Home Notes All Exam Notes பொது, வழு, வழாநிலை, வழுவமைதி முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

பொது, வழு, வழாநிலை, வழுவமைதி முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

0
பொது, வழு, வழாநிலை, வழுவமைதி முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
பொது, வழு, வழாநிலை, வழுவமைதி முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

பொது, வழு, வழாநிலை, வழுவமைதி முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு பொது, வழு, வழாநிலை, வழுவமைதி பற்றிய முக்கிய வினா-விடைகள் இங்கே! இந்த வினா-விடைகள் உங்கள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான தமிழ் இலக்கணம் பகுதியை பயிற்சி செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.

பொது, வழு, வழாநிலை, வழுவமைதி என்பது சொற்களின் பொருள், வகைகள் மற்றும் அவற்றின் அமைப்புகளை விளக்குகிறது. இந்த வினா-விடைகள் மூலம், நீங்கள் இந்த பாகத்தில் நுணுக்கமான அறிவை பெற முடியும்.

1) திணையின் உட்பிரிவு __

அ) பால் ஆ) தன்மை
இ) முன்னிலை ஈ) படர்க்கை

விடை: அ) பால்

2) உயர்திணை __ பிரிவுகள்

அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5

விடை: ஆ) 3

3) இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் __

அ) வழு ஆ) வழா நிலை
இ) வழுவமைதி ஈ) பொருள்கோள்

விடை: ஆ) வழா நிலை

4) இலக்கண முறையுன்றிப் பேசுவதும் எழுதுவதும் __

அ) வழு ஆ) வழா நிலை
இ) வழுவமைதி ஈ) பொருள்கோள்

விடை: அ) வழு

5) வழுவின் வகைகள்

அ) 3 ஆ) 5 இ) 7 ஈ) 9

விடை: இ) 7

6) கண்ணகி உண்டான் என்பது

அ) தினை வழு ஆ) பால் வழு
இ) இடவழு ஈ) கால வழு

விடை: ஆ) பால் வழு

7) ‘கண்ணன் எங்கே இருக்கிறார்’ என்ற வினாவிற்குக் கண்ணாழ பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்

அ) திணை வழு ஆ) விடை வழு
இ) வினா வழு ஈ) மரபு வழு

விடை: ஆ) விடை வழு

8) தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுவது

அ) திணை வழு ஆ) விடை வழு
இ) வினா வழு ஈ) மரபு வழு

விடை: ஈ) மரபு வழு

9) ஒரு விரலைக் காட்டிச் சிறியதோ? பெரியதோ? என்று கேட்பது

அ) இட வழு ஆ) கால வழு
இ) வினா வழு ஈ) விடை வழு

விடை: இ) வினா வழு

10) ‘நீ வந்தாய்’ என்பது __

அ) இட வழாநிலை ஆ) கால வழாநிலை இ) திணை வழாநிலை ஈ) பால் வழாநிலை

விடை: அ) இட வழாநிலை

11) ” கண்ணகி உண்டாள்” என்பது __

அ) இட வழாநிலை ஆ) கால வழாநிலை இ) திணை வழாநிலை ஈ) பால் வழாநிலை

விடை: ஈ) பால் வழாநிலை

12) இரு விரல்களைக் காட்டி எது சிறியது? எது பெரியது? என்று கேட்டல்

அ) இட வழாநிலை ஆ) கால வழாநிலை இ) வினா வழாநிலை ஈ) விடை வழாநிலை

விடை: இ) வினா வழாநிலை

13) செழியன் வந்நது என்பது

அ) பால் வழு ஆ) திணை வழு
இ) கால வழு ஈ) இட வழு

விடை: ஆ) திணை வழு

14) இலக்கண முறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக் கொள்ளப்படுபது __

அ) வழு ஆ) வழாநிலை
இ) வழுவமைதி ஈ) பொருள்கோள்

விடை: இ) வழுவமைதி

15) பொருத்துக

1. நீ வந்தேன் – கால வழு
2. நேற்று வருவான் – இட வழு
3. செழியன் வந்தான் – திணை வழாநிலை
4. செழியன் வந்தது – திணை வழு

அ) 4123 ஆ) 2134 இ) 3214 ஈ) 2413

விடை: ஆ) 2134

16) ” என் அம்மை வந்தாள் ” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது __

அ) பால் வழுவமைதி ஆ) இட வழுவமைதி இ) திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி

விடை: இ) திணை வழுவமைதி

17) குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது

அ) பால் வழுவமைதி ஆ) இட வழுவமைதி இ) திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி

விடை: ஈ) கால வழுவமைதி

18) கீழ்க்கண்டவற்றுள் கூற்றினை ஆராய்க

1. “வாடா ராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது திணை வழுவமைதி
2. “இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூற மாட்டான்” என கூறுவது கால வழுவமைதி
3. அவனும் நீயும் அலுவலரைப் பார்க்க ஆயத்தமாகுங்கள் இட வழுவமைதி

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி

விடை: இ) 3 மட்டும் சரி

19) குலசேகர ஆழ்வாள் ‘ வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவiதி ழுறையே

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி
இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி
ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

விடை: இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

20) பொருத்துக

1. நான், யான், நாம் – முன்னிலைப் பெயர்கள்
2. வந்தேன், வந்தோம் – தன்மைப் பெயர்கள்
3. நீ, நீர், நீவீர், நீங்கள் – தன்மை வினைகள்

அ) 123 ஆ) 231 இ) 213 ஈ) 312

விடை: ஆ) 231

21) கத்துங் குயிலோசை – சுற்றே வந்து காதிற் பட வேண்டும்” என்பது

அ) திணை வழுவமைதி ஆ) இட வழுவமைதி இ) கால வழுவமைதி ஈ) மரபு வழுவமைதி

விடை: ஈ) மரபு வழுவமைதி

22) ‘முட்டையிட்டது சேவலா பெட்டையா?’- இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?

அ) பால் வழு ஆ) திணை வழு
இ) வினா வழு ஈ) மரபு வழு

விடை: இ) வினா வழு

23) கீழே தரப் பெறுவனவற்றுள் சரியானவை எவை?

1. நான், யாம் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
2. நான், யபம என்பவை தன்மை பண்மை பெயர்கள்
3. வேற்றுமை உருபேற்கும் போது, ‘யான்’ என்பது ‘என்’ என்றும், ‘நாம்’ என்பது ‘நம்’ என்றும் திரியும்
4. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்

அ) 1, 3, 4 சரியானவை ஆ) 1, 2, 3 சரியானவை இ) 2, 4, 1 சரியானவை ஈ) 4, 3, 1 சரியானவை

விடை: ஆ) 1, 2, 3 சரியானவை

24) பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க

அ) செல்வி பாடினாள் – திணைவழு
ஆ) என் மாமா வந்தது – திணை வழா நிலை இ) நான் வந்தேன் – இட வழு
ஈ) நாய் கத்தும் – மரபு வழு

விடை: ஈ) நாய் கத்தும் – மரபு வழு

25) ‘குயில்கள் கூவியது’ என்பது

அ) பால் வழு ஆ) திணை வழு
இ) எண் வழு ஈ) இட வழு

விடை: இ) எண் வழு

26) நீர், நீவிர், நீங்கள் ஆகியன __ பெயர்கள்

அ) முன்னிலை ஒருமை ஆ) தன்மை ஒருமை இ) முன்னிலைப் பன்மை ஈ) தன்மைப் பன்மை

விடை: இ) முன்னிலைப் பன்மை

27) பொருந்தாததை எடுத்து எழுதுக

அ) அரசன் வந்தது – திணை வழு
ஆ) கபிலன் பேசினாள் – பால் வழு
இ) குயில்கள் கூவியது – எண் வழு
ஈ) கமலா சிரித்தாய் – கால வழு

விடை: ஈ) கமலா சிரித்தாய் – கால வழு

28) விடைக்கேற்ற வினாவைத் தேர்க

“கீழோர் ஆயினும் தாழ உரை”
அ) தாழ உரைக்க வேண்டும் – ஏன்?
ஆ) கீழோர் எப்படிப் இருக்க வேண்டும்?
இ) கீழோரிடம் எப்படிப் பேச வேண்டும்?
ஈ) கீழோர்க்கு நன்மை எது?

விடை: இ) கீழோரிடம் எப்படிப் பேச வேண்டும்?

29) வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க:

அ) வெண்ணீர் தாவாரத்தில் ஓடியது
ஆ) வெந்நீர் தாவாரத்தில் ஓடியது
இ) வெந்நீர் தாழ்வாரத்தில் ஓடியது
ஈ) வெண்ணீர் தாழ்வாரத்தில் ஓடியது

விடை: இ) வெந்நீர் தாழ்வாரத்தில் ஓடியது

30) கீழ்க்காணும் பொருள் உணர்த்தும் உவமை யாது? “பற்றுக் கோடற்ற”

அ) மழை காணாப் பயிர் ஆ) கீரியும் பாம்பும்
இ) அடியற்ற மரம் ஈ) உள்ளங்கை நெல்லிக்கனி

31) வழூஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க

அ) ஒருத்தி புட்டு வித்து சிலவு செய்தாள்
ஆ) ஒருத்தி புட்டு விற்று செலவு செய்தாள்
இ) ஒருத்தி பிட்டு வித்து சிலவு செய்தாள்
ஈ) ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள்

விடை: ஈ) ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள்

32) Whit – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க:

அ) வெண்மையான ஆ) மாசற்ற
இ) சுத்தமான ஈ) மிகச்சிறிய அளவு

விடை: ஈ) மிகச்சிறிய அளவு

33) யான் என்னும் தன்மை ஒருமைப்பெயர் வேற்றுமை உருபேற்கும் போது இவ்வாறு திரியும்

அ) என் ஆ) நான்
இ) நின் ஈ) தான்

விடை: அ) என்

34) பொருந்தா இணையைக் கண்டறிக

அ) நூல் – வரை ஆ) தாள் – வணங்கு
இ) களை – பறி ஈ) நார் – கிழி

விடை: அ) நூல் – வரை

35) வாக்கிய அமைப்பினைக் கண்டு தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்தது அந்தக்காலம் – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

அ) தன்வினை ஆ) செய்தி வாக்கியம்
இ) நேர்க்கூற்று வாக்கியம் ஈ) கலவை வாக்கியம்

விடை: ஆ) செய்தி வாக்கியம்

36) சரியான விடையைத் தேர்வு செய்

அ) இயல், இசை, நாடகம் முதலான முத்தமிழை வளர்த்தல் வேண்டும் ஆ) இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும்
இ) இயல், இசை, நாடகம் முதலிய முத்தமிழை வளர்த்தல் வேண்டும் ஈ) இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழை வளர்த்தல் வேண்டும்

விடை: ஆ) இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழை வளர்த்தல்
வேண்டும்

37) பொருத்துக

1) வண்டு – குனுகும்
2) புறா – அலப்பும்
3) பூனை – முரலும்
4) குரங்கு – சீறும்

அ) 3142 ஆ) 1243 இ) 2431 ஈ) 4321

விடை: அ) 3142

38) பொருத்துக

தொடர் பொருள்

1) ஆகாயத் தாமரை – மிகுதியாகப் பேசுதல்
2) ஆயிரங்காலத்துப் பயிர் – பொய்யழுகை
3) முதலைக் கண்ணீர் – நீண்ட காலத்திற்குரியது
4) கொட்டியளத்தல் – இல்லாத ஒன்று

அ) 4321 ஆ) 4312 இ) 3412 ஈ) 3421

விடை: அ) 4321

39) ” திருத்தப்படாத அச்சுப்படி ” இதற்கு சரியான ஆங்கில சொல்லை காண்க?

அ) Fake news ஆ) Layout
இ) Green proof ஈ) Bullet in

விடை: இ) Green proof   

40) ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக

வாலை – வாளை

1) இளம் பெண் – மீன் வகை
2) மீன் வகை – இளம் பெண்
3) மரவகை – மீன் வகை
4) இளம் பெண் – மர வகை

விடை: 1) இளம் பெண் – மீன் வகை

41) பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு – எதுகை வகையைக் கண்டுபிடி

அ) பொழிப்பு எதுகை ஆ) கூழை எதுகை
இ) மேற்கதுவாய் எதுகை ஈ) கீழ்க்கதுவாய் எதுகை

விடை: ஆ) கூழை எதுகை

42) குழலியும் பாடத் தெரியும் – தொடரில் உள்ள பிழையை நீக்கி சரியான தொடரை தேர்ந்தெடு

அ) குழலிக்குப் பாடத் தெரியும் ஆ) குழலியின் பாடத் தெரியும்
இ) குழலி பாடத் தெரியும் ஈ) குழலியால் பாடத் தெரியும்

விடை: அ) குழலிக்குப் பாடத் தெரியும்

சமூகம் மற்றும் பயிற்சி

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான பொது, வழு, வழாநிலை, மற்றும் வழுவமைதி வினா-விடைகள் உங்கள் தமிழ் அறிவை மேம்படுத்த உதவுகிறது. இவற்றை பழகி, உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை சிறப்பாக மேற்கொள்ளுங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 பொது, வழு, வழாநிலை, வழுவமைதி முக்கிய வினா-விடைகள் க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

PRINTOUT 50 PAISE LOW COST

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version