலக்கணப்போலி
இ) மரு
உ ஈ) இடக்கரடக்கல்

விடை: ஆ) இலக்கணப்போலி

4) வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குவது

அ) இலக்கணமுடையது ஆ) இலக்கணப்போலி
இ) மரு
உ ஈ) இடக்கரடக்கல்

விடை: இ) மரு_உ

5) முன்பின்னாகத் தொக்க போலி எனக் குறிப்பிடப்படுவது

அ) இலக்கணமுடையது ஆ) இலக்கணப்போலி
இ) மரு
உ ஈ) இடக்கரடக்கல்

விடை: ஆ) இலக்கணப்போலி

6) கூற்றினை ஆராய்க

1. இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து , சிதைந்து வழங்கும் சொற்கள் மருஉ எனப்படும் 2. கோவை , குடந்தை , எந்தை – மருஉக்கான எடுத்துக்காட்டாகும்

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு

விடை: இ) இரண்டும் சரி

7) கீழ்கண்டவற்றில் மரு_வு அல்லாத சொல்லைத் தேர்ந்தெடு:

அ) தஞ்சை ஆ) சோணாடு
இ) கால்வாய் ஈ) எந்தை

விடை: இ) கால்வாய்

8) ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது _

அ) போலி ஆ) தகுதி வழக்கு
இ) இலக்கணப் போலி ஈ) இயல்பு வழக்கு

விடை: ஆ) தகுதி வழக்கு

9) தகுதி வழக்கின் வகைகளுள் அடங்காததைத் தேர்ந்தெடு:

அ) இடக்கரடக்கல் ஆ) மங்கலம்
இ) மருவு ஈ) குழூஉக்குறி

விடை: இ) மருவு

10) ‘செத்தார்’ என்னும் சொல்லை துஞ்சினார் எனக் குறிப்பிடுவது

அ) இடக்கரடக்கல் ஆ) மங்கலம்
இ) மரு_வு ஈ) குழூஉக்குறி

விடை: ஆ) மங்கலம்

11) பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லைத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது

அ) இடக்கரடக்கல் ஆ) மங்கலம்
இ) மரு
வு ஈ) குழூஉக்குறி

விடை: அ) இடக்கரடக்கல்

12) இல்லத்தின் முன் பகுதியை ‘இல்முன்’ எனக் குறிக்காமல் ‘முன்றில்’ என வழங்குவது

அ) இலக்கண போலி ஆ) இலக்கணமுடையது
இ) குழூஉக்குறி ஈ) மங்கலம்

விடை: அ) இலக்கண போலி

13) இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் _

அ) இலக்கண போலி ஆ) இலக்கணமுடையது
இ) குழூஉக்குறி ஈ) மங்கலம்

விடை: ஆ) இலக்கணமுடையது

14) ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக் கொள்ளும் சொற்கள்

அ) இலக்கண போலி ஆ) இலக்கணமுடையது
இ) குழூஉக்குறி ஈ) மங்கலம்

விடை: இ) குழூஉக்குறி

15) நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் _

அ) இடக்கரடக்கல் ஆ) இலக்கணமுடையது
இ) குழூஉக்குறி ஈ) மங்கலம்

விடை: அ) இடக்கரடக்கல்

16) ஓலை என்னும் சொல்லை திருமுகம் என குறிப்பிடுவது _

அ) இடக்கரடக்கல் ஆ) கழூவுக்குறி
இ) மங்கலம் ஈ) போலி

விடை: இ) மங்கலம்

17) பொன்னைப் பறி என பொற்கொல்லர் பயன்படுத்துவது _

அ) இடக்கரடக்கல் ஆ) குழூஉக்குறி இ) மங்கலம் ஈ) போலி

விடை: ஆ) குழூஉக்குறி

18) சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்மு அதே பொருள் தருவது _

அ) முதற்போலி ஆ) இடைப்போலி
இ) கடைப்போலி ஈ) முற்றுப்போலி

விடை: அ) முதற்போலி

19) முதற்போலிக்கான எடுத்துக் காட்டினைத் தேர்ந்தெடு

அ) இலைஞ்சி ஆ) அமைச்சு
இ) மைஞ்சு ஈ) அரையர்

விடை: இ) மைஞ்சு

20) ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது _

அ) முதற்போலி ஆ) இடைப்போலி
இ) கடைப்போலி ஈ) முற்றுப்போலி

விடை: ஈ) முற்றுப்போலி

21) பொருத்துக

1. பந்தர் – முதற்போலி
2. மைஞ்சு – முற்றுப்போலி
3. அஞ்சு – இடைப்போலி
4. அரையர் – கடைப்போவி

அ) 4123 ஆ) 2143 இ) 1243 ஈ) 1234

விடை: அ) 4123

22) பொருத்துக

1. இலக்கணமுடையது – புறநகர்
2. மங்கலம் – கால் கழுவி வந்தான்
3. இலக்கணப் போலி – இறைவனடி சேர்ந்தார்
4. இடக்கரடக்கல் – நிலம்

அ) 2314 ஆ) 4312 இ) 1234 ஈ)3412

விடை: ஆ) 4312

23) பொதும்பர் – என்பதன் இலக்கணக்குறிப்பு

அ) உருவகம் ஆ) உம்மைத்தொகை
இ) ஈற்றுப்போலி ஈ) ஆகுபெயர்

விடை: இ) ஈற்றுப்போலி

சமூகம் மற்றும் பயிற்சி

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான வழக்கு மற்றும் பொலி வினா-விடைகள் உங்களுக்கு ஒரு சிறந்த பயிற்சியாக இருக்கும். இவற்றை பழகி, உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 வழக்கு, போலி முக்கிய வினா-விடைகள் க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

PRINTOUT 50 PAISE LOW COST

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version