Home Notes All Exam Notes புணர்ச்சி, வேற்றுமை முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

புணர்ச்சி, வேற்றுமை முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

0
புணர்ச்சி, வேற்றுமை முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
புணர்ச்சி, வேற்றுமை முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

புணர்ச்சி, வேற்றுமை முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான புணர்ச்சி மற்றும் வேற்றுமை பற்றிய முக்கிய வினா-விடைகள் இங்கே. இந்த வினா-விடைகள் உங்கள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான பயிற்சியில் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த புணர்ச்சி மற்றும் வேற்றுமை க்விஸ், உங்கள் தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. நீங்கள் TNPSC தேர்வுக்கு தயாராகும் போது, இந்த வினா-விடைகள் சிறந்த பயிற்சி ஆவனாக இருக்கும்.

1) பின்வருவனவற்றில் ‘ஈறுபோதல்’ , ‘இணமிகல்’ என்னும் விதிகளின்படி புணராதது

அ) நெடுங்கடல் ஆ) செங்கடல்
இ) கருங்கடல் ஈ) கருங்குயில்

விடை: ஆ) செங்கடல்

2) தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க

அ) வெண்மதி ஸ்ரீ வெண் + மதி

ஆ) வெந்துவர்ந்து ஸ்ரீ வெந்து + உவர்ந்து
இ) காடிதனை ஸ்ரீ காடு + இதனை
ஈ) கருமுகில் ஸ்ரீ கருமை + ழுகில்

விடை: அ) வெண்மதி ஸ்ரீ வெண் + மதி

3) பாசிலை – பிரித்து எழுதுக

அ) பாசு + இலை ஆ) பைசு + இலை
இ) பசுமை + இலை ஈ) பாசி + இலை

விடை: இ) பசுமை + இலை

4) ஒரு பெயர்ச் சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது

அ) இரண்டாம் வேற்றுமை ஆ) மூன்றாம் வேற்றுமை
இ) நான்காம் வேற்றுமை ஈ) ஐந்தாம் வேற்றுமை

விடை: அ) இரண்டாம் வேற்றுமை

5) வேறில்லை – பிரித்து எழுதுக

அ) வே + இல்லை ஆ) வேற்று + இல்லை
இ) வேறு + இல்லை ஈ) வேற்றி + இல்லை

விடை: இ) வேறு + இல்லை

6) குன்றேறி என்பதன் இலக்கணக் குறிப்பு

அ) ஏழாம் வேற்றுமைத் தொகை ஆ) ஆறாம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை

விடை: அ) ஏழாம் வேற்றுமைத் தொகை

7) “கார்குலாம்” – எனும் சொல் எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?

அ) ஏழாம் வேற்றுமைத் தொகை ஆ) ஆறாம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை

விடை: ஆ) ஆறாம் வேற்றுமைத் தொகை

8) ” சான்றாண்மை” – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு

அ) சா + ன்றா + ண்மை ஆ) சான் + றாண் + மை
இ) சான் + றா + ண்மை ஈ) சான + றாண்மை

விடை: ஆ) சான் + றாண் + மை

9) நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?

அ) கொண்டு, உடன் ஆ) பொருட்டு, நிமித்தம்
இ) இருந்தது, நின்று ஈ) உடைய

விடை: ஆ) பொருட்டு, நிமித்தம்

10) வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச் சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?

அ) நான்காம் வேற்றுமை ஆ) இரண்டாம் வேற்றுமை
இ) முதல் வேற்றுமை ஈ) ஆறாம் வேற்றுமை

விடை: இ) முதல் வேற்றுமை

11) பின்வருவனவற்றுள் பண்புப் பெயர்ப் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?

அ) தன்னொற்றிரட்டல் ஆ) அடியகரம் ஐயாதல்
இ) மவ்வீறு ஒற்றிழந்து உயிரீறு ஒப்பவும் ஈ) இடையுகரம் இய்யாதல்

விடை: இ) மவ்வீறு ஒற்றிழந்து உயிரீறு ஒப்பவும்

12) பெருமை களிறு பெருங்களிறு புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு

அ) ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல் ஆ) ஈநுபோதல், அடியகரம் ஐயாதல்
இ) ஈறுபோதல், ஆதி நீடல், முன்நின்ற மெய் திரிதல்
ஈ) ஈறு போதல், இனமிகல்

விடை: ஈ) ஈறு போதல், இனமிகல்

13) பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை _

அ) வேற்றுமை ஆ) பொருள்கோள்
இ) பெயரெச்சம் ஈ) வினையெச்சம்

விடை: அ) வேற்றுமை

14) சில இடங்களில் உருபுகளுக்குப் பதிலாக முழுச் சொற்களே வேற்றுமை உருபாக வருவது

அ) எழுவாய் ஆ) சொல்லுருபு
இ) பயனிலை ஈ) வேற்றுமைத் தொகை

விடை: ஆ) சொல்லுருபு

15) ‘ஓவியர் தூரிகை கொண்டு ஓவியம் தீட்டினார்’ – இதில் சொல்லுருபு

அ) ஓவியர் ஆ) தூரிகை
இ) கொண்டு ஈ) தீட்டினார்

விடை: இ) கொண்டு

16) எழுவாய் வேற்றுமை என அழைக்கப்படுவது?

அ) முதல்வேற்றுமை ஆ) இரண்டாம் வேற்றுமை
இ) மூன்றாம் வேற்றுமை ஈ) நான்காம் வேற்றுமை

விடை: அ) முதல்வேற்றுமை

17) ‘அறத்தான் வருவதே இன்பம்’ – இத்தொடரில் _ வேற்றுமை பயின்று வந்துள்ளது

அ) இரண்டாம் ஆ) மூன்றாம்
இ) ஆறாம் ஈ) ஏழாம்

விடை: ஆ) மூன்றாம்

18) எட்டாம் வேற்றுமை _ வேற்றுமை என்று அழைக்கப்ப’டுகிறது

அ) எழுவாய் ஆ) செயப்படு பொருள்
இ) விளி ஈ) பயனிலை

விடை: இ) விளி

19) உடனிகழ்ச்சிப் பொருளில் _ வேற்றுமை வரும்

அ) மூன்றாம் ஆ) நான்காம்
இ) ஐந்தாம் ஈ) ஆறாம்

விடை: அ) மூன்றாம்

20) கிழமைப் பொருளில் வரும் வேற்றுமை _

அ) மூன்றாம் ஆ) நான்காம்
இ) ஐந்தாம் ஈ) ஆறாம்

விடை: ஈ) ஆறாம்

21) பின்வருவனவற்றுள் தவறான கூற்றினைத் தேர்ந்தெடு

அ) அண்ணன் என்பதை அண்ணா என்று அழைப்பது எட்டாம் வேற்றுமை ஆ) ஆறாம் வேற்றுமைக்கு உரிய உருபு கண்
இ) உரிமைப் பொருளைக் கிழமைப் பொருள் என்றும் கூறுவர் ஈ) நான்காம் வேற்றுமைக்கு உரிய உருபு ‘கு’ என்பதாகும்

விடை: ஆ) ஆறாம் வேற்றுமைக்கு உரிய உருபு கண்

22) பின்வருவனவற்றுள் நான்காம் வேற்றுமையினைத் தேர்ந்தெடு

அ) தலையின் இழிந்த மயிர் ஆ) பாம்பின் நிறம் ஒரு குட்டி
இ) கவிதைக்கு அழகு கற்பனை
ஈ) தமிழ் நாட்டின் கிழக்கு வங்கக் கடல்

விடை: இ) கவிதைக்கு அழகு கற்பனை

23) கீழ்க்கானும் கூற்றை ஆராய்க
1. நான்காம் வேற்றுமை உருபுடன் கூடுதலாக ஆக என்னும் ஓசை சேர்ந்து வருவதும் உண்டு
2. இல் என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையிலும் ஏமாம் வேற்றுமையிலும் உண்டு
3. இல் என்னும் உருபு நீங்கல் பொருளில் வந்தால் ஏழாம் வேற்றுமை என்றும், இடப்பொருளில் வந்தால் ஐந்தாம் வேற்றுமை என்றும் கொள்ள வேண்டும்

அ) 1 மட்டும் சரி ஆ) 1ம் 2ம் சரி
இ) 1ம் 3ம் சரி ஈ) அனைத்தும் சரி

விடை: ஆ) 1ம் 2ம் சரி

24) பெரியார் மூட நம்பிக்கைகளை ஒழித்தார்- இத்தொடரில் _ பொருளைக் குறிக்கிறது

அ) நீத்தல் ஆ) ஒத்தல்
இ) அழித்தல் ஈ) ஆக்கல்

விடை: இ) அழித்தல்

25) காமராசர் பதவியைத் துறந்தார் – இத்தொடர் _ பொருளைக் குறிக்கிறது

அ) நீத்தல் ஆ) ஒத்தல்
இ) அழித்தல் ஈ) ஆக்கல்

விடை: அ) நீத்தல்

26) செயப்படுபொருள் வேற்றுமை என அமைக்கப்படுவது

அ) முதல்வேற்றுமை ஆ) இரண்டாம் வேற்றுமை
இ) மூன்றாம் வேற்றுமை ஈ) நான்காம் வேற்றுமை

விடை: ஆ) இரண்டாம் வேற்றுமை

27) பொருத்துக
1. பாவை வந்தாள் – இரண்டாம் வேற்றுமை
2. கோவலன் மதுரையை அடைந்தான் – முதல் வேற்றுமை
3. தாயொடு குழந்தை சென்றது – ழூன்றாம் வேற்றுமை
4. கபிலருக்கு நண்பர் பரணர் – நான்காம் வேற்றுமை

அ) 1234 ஆ) 2143 இ) 2134 ஈ) 4123

விடை: இ) 2134

28) கீழ்க்கண்ட கூற்றினை ஆராய்க
1. சேக்கிழாரால் பெரிய புராணம் இயற்றப்பட்டது – இயற்றுதல் கருத்தா
2. கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது – ஏவுதல் கருத்தா

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு

விடை: இ) இரண்டும் சரி

29) தலையின் இழிந்த மயிர் – என்னும் தொடர் _ பொருளைக் குறிக்கிறது

அ) நீங்கல் ஆ) ஒப்பு
இ) ஏது ஈ) முறை

விடை: அ) நீங்கல்

30) செங்குட்டுவனுக்குத் தம்பி இளங்கோ – இத்தொடர் _ பொருளைக் குறிக்கிறது

அ) பகை ஆ) கொடை
இ) தகுதி ஈ) முறை

விடை: ஈ) முறை

31) வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது _ புணர்ச்சி

அ) உயிரீற்று ஆ) மெய்யீற்று
இ) உயிர்முதல் ஈ) மெய்முதல்

விடை: இ) உயிர்முதல்

32) பொருத்துக
1) உயிரீற்றுப் புணர்ச்சி – பொன்னுண்டு
2) மெய்யீற்றுப் புணர்ச்சி – பொற்சிலை
3) உயிர் முதல் புணர்ச்சி – சிலையழகு
4) மெய் முதல் புணர்ச்சி – மண்ணழகு

அ) 3412 ஆ) 2413 இ) 4123 ஈ) 3124

விடை: அ) 3412

33) விகாரப் புணர்ச்சியின் வகைகள்

அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 6

விடை: அ) 3

34) பின்வரும் கூற்றினை ஆராய்க
1) தமிழ்த்தாய் என்பது தோன்றல் விகாரம்
2) விற்கொடி என்பது திரிதல் விகாரம்
3) பொற்சிலை என்பது கெடுதல் விகாரம்
4) மனமகிழ்ச்சி என்பது திரிதல் விகாரம்

அ) 1 மட்டும் சரி ஆ) 1ம் 2ம் சரி
இ) 2ம் 3ம் சரி ஈ) 3ம் 4ம் சரி

விடை: ஆ) 1ம் 2ம் சரி

35) ‘ பாலாடை’ இச்சொல்லுக்குரிய புணர்ச்சி

அ) இயல்பு ஆ) தோன்றல்
இ) திரிதல் ஈ) கெடுதல்

விடை: இ) திரிதல்

36) பொருத்துக
1) மட்பாண்டம் – தோன்றல் விகாரம்
2) மரவேர் – இயல்பு புணர்ச்சி
3) மணிமுடி – கெடுதல் விகாரம்
4) கடைத்தெரு – திரிதல் விகாரம்

அ) 4321 ஆ) 1423 இ) 2143 ஈ) 1234

விடை: அ) 4321

37) பொருத்துக
1) உயிர் முன் உயிர் – மணியடி
2) உயிர் முன் மெய் – ஆலிலை
3) மெய்ம்முன் உயிர் – பனிக்கன்று
4) மெய்ம்முன் மெய் – மரக்கன்று

அ) 4321 ஆ) 1324 இ) 2134 ஈ) 3124

விடை: ஆ) 1324

38) புணர்ச்சியின் வகைகள் _

அ) 2 ஆ) 3 இ) 4 ஈ) 5

விடை: அ) 2

39) புணர்ச்சியின் போது ஏதேனும் மாற்றம் நிகழ்வது _

அ) இயல்பு புணர்ச்சி ஆ) விகாரப் புணர்ச்சி
இ) உடம்படுமெய் புணர்ச்சி ஈ) குற்றியலுகரப் புணர்ச்சி

விடை: ஆ) விகாரப் புணர்ச்சி

40) ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்காக அங்கு ஒரு மெய் தோன்றுவது _

அ) இயல்பு புணர்ச்சி ஆ) விகாரப் புணர்ச்சி
இ) உடம்படுமெய் புணர்ச்சி ஈ) குற்றியலுகரப் புணர்ச்சி

விடை: இ) உடம்படுமெய் புணர்ச்சி

41) உடம்படுமெய் புணர்ச்சி அல்லாததைத் தேர்ந்தெடு

அ) தீயெரி ஆ) மணியழகு
இ) மணியடி ஈ) ஓடையோரம்

விடை: இ) மணியடி

42) பின்வருவனவற்றுள் பண்புப் பெயர்ப் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?

அ) தன்னொற்றிரட்டல் ஆ) அடியகரம் ஐயாதல்
இ) மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
ஈ) இடையுகரம் இய்யாதல்

விடை: இ) மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்

43) பெருமை + களிறு ஸ்ரீ பெருங்களிறு புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?

அ) ஈறுபோதல், இடையுகரம் இய்யாதல்
ஆ) ஈறுபோதல், அடியகரம் ஐயாதல்
இ) ஈறுபோதல், ஆதிநீடல், மூன்நின்ற மெய் திரிதல் ஈ) ஈறுபோதல், இனமிகல்

விடை: ஈ) ஈறுபோதல், இனமிகல்

44) தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க

அ) பைங்கூழ் ஸ்ரீ பசுமை + கூழ் ஆ) சிற்றோடை ஸ்ரீ சிறுமை + ஓடை
இ) சேதாம்பல் ஸ்ரீ சேது + ஆம்பல் ஈ) மரவடி ஸ்ரீ மரம் + அடி

விடை: இ) சேதாம்பல் ஸ்ரீ சேது + ஆம்பல்

45) பிரித்தெழுதுக: கழற்கன்பு

அ) கழல் + அன்பு ஆ) கழற்கு + அன்பு
இ) கழள் + அன்பு ஈ) கழன் + அன்பு

விடை: ஆ) கழற்கு + அன்பு

46 பிரித்தெழுதுக: பிணிநோயுற்றோர்

அ) பிணிநோய் + உற்றார் ஆ) பிணி + நோய் + உற்றோர்
இ) பிணி + நோயுற்று + ஓர் ஈ) பிணி + நோயுற்றோர்

விடை: ஆ) பிணி + நோய் + உற்றோர்

47) நாற்கரணம் – சரியாக பிரிக்கப்பட்டிருப்பது எது?

அ) நான்கு + அரணம் ஆ) நான் + கரணம்
இ) நாண் + கரணம் ஈ) நான்கு + கரணம்

விடை: ஈ) நான்கு + கரணம்

48) பிரித்தெழுதுக: வெவ்விருப்பாணி

அ) வெம்+இரும்பு+ ஆணி ஆ) வெம்+இருப்பு+ஆணி
இ) வெம்மை+இரும்பு+ ஆணி ஈ) வெம்மை+ இரும்பு+ஆணி

விடை: இ) வெம்மை+இரும்பு+ ஆணி

49) பிரித்தெழுதுக: ‘வாயினீர்

அ) வாய்+நீர் ஆ) வாய்ன்+நீர்
இ) வாயின்+நீர் ஈ) வா+நீர்

விடை: இ) வாயின்+நீர்

50) பெருங்காலம் என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளைத் தேர்வு செய்

அ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல் ஆ) ஈறுபோதல், இனமிகல் இ) ஈறுபோதல், ஆதிநீடல் ஈ) ஈறுபோதல், இனையவும்

விடை: ஆ) ஈறுபோதல், இனமிகல்

51) “செந்தமிழ் – செம்மை தமிழ்” என்ற சொல்லிற்குரிய புணர்ச்சி விதி

அ) ஈறுபோதல், முன்நின்ற மெய் திரிதல்
ஆ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
இ) ஈறுபோதல், இனமிகல்
ஈ) ஈறுபோதல், ஈதிநீடல்

விடை: அ) ஈறுபோதல், முன்நின்ற மெய் திரிதல்

52) கருங்கடல் என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளைத் தேர்வு செய்க

அ) ஈறுபோதல், முன்நின்ற மெய் திரிதல்
ஆ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
இ) ஈறுபோதல், இனமிகல்
ஈ) ஈறுபோதல், ஈதிநீடல்

விடை: இ) ஈறுபோதல், இனமிகல்

53) ‘ஈறு போதல்’ ‘அடிஅகரம் ‘ஐ’ ஆதல்’ ‘இனையவும்’ ‘இனமிகல்’ என்னும் விதிப்படி புணர்ச்சி பெற்ற சொல்

அ) பைந்தமிழ் ஆ) நெட்டிலை
இ) மூதூர் ஈ) பெரியன்

விடை: அ) பைந்தமிழ்

54) ‘ஈறு போதல்’, ‘முன் நின்ற மெய்திரிதல்’ என்ற விதிகளின் படி புணர்ந்துள்ள சொல்

அ) நெட்டிலை ஆ) செந்தமிழ்
இ) பசுந்தளிர் ஈ) கருங்கடல்

விடை: ஆ) செந்தமிழ்

55) ‘ஈறு போதல்’, ‘இனமிகல்’ என்ற விதிகளின் படி புணர்ந்துள்ள சொல்

அ) நெட்டிலை ஆ) செந்தமிழ்
இ) பசுந்தளிர் ஈ) கருங்கடல்

விடை: ஈ) கருங்கடல்

56) ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’, ‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்ற விதிகளின் படி புணர்ந்துள்ள சொல்

அ) வாயொலி ஆ) பூக்கொடி
இ) கல்லதர் ஈ) ஆற்றுநீர்

விடை: இ) கல்லதர்

57) ‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்’, ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என்ற விதிகளின் படி புணர்ந்துள்ள சொல்

அ) திரைப்படம் ஆ) வாயொலி
இ) கல்லதர் ஈ) மரக்கலம்

விடை: ஈ) மரக்கலம்

58) ‘வரவு+அறிந்தான் – வரவறிந்தான்’ என்ற சொல்லில் வந்துள்ள புணர்ச்சி விதிகளைத் தேர்ந்தெடு
1) முற்றும் அற்று ஒரோ வழி
2) பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும்
3) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
4) உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

அ) 1ம் 2ம் சரி ஆ) 1ம் 3ம் சரி
இ) 1ம் 4ம் சரி ஈ) 1,2,4 சரி

விடை: இ) 1ம் 4ம் சரி

59) ‘பூ+கொடி – பூங்கொடி’ என்ற சொல்லின் புணர்ச்சி விதியினைத் தேர்ந்தெடு

அ) முற்றும் அற்று ஒரோ வழி
ஆ) பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும்
இ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்
ஈ) உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

விடை: ஆ) பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும்

60) ‘நெடுமை இலை – நெட்டிலை’ என்ற சொல்லில் வந்துள்ள புணர்ச்சி விதிகளைத் தேர்ந்தெடு:
1) ஈறு போதல் 2) தன்னொற்றிரட்டல்
3) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
4) உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

அ) 1ம் 2ம் சரி ஆ) 1,2,3 சரி
இ) 1,3,4 சரி ஈ) அனைத்தும் சரி

விடை: ஈ) அனைத்தும் சரி

சமூகம் மற்றும் பயிற்சி

இந்த புணர்ச்சி மற்றும் வேற்றுமை வினா-விடைகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பழகி, உங்கள் தமிழ் அறிவை மேம்படுத்துங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 புணர்ச்சி, வேற்றுமை முக்கிய வினா-விடைகள் க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

PRINTOUT 50 PAISE LOW COST

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version