Home Blog தொகைநிலைத் தொடர் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

தொகைநிலைத் தொடர் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

0
தொகைநிலைத் தொடர் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
தொகைநிலைத் தொடர் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

தொகைநிலைத் தொடர் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான தொகைநிலைத் தொடர் பற்றிய முக்கிய வினா-விடைகள் இங்கே! இந்த வினா-விடைகள் உங்கள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான தமிழ் இலக்கணம் பகுதிக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும்.

தொகைநிலைத் தொடர் என்பது சொற்களின் ஒருங்கிணைப்பில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இது உங்களுக்கு தேர்வுகளில் வெற்றி பெற உதவலாம். இந்த வினா-விடைகள் மூலம் நீங்கள் உங்கள் தொகைநிலைத் தொடர் அறிவை மேம்படுத்த முடியும்.

1) தொகைநிலைத் தொடரின் வகைகள்

அ) 4 ஆ) 6 இ) 8 ஈ) 10

விடை: ஆ) 6

2) இரு சொற்களில் இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி வருவது _

அ) புணர்ச்சி ஆ) தொகைநிலைத்தொடர் இ) தொகாநிலைத்தொடர் ஈ) வேற்றுமை

விடை: ஆ) தொகைநிலைத்தொடர்

3) தொகைநிலைத்தொடரில் அடங்காததைத் தேர்ந்தெடு

அ) வேற்றுமைத் தொகை ஆ) உவமைத்தொகை
இ) இடைச்சொல் தொடர் ஈ) அன்மொழித்தொகை

விடை: இ) இடைச்சொல் தொடர்

4) இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் தந்தால் _

அ) வேற்றுமைத் தொகை ஆ) உவமைத்தொகை
இ) உம்மைத் தொகை ஈ) அன்மொழித் தொகை

விடை: அ) வேற்றுமைத் தொகை

5) காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் _

அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை

விடை: அ) வினைத்தொகை

6) பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச் சொல்லும் இடையே பண்புருபுகள் மறைந்து வருவது _

அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை

விடை: ஆ) பண்புத்தொகை

7) அன்மொழித் தொகை என்னும் சொல்லை பிரித்து எழுதுக

அ) அல் + மொழி + தொகை ஆ) அன் + மொழி + தொகை இ) அன்மொழி + தொகை ஈ) அல்மொழி + தொகை

விடை: அ) அல் + மொழி + தொகை

8) ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட்டு வருவது _

அ) உம்மைத் தொகை ஆ) உவமைத் தொகை இ) எண்ணுமை ஈ) அடுக்குத் தொடர்

விடை: இ) எண்ணுமை

9) சிதம்பரம் சென்றான் – என்ற தொடரில் காணப்படும் வேற்றுமைத் தொகை

அ) இரண்டாம் வேற்றுமைத் தொகை ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை இ) ஆறாம் வேற்றுமைத் தொகை ஈ) ஏழாம் வேற்றுமைத் தொகை

விடை: ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை

10) பொருத்துக

1. மலைவீழ் அருவி – ஆறாம் வேற்றுமைத் தொகை
2. கம்பர் பாடல் – ஐந்தாம் வேற்றுமைத் தொகை
3. மலைக் குகை – ழூன்றாம் வேற்றுமைத் தொகை
4. தலை வணங்கு – ஏழாம் வேற்றுமைத் தொகை

அ) 1234 ஆ) 2143 இ) 4123 ஈ) 3241

விடை: ஆ) 2143

11) பொற்சிலை’ – என்ற சொல்லில் பயின்று வரும் வேற்றுமைத் தொகை _

அ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை ஆ) ழூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை இ) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஈ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை

விடை: ஆ) ழூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

12) கீழ்க்கண்டவற்றுள் பண்புத் தொகைக்கான எடுத்து காட்டினைத் தேர்ந்தெடு

அ) பால்குடம் ஆ) கருங்குவளை
இ) மலர்விழி ஈ) மலைக்குகை

விடை: ஆ) கருங்குவளை

13) பின்வரும் கூற்றினை ஆராய்க:

1. சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவது இருபெயரெட்டுப் பண்புத் தொகை
2. பனைமரம் இரு பெயரெட்டுப் பண்புத் தொகைக்கான எடுத்துக்காட்டாகும்

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி ஈ) இரண்டும் தவறு

விடை: இ) இரண்டும் சரி

14) ‘பொற்றொடி வந்தாள் என்ற சொல்லில் பயின்று வரும் தொகை _

அ) உவமைத் தொகை ஆ) உம்மைத் தொகை இ) அன்மொழித் தொகை ஈ) வினைத்தொகை

விடை: இ) அன்மொழித் தொகை

15) உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது _

அ) உவமைத் தொகை ஆ) உம்மைத் தொகை இ) அன்மொழித் தொகை ஈ) வினைத்தொகை

விடை: அ) உவமைத் தொகை

16) சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது _

அ) உவமைத் தொகை ஆ) உம்மைத் தொகை இ) அன்மொழித் தொகை ஈ) வினைத்தொகை

விடை: இ) அன்மொழித் தொகை

17) எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வருவது _

அ) உவமைத் தொகை ஆ) உம்மைத் தொகை இ) அன்மொழித் தொகை ஈ) வினைத்தொகை

விடை: ஆ) உம்மைத் தொகை

18) பண்புத் தொகைக்கான எடுத்துக்காட்டு அல்லாததைத் தேர்ந்தெடு

அ) செங்காந்தள் ஆ) வட்டத் தொட்டி இ) மலர்க்கை ஈ) இன்மொழி

விடை: இ) மலர்க்கை

19) ‘சாரைப்பாம்பு’ – என்ற சொல் எந்த தொகைக்கான எடுத்துகாட்டு?

அ) இருபெயரெட்டுப் பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) அன்மொழித்தொகை

விடை: அ) இருபெயரெட்டுப் பண்புத்தொகை

20) பின்வரும் கூற்றில் சரியானதைத் தேர்ந்தெடு

அ) வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது இருபெயரெட்டு பண்புத்தொகை
ஆ) ‘மலர்க்கை’ – என்ற சொல் உம்மைத் தொகைக்கான எடுத்துகாட்டாகும். இ) முறுக்கு மீசை வந்தார் – என்பது அன்மொழித் தொகைக்கான எடுத்துகாட்டாகும்
ஈ) இன்மொழி என்பது வினைத்தொகைக்தான எடுத்துகாட்டாகும்

விடை: இ) முறுக்கு மீசை வந்தார் – என்பது அன்மொழித் தொகைக்கான எடுத்துகாட்டாகும்

21) ‘வீசு தென்றல்’ , ‘கொல்களிறு’ என்பன _

அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உவமைத்தொகை

விடை: ஆ) வினைத்தொகை

22) ‘பெரிய மீசை சிரித்தார்’ – சொல்லுக்கான தொகையின் வகை?

அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை

விடை: இ) அன்மொழித்தொகை

23) தொகைநிலைத் தொடரின் வகைகள்?

அ) 6 ஆ) 8 இ) 9 ஈ) 12

விடை: இ) 9

24) ‘கண்ணா வா’ – என்பது _ தொடர்

அ) எழுவாய் ஆ) விளி
இ) வினைமுற்று ஈ) வேற்றுமை

விடை: ஆ) விளி

25) கீழ்கண்டவற்றில் பெயரெச்சத் தொடருக்கான எடுத்துகாட்டு

அ) சென்றார் வீரர் ஆ) வரைந்த ஓவியம்
இ) மல்லிகை மலர்ந்தது ஈ) தேடிப்பார்ததான்

விடை: ஆ) வரைந்த ஓவியம்

26) வினைமுற்றுத் தொடருக்கான எடுத்துகாட்டினைத் தேர்ந்தெடு

அ) சென்றார் வீரர் ஆ) வரைந்த ஓவியம்
இ) மல்லிகை மலர்ந்தது ஈ) தேடிப்பார்ததான்

விடை: அ) சென்றார் வீரர்

27) ‘சாலவும் நன்று’ – என்னும் இடைச்சொல் _

அ) அடுக்குத் தொடர் ஆ) இடைச்சொல்
இ) உரிச்சொல் தொடர் ஈ) வினைமுற்றுத் தொடர்

விடை: இ) உரிச்சொல் தொடர்

28) கீழ்கண்டவற்றில் இடைச்சொல் தொடரினைத் தேர்ந்தெடு

அ) சென்றனர் வீரர் ஆ) கவிதையை எழுதினார்
இ) மற்றுப்பிற ஈ) நண்பா படி

விடை: இ) மற்றுப்பிற

29) “தேடிப் பார்த்தான்” என்பது _ தொடர்

அ) எழுவாய்த் தொடர் ஆ) வினைமுற்றுத் தொடர்
இ) பெயரெச்சத் தொடர் ஈ) வினையெச்சத் தொடர்

விடை: ஈ) வினையெச்சத் தொடர்

30) பொருத்துக

1. பெயரெச்சத் தொடர் – கார்குழலி படித்தாள்
2. வினையெச்சத் தொடர் – புலவரே வருக
3. வினைமுற்றுத் தொடர் – பாடி முடித்தான்
4. எழுவாய்த் தொடர் – எழுதிய பாடல்
5. விளித் தொடர் – வென்றான் சோழன்

அ) 43512 ஆ) 12345 இ) 31245 ஈ) 54213

விடை: அ) 43512

31) எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிளைகள் தொடர்வது _

அ) பெயரெச்சத் தொடர் ஆ) எழுவாய்த் தொடர்
இ) வினையெச்சத் தொடர் ஈ) வேற்றுமைத் தொடர்

விடை: ஆ) எழுவாய்த் தொடர்

32) ‘சாலச் சிறந்தது’ என்பது _ தொடர்

அ) எழுவாய்த் தொடர் ஆ) இடைச்சொல் தொடர்
இ) உரிச்சொல் தொடர் ஈ) அடுக்குத் தொடர்

விடை: இ) உரிச்சொல் தொடர்

33) அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றெடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது

அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய்
இ) உவம உருபு ஈ) உரிச் சொல்

விடை: அ) வேற்றுமை உருபு

34) ஒன்றிற்கு மேற்பட்ட வினையெச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது_

அ) பெயரெச்சம் ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சம் இ) வினையெச்சம் ஈ) தொகைநிலைத் தொடர்

விடை: ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சம்

35) இலக்கணக் குறிப்புகளை பொருத்துக

1. வழிக்கரை – வினைத்தொகை
2. கரகமலம் – உரிச்சொற்றடர்
3. பொங்கடல் – ஆறாம் வேற்றுமை தொகை
4. உறுவேனில் – உருவகம்

அ) 3241 ஆ) 3124 இ) 3412 ஈ) 2341

விடை: இ) 3412

36) பொருத்துக

1. விரிநகர் – பண்புத்தொகை
2. மலரடி – வினைத்தொகை
3. மா பலா வாழை – உவமைத்தொகை
4. முதுமரம் – உம்மைத்தொகை

அ) 4123 ஆ) 2341 இ) 3214 ஈ) 2431

விடை: ஆ) 2341

37) பொருத்துக

1. ழூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்துவது – பெயரெச்சம்
2. முக்காலத்தையும் உணர்த்துவது – வினைமுற்று
3. படித்தல், கற்பித்தல், எழுதுதல் – வினையெச்சம்
4. முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது – தொழிற்பெயர்

அ) 1423 ஆ) 4213 இ) 2341 ஈ) 3421

விடை: இ) 2341

38) இலக்கணக் குறிப்பு அறிக: பசிக்கயிறு

அ) உவமை ஆ) அன்மொழித்தொகை
இ) உருவகம் ஈ) உம்மைத்தொகை

விடை: இ) உருவகம்

39) ‘படுவிடம்’ – இதில் பயின்றுள்ள தொகைநிலைத் தொடர்

அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை
இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை

விடை: அ) வினைத்தொகை

40) வளர்பிறை என்பது _

அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை
இ) வேற்றுமைத் தொகை ஈ) உவமைத் தொகை

விடை: ஆ) வினைத்தொகை

41) குன்றேறி – என்பதன் இலக்கணக் குறிப்பு

அ) ஏழாம் வேற்றுமைத் தொகை ஆ) ஆறாம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை

விடை: அ) ஏழாம் வேற்றுமைத் தொகை

42) வயிற்றுக்கும் என்பதில் வரும் உம்மை

அ) முற்றும்மை ஆ) எண்ணும்மை இ) உயர்வுச் சிறப்பும்மை ஈ) இழிவுச் சிறப்பும்மை

விடை: ஈ) இழிவுச் சிறப்பும்மை

43) ஐந்திணை, ஐம்பால், ஐம்புலம், ஐம்பொறி இவை _

அ) பெயர்ச் சொற்கள் ஆ) வினைச் சொற்கள்
இ) தொகைச் சொற்கள் ஈ) இடைச் சொற்கள்

விடை: இ) தொகைச் சொற்கள்

44) “உவமைத் தொகை” இலக்கண குறிப்பிற்கு பொருந்தாத சொல்லை காண்

அ) கயல் விழி ஆ) மலர்முகம்
இ) வெண்ணிலவு ஈ) தாமரைக் கண்கள்

விடை: இ) வெண்ணிலவு

45) ‘கார்குலாம்’ – எனும் சொல் – எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?

அ) ஏழாம் வேற்றுமைத் தொகை ஆ) ஆறாம் வேற்றுமைத் தொகை
இ) ஐந்தாம் வேற்றுமைத் தொகை ஈ) நான்காம் வேற்றுமைத் தொகை

விடை: ஆ) ஆறாம் வேற்றுமைத் தொகை

46) உம்மைத் தொகையில் உம்’ என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும்?

அ) முதலில் வரும் ஆ) இடையில் வரும்
இ) இடையிலும் இறுதியிலும் வரும் ஈ) இறுதியில் வரும்

விடை: இ) இடையிலும் இறுதியிலும் வரும்

47) பின்வருவனவற்றில் எது உருவகமன்று?

அ) மொழியமுது ஆ) அடிமலர்
இ) தமிழ்த்தேன் ஈ) கயற்கண்

விடை: ஈ) கயற்கண்

48) தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு

அ) பண்புத் தொகை ஆ) அன்மொழித் தொகை இ) வினைத் தொகை ஈ) உவமைத் தொகை

விடை: ஆ) அன்மொழித் தொகை

49) பொருந்தா இணையைக் கண்டறிக:

அ. வெண்தயிர் – பண்புத்தொகை
ஆ. இரைதேர்தல் – வினைத்தொகை
இ. நாழிகைவாரம் – உம்மைத்தொகை
ஈ. கயிலாயவெர்பு – இருபெயரொட்டு பண்புத்தொகை

விடை: ஆ. இரைதேர்தல் – வினைத்தொகை

50) ‘நெறியினில் உயிர் செகுத்ததிடுவ’ – இதில் ‘உயிர்செகுத்து’ எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?

அ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஆ) வினையாலணையும் பெயர்
இ) வியங்கோள் வினைமுற்று
ஈ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

விடை: ஈ) இரண்டாம் வேற்றுமைத் தொகை

சமூகம் மற்றும் பயிற்சி

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான தொகைநிலைத் தொடர் வினா-விடைகள் உங்கள் தேர்வு தயாரிப்பை மிக எளிதாக்கும். இந்த வினா-விடைகளை பழகி, தமிழ் அறிவை மேம்படுத்துங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 தொகைநிலைத் தொடர் முக்கிய வினா-விடைகள் க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

Tamil Mixer Education – Online Printing Service

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version