Home Notes All Exam Notes யாப்பு இலக்கணம் முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

யாப்பு இலக்கணம் முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

0
யாப்பு இலக்கணம் முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
யாப்பு இலக்கணம் முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

யாப்பு இலக்கணம் முக்கிய வினா – விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான யாப்பு இலக்கணம் குறித்த முக்கிய வினா-விடைகளைத் தேடுகிறீர்களா? இங்கு, யாப்பு இலக்கணம் பற்றிய அனைத்து முக்கிய வினாக்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

இதில், யாப்பு இலக்கணம் சார்ந்த முக்கிய வினா-விடைகள் உள்ளன, இது உங்கள் TNPSC தேர்வு மற்றும் அரசு தேர்வுகள் முன்னேற்றத்திற்கு உதவும்.

இதில் உள்ள சிறப்பம்சங்கள்:

  • 📘 யாப்பு இலக்கணம் தொடர்பான முக்கிய வினா-விடைகள்
  • ✍️ எளிமையான விளக்கங்களுடன்
  • 🎯 TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான பயிற்சி
  • 🏆 தேர்வு வெற்றிக்கு உதவிய பயிற்சிகள்

1. மரபுக் கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் ­­__ இலக்கணம்

அ) எழுத்து ஆ) சொல் இ) பொருள் ஈ) யாப்பு

விடை: ஈ) யாப்பு

2. யாப்பு இலக்கணப்படி செய்யுளுக்குரிய உறுப்புகள் ­­__

அ) 4 ஆ) 6 இ) 8 ஈ) 10

விடை: ஆ) 6

3. யாப்பு இலக்கணத்தின்படி எழுத்துள் வகை ­­__

அ) 2 ஆ) 3 இ)4 ஈ) 5

விடை: ஆ) 3

4. எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது?

அ) அசை ஆ) சீர் இ) தளை ஈ) அடி

விடை: அ) அசை

5. தவறான கூற்றினைத் தேர்ந்தெடு:

அ) குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒன்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.
ஆ) நேரசைக்கான எடுத்து காட்டு – கட, கடா
இ) இரண்டு குறில் எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.
ஈ) நிரையசைக்கான எடுத்து காட்டு – கடல், கடாம்

விடை: ஆ) நேரசைக்கான எடுத்து காட்டு – கட, கடா

6. ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது __

அ) தளை ஆ) அடி இ) தொடை ஈ) சீர்

விடை: ஈ) சீர்

7. தவறான கூற்றைத் தேர்ந்தெடு:

அ) சீர் நான்கு வகைப்படும்.
ஆ) சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்;;
இ) தளை எட்டு வகைப்படும்;
ஈ) இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது அடி ஆகும்.

விடை: இ) தளை எட்டு வகைப்படும்;.

8. செய்யுளில் ஓசை இன்பமும் பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே __ ஆதும்.

அ) அசை ஆ) சீர் இ) தளை ஈ) தொடை

விடை: ஈ) தொடை

9. பொருத்துக
1) அசை – 4
2) சீர் – 2
3) தளை – 7
4) அடி – 8
5) தொடை – 5

அ) 12345 ஆ) 21354 இ) 41235 ஈ) 51234

விடை: ஆ) 21354

10. கீழ்க்காணும் கூற்றினை ஆராய்க:

1) முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை
2) இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை
3) இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது இயைபு
அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி

விடை: ஈ) அனைத்தும் சரி

11. ஒரு பாடலில் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல் சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது

அ) இயைபு ஆ) அந்தாதி
இ) சீர் ஈ) தளை

விடை: ஆ) அந்தாதி

12. பாவின் வகைகள்

அ) 4 ஆ)6 இ) 7 ஈ) 8

விடை: அ) 4

13. பொருத்துக
1) வெண்பா – துள்ளல் ஓசை
2) கலிப்பா – செப்பல் ஓசை
3) வஞ்சிப்பா – அகவல் ஓசை
4) ஆசிரியப்பா – தூங்கல் ஓசை

அ) 2143 ஆ)1243 இ) 4123 ஈ) 3124

விடை: அ) 2143

14. சங்க இலக்கியங்களில் பல __ பாவால் அமைந்துள்ளது

அ) வெண்பா ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா ஈ) வஞ்சிப்பா

விடை: ஆ) ஆசிரியப்பா

15. ‘இயற்சீர்’, ‘ஆசிரிய உரிச்சீர்’ எனும் வேறு பெயர்

அ) ஓரசைச்சீர் ஆ) ஈரசைச்சீர்
இ) மூவசைச்சீர் ஈ) நாலசைச்சீர்

விடை: ஆ) ஈரசைச்சீர்

16.பொருத்துக
1) நேர் – நாள்
2) நேர்பு – மலர்
3) நிரை – காசு
4) நிரைபு – பிறப்பு

அ) 1324 ஆ) 2134 இ) 4123 ஈ) 3124

விடை: அ) 1324

17. பின்வரும் கூற்றினை ஆராய்க
1) நிரை நிரை என்பது கூவிளம்
2) நேர் நிரை என்பது கருவிளம்
3) நேர் நேர் என்பது தேமா
4) நிரை நேர் என்பது புளிமா

அ) 1ம் 2ம் சரி ஆ) 2ம் 3ம் சரி
இ) 3ம் 4ம் சரி ஈ) அனைத்தும் சரி

விடை: இ) 3ம் 4ம் சரி

18. பொருத்துக
1) நேர் நிரை நிரை – புளிமாங்கனி
2) நிரை நேர் நிரை – கூவிளங்கனி
3) நேர் நேர் நேர் – கருவிளங்காய்
4) நிரை நிரை நேர் – தேமாங்காய்


அ) 3412 ஆ) 2143 இ) 4213 ஈ) 1243

விடை: ஆ) 2143

19. பொருத்துக
1) இரண்டு சீர் – குறளடி
2) மூன்று சீர் – அளவடி
3) நான்கு சீர் – கழிநெடிலடி
4) ஐந்து சீர் – சிந்தடி
5) ஆறு சீர் (ழச) அதற்கு மேற்பட்ட சீர் – நெடிலடி

அ) 12345 ஆ)14253 இ) 51243 ஈ) 41253

விடை: ஆ)14253

20. பின்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்ந்தெடு:

அ) மா முன் நேர் – நேரொன்றாசிரியத் தளை ஆ) விளம் முன் நேர் – நிரையொன்றாசிரியத் தளை
இ) காய் முன் நேர் என்பது – கலித்தளை ஈ) மா முன் நிரை – இயற்சீர் வெண்டளை

விடை: இ) காய் முன் நேர் என்பது – கலித்தளை

21. பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது __

அ) அசை ஆ) தளை இ) அடி ஈ) தொடை

விடை: ஈ) தொடை

22. கூற்றினை ஆராய்க’
1) மோனை, எதுகை, இயைபு, அளபெடை, முரண், இரட்டை, அந்தாதி, செந்தொடை என எட்டு வகைகளாகத் தொடை அமைகிறது.
2) அடிகள் தோறும் இறுதி எழுத்தோ அசையோ, சீரோ, அடியோ ஒன்றியமைவது இயைபுத் தொடை

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு

விடை: இ) இரண்டும் சரி

23. திருக்குறளும், நாலடியாரும் __ பாவில் அமைந்துள்ளன.

அ) வெண்பா ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா ஈ) வஞ்சிப்பா

விடை: அ) வெண்பா

24. செய்யுளில் இடையிடடையே உயர்ந்து வருவது __ ஓசை

அ) செப்பல் ஆ) அகவல்
இ) தூங்கல் ஈ) துள்ளல்

விடை: ஈ) துள்ளல்

25. ஆசிரியப்பாவின் வகைகள் __

அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 6

விடை: ஆ) 4

26. வெண்பாவின் வகைகள் __

அ) 3 ஆ) 4 இ) 5 ஈ) 6

விடை: இ) 5

27. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது __

அ) வெண்பா ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா ஈ) வஞ்சிப்பா

விடை: ஆ) ஆசிரியப்பா

28. ஈற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும் பாவகை __

அ) வெண்பா ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா ஈ) வஞ்சிப்பா

விடை: அ) வெண்பா

29. 3 அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும் பாவகை

அ) வெண்பா ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா ஈ) வஞ்சிப்பா

விடை: ஆ) ஆசிரியப்பா

30. எந்த பாவினுடைய ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிதல் சிறப்பு

அ) வெண்பா ஆ) ஆசிரியப்பா
இ) கலிப்பா ஈ) வஞ்சிப்பா

விடை: ஆ) ஆசிரியப்பா

31. சீர் தோறுந் துள்ளாது தூங்கி வரும் ஓசை

அ) செப்பலோசை ஆ) அகவலோசை
இ) துள்ளலோசை ஈ) தூங்கலோசை

விடை: உங்களுக்கு விடை தெரிந்தால் கமெண்ட் பண்ணவும்

32. பொருத்துக:
1) இருவர் உரையாடுவது போன்ற ஓசை – துள்ளலோசை
2) ஒருவர் பேசுதல் போன்ற சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை – அகவலோசை
3) கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிக்கும் ஓசை – செப்பலோசை
4) தாழ்ந்தே வருவது – தூங்கலோசை

அ) 12134 ஆ) 3214 இ) 4123 ஈ) 3124

விடை: ஆ) 3214

33. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் __

அ) அகவற்பா ஆ) வெண்பா
இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா

விடை: அ) அகவற்பா

34. பாடலிள் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாது அமைவது __

அ) நிலைமண்டல ஆசிரியப்பா ஆ) அடிமறிமண்டல ஆசிரியப்பா
இ) இணைக்குறள் ஆசிரியப்பா ஈ) நேரிசை ஆசிரியப்பா

விடை: ஆ) அடிமறிமண்டல ஆசிரியப்பா

35. இறுதி அடிக்கு முந்தைய அடி ழூன்று சீர்களைப் பெற்று வருவது __

அ) நிலைமண்டல ஆசிரியப்பா ஆ) அடிமறிமண்டல ஆசிரியப்பா
இ) இணைக்குறள் ஆசிரியப்பா ஈ) நேரிசை ஆசிரியப்பா

விடை: ஈ) நேரிசை ஆசிரியப்பா

36. எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வருவது __

அ) நிலைமண்டல ஆசிரியப்பா ஆ) அடிமறிமண்டல ஆசிரியப்பா
இ) இணைக்குறள் ஆசிரியப்பா ஈ) நேரிசை ஆசிரியப்பா

விடை: அ) நிலைமண்டல ஆசிரியப்பா

37. முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களைப் பெற்று இடையடிகள் குறளடியாகவும், சிந்தடியாகவும் வருவது __

அ) நிலைமண்டல ஆசிரியப்பா ஆ) அடிமறிமண்டல ஆசிரியப்பா
இ) இணைக்குறள் ஆசிரியப்பா ஈ) நேரிசை ஆசிரியப்பா

விடை: இ) இணைக்குறள் ஆசிரியப்பா

38. “ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை” – இப்பாடலடியில் பின்வருவனவற்றுள் எது தவறானது?

அ) சீர்மோனை அமைந்துள்ளது ஆ) சீர்முரண் அமைந்துள்ளது
இ) சீர் இயைபு அமைந்துள்ளது
ஈ) கீழ்க்கதுவாய் மோனை அமைந்துள்ளது

விடை: ஆ) சீர்முரண் அமைந்துள்ளது

39. கனிமுன் நேர் வருவதும் கனிமுன் நிரை வருவதும்

அ) கலித்தளை ஆ) வஞ்சித்தளை
இ) இயற்சீர் வெண்டளை ஈ) வெண்சீர் வெண்டளை

விடை: ஆ) வஞ்சித்தளை

40. தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் – இக்குறளில் அமைந்துள்ள தக்கார் – எச்சத்தால் என்ற இணை

அ) அடி முரண் ஆ) அடி மோனை
இ) அடி இயைபு ஈ) இன எதுகை

விடை: ஈ) இன எதுகை

41. ஈற.றியலடி ;சிந்தடி’ பெற்று வரும் பாவகை

அ) நேரிசைச் சிந்தியல் வெண்பா
ஆ) இன்னிசைச் சிந்தியல் வெண்பா
இ) நிலை மண்டல ஆசிரியப்பா
ஈ) நேரிசை ஆசிரியப்பா

விடை: ஈ) நேரிசை ஆசிரியப்பா

42. ‘எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்’ இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு

அ) கீழ்க்கதுவாய் ஆ) இணை
இ) கூழை ஈ) மேற்கதுவாய்

விடை: அ) கீழ்க்கதுவாய்

43. ” அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்” – இவ்வடியில் அமைந்துள்ள மோனை வகை

அ) மேற்கதுவாய் மோனை ஆ) கீழ்க்கதுவாய் மோனை
இ) கூழை மோனை ஈ) பொழிப்பு மோனை

விடை: அ) மேற்கதுவாய் மோனை

44. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! – இவ்வடியில் பயின்று வரும் நயங்கள்

அ) மோனை, எதுகை, முரண் ஆ) மோனை, முரண், அந்தாதி
இ) மோனை, எதுகை, இயைபு ஈ) இயைபு, அளபெடை,மோனை

விடை: இ) மோனை, எதுகை, இயைபு

45. அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது

1) குறளடி 2) சிந்தடி 3) நெடிலடி 4) நேரடி
அ) 3 ஆ) 4 இ) 1 ஈ) 2

விடை: ஆ) 4

46. தளையின் வகையறிக:
காய் முன் நிரை வருவது –
எத்தனை வகையின் பாற்படும் என கண்டறிக

அ) வெண்சீர் வெண்டளை ஆ) ஒன்றிய வஞ்சித்தளை
இ) ஒன்றாத வஞ்சித்தளை ஈ) கலித்தளை

விடை: ஈ) கலித்தளை

  1. விடை: ஈ) யாப்பு
  2. விடை: ஆ) 6
  3. விடை: ஆ) 3
  4. விடை: அ) அசை
  5. விடை: ஆ) நேரசைக்கான எடுத்து காட்டு – கட, கடா
  6. விடை: ஈ) சீர்
  7. விடை: இ) தளை எட்டு வகைப்படும்;.
  8. விடை: ஈ) தொடை
  9. விடை: ஆ) 21354
  10. விடை: ஈ) அனைத்தும் சரி
  11. விடை: ஆ) அந்தாதி
  12. விடை: அ) 4
  13. விடை: அ) 2143
  14. விடை: ஆ) ஆசிரியப்பா
  15. விடை: ஆ) ஈரசைச்சீர்
  16. விடை: அ) 1324
  17. விடை: இ) 3ம் 4ம் சரி
  18. விடை: ஆ) 2143
  19. விடை: ஆ)14253
  20. விடை: இ) காய் முன் நேர் என்பது – கலித்தளை
  21. விடை: ஈ) தொடை
  22. விடை: இ) இரண்டும் சரி
  23. விடை: அ) வெண்பா
  24. விடை: ஈ) துள்ளல்
  25. விடை: ஆ) 4
  26. விடை: இ) 5
  27. விடை: ஆ) ஆசிரியப்பா
  28. விடை: அ) வெண்பா
  29. விடை: ஆ) ஆசிரியப்பா
  30. விடை: ஆ) ஆசிரியப்பா
  31. உங்களுக்கு விடை தெரிந்தால் கமெண்ட் பண்ணவும்
  32. விடை: ஆ) 3214
  33. விடை: அ) அகவற்பா
  34. விடை: ஆ) அடிமறிமண்டல ஆசிரியப்பா
  35. விடை: ஈ) நேரிசை ஆசிரியப்பா
  36. விடை: அ) நிலைமண்டல ஆசிரியப்பா
  37. விடை: இ) இணைக்குறள் ஆசிரியப்பா
  38. விடை: ஆ) சீர்முரண் அமைந்துள்ளது
  39. விடை: ஆ) வஞ்சித்தளை
  40. விடை: ஈ) இன எதுகை
  41. விடை: ஈ) நேரிசை ஆசிரியப்பா
  42. விடை: அ) கீழ்க்கதுவாய்
  43. விடை: அ) மேற்கதுவாய் மோனை
  44. விடை: இ) மோனை, எதுகை, இயைபு
  45. விடை: ஆ) 4
  46. விடை: ஈ) கலித்தளை

🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 யாப்பு இலக்கணம் முக்கிய வினா-விடைகள் PDF பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

tnpsc tamil mixer education notes

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version