
TAMIL FINAL ANSWER KEY – TNPSC Group 4 – 2025
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
மற்ற விடைகள் விரைவில் சேர்க்கப்படும்
79. பொருந்தாத இணையைக் கண்டறிக.
(A) ஏ – எ
(B) த – ந
(C) ஐ – அ
(D) ற – ன
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஐ – அ
Source: 6வது புதிய தமிழ் புத்தகம்
பக்கம் – 91
9. உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல — என்பது என்ன?
(A) கால்சுற்று
(B) கைச்சுற்று
(C) நகச்சுற்று
(D) திருமண்சுற்று
(E) விடை தெரியவில்லை.
விடை: (C) நகச்சுற்று
Source: 10வது பழைய தமிழ் புத்தகம்
பக்கம் – 175
22. “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” – என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.
(A) தந்தை பெரியார்
(B) அறிஞர் அண்ணா
(C) ம.பொ. சிவஞானம்
(D) ப. ஜீவானந்தம்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) அறிஞர் அண்ணா
Source: 7வது புதிய தமிழ் புத்தகம்
பக்கம் – 199
23. டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது?
(1) தமிழ் எழுத்தாளர்
(2) திறனாய்வாளர்
(3) வழக்கறிஞர்
(4) பேராசிரியர்
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) (4) மட்டும்
Source: 7வது புதிய தமிழ் புத்தகம்
பக்கம் – 161
37. சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க.
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்ல வல்லவர்
(A) கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
(B) பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவார்
(C) முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார்
(D) அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
Source: 7வது புதிய தமிழ் புத்தகம்
பக்கம் – 188
38. அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
“தகுதியான் வென்று விடல்”
(A) பெருமை
(B) பொறுமை
(C) கல்வி
(D) பண்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) பொறுமை
Source: 9வது புதிய தமிழ் புத்தகம்
பக்கம் – 88
82. ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
(A) காற்புள்ளி
(B) அரைப்புள்ளி
(C) முக்காற்புள்ளி
(D) முற்றுப்புள்ளி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) முக்காற்புள்ளி
Source: 10வது பழைய தமிழ் புத்தகம்
பக்கம் – 192
86. மரபுத் தொடரைத் தேர்ந்தெடு
காட்டில் சிங்கம் , யானை _
(A) அலறும், கத்தும்
(B) உறுமும், பிளிறும்
(C) முழங்கும், பிளிறும் ,
(D) உறுமும், கத்தும்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) முழங்கும், பிளிறும்
Source: 8வது புதிய தமிழ் புத்தகம்
பக்கம் – 6
99. Proposal எனும் சொல்லிற்கான இணையான சொல்லைத் தருக.
(A) உண்மை ௨௫
(B) பொய் ௨௫
(C) கருத்துரு
(D) எண்ண ௨௫
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கருத்துரு
Source: 12வது பழைய தமிழ் புத்தகம்
பக்கம் – 160
100. “Irrigation Technology” – என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லறிக.
(A) தகவல் தொழில்நுட்பம்
(B) சூழலியல் தொழில்நுட்பம்
(C) நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
(D) வெப்ப மண்டலத் தொழில்நுட்பம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
Source: 9வது புதிய தமிழ் புத்தகம்
பக்கம் – 52
65. பிரித்து எழுதுக: “கங்கெளகம்” – என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
(A) கங் + கெளகம்
(B) கங்கு + ஒகம்
(C) கங்க + ஓகம்
(D) கங்கா + ஓகம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கங்கா + ஓகம்
Source:
58. ‘தனிமரம் காடாதல் இல்’ பழமொழி உணர்த்தும் பொருள்
(A) ஆசையும் அழிவும்
(B) தீயவரைத் தண்டித்தல்
(C) பகையை நீக்குதல்
(D) நட்பைப் பெருக்குதல்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) நட்பைப் பெருக்குதல்
Source:
85. மரபுத் தொடர்களுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
(A) அடரடி படரடி – 1. சித்தி அடைதல்
(B) அகட விகடம் – 2. உறுதியின்மை
(C) ஈரொட்டு – 3. தந்திரம்
(D) கை கூடுதல் – 4. பெருங்குழப்பம்
(A) 4 1 2 3
(B) 4 3 2 1
(C) 3 4 2 1
(D) 3 2 4 1
விடை: (B) 4 3 2 1
Source:
46. “வேளைப் பிசகு” – எனும் மரபுத் தொடரின் பொருள் தேர்க.
(A) நல்ல காலம்
(B) தீய காலம்
(C) கடந்த காலம்
(D) வரும் காலம்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) தீய காலம்
Source:
13. “ஓலக்கம்” என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
(A) ஓல்
(B) ஓலம்
(C) ஓலகம்
(D) ஒட்டோலக்கம்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ஓல்
Source:
34. பொருத்துக :
(a) Call book – 1. பதிவேடு வழங்கு குறிப்பேடு
(b) Record issue regi – 2. வறியர் வழக்குப் பதிவேடு
(c) Pauper suit register – 3. செம்மைப்படி பதிவேடு
(d) Fair copy register – 4. மறுகவனிப்புப் பதிவேடு
(A) 1 3 4 2
(B) 2 3 1 4
(C) 3 2 4 1
(D) 4 1 2 3
விடை: (D) 4 1 2 3
Source:
71. பொருத்துக :
(a) Abulia – 1. சீழ்கட்டி
(b) Acomia – 2. உடல் வழுக்கை.
(C) Abscess – 3. மன உறுதிக் குறைபாடு.
(D) Alopecia Universalis – 4. தலை வழுக்கை
(E) விடை தெரியவில்லை
விடை: 3 4 1 2
Source:
61. சரியான இணையைக் கண்டறிக :
(A) தாராபாரதி – ஆசியஜோதி
(B) முடியரசன் – வீரகாவியம்
(C) கவிமணி – இதய ஒலி
(D) இரசிகமணி – விரல் நுனி வெளிச்சங்கள்
(A) (2) -சரி
(B) (1) – சரி
(C) (4) – சரி
(D) (3) – சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) (2) -சரி
Source: 6ம் வகுப்பு புதிய பள்ளி புத்தகம் பக்கம் எண் 127
66. “கோறல், கொல்லுதல்” – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
(A) ஆடல்
(B) அரவு
(C) ஆடு
(D) அடுதல்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) அடுதல்
Source: 10ம் வகுப்பு ரொம்ப பழைய பள்ளி புத்தகம் பக்கம் எண் 61
பதிப்பு – 2003
95. அஃறிணைத் தொடரைக் கண்டறிக.
(A) மலர்கள் மலர்ந்தன
(B) மக்கள் கூடினர்
(C) மாணவர்கள் விளையாடினர்
(D) ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மலர்கள் மலர்ந்தன
Source: 11ம் வகுப்பு புதிய சிறப்புத் தமிழ் பள்ளி புத்தகம்
பக்கம் எண் 142
10. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக
(A) கோலாமி
(B) பர்ஜி
(C) கொண்டா
(D) கண்ணெழுத்துகள்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கண்ணெழுத்துகள்
source: 8 வகுப்பு புதிய தமிழ் புத்தகம் பக்கம் எண் 9
11. ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்
1) சுக்கு
2) திப்பிலி
3) கண்டங்கத்திரி
4) சிறுநாவற்பூ
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) (3) மட்டும்
Source: 10ம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
பக்கம் எண் 11
12. பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க: “தூற்றின் கண் தூவிய வித்து”
(A) பழமொழி நானூறு
(B) மூதுரை
(C) நாலடியார்
(D) திரிகடுகம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) திரிகடுகம்
Source: பழைய 7 வகுப்பு தமிழ் புத்தகம்
பக்கம் எண் 3
39. கூற்று: மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துக்களிலும் இன எழுத்துக்கள் உண்டு.
காரணம்: உயிர் எழுத்துக்களில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துக்கள் ஆகும்.
(A) கூற்று – சரி; காரணம் — தவறு
(B) கூற்று – தவறு: காரணம் – சரி
(C) கூற்று – சரி; காரணம் – சரி
(D) கூற்று – தவறு; காரணம் – தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கூற்று – சரி; காரணம் – சரி
source : 6ம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்
பக்கம் எண் 92
49. கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
(A) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.
(B) பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது.
(C) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார்.
(D) திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
விடை தெரியவில்லை
விடை: (C) (3) மட்டும்
Source: 9ம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம் பக்கம் எண் 3
54. ஒரு பொருட் பன்மொழியில் “மீமிசை ஞாயிறு” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
(A) பக்கப்பகுதி
(B) கீழ்ப்பகுதி
(C) நடுப்பகுதி
(D) மேல்பகுதி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) மேல்பகுதி
Source: 10ம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
பக்கம் எண் 98
69. புல்லின் உறுப்பைக் கண்டறிக.
(A) தளிர்
(B) முறி
(C) குழை
(D) ஓலை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தளிர்
Source: 10ம் வகுப்பு புதிய புத்தகம்
பக்கம் எண் 5
8. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.
(A) அலை ஓய்ந்த கடல் போல் – 1. நடுங்குதல்
(B) அடியற்ற மரம் போல் – 2. மனம் உடைதல்
(C) மத்தில் அகப்பட்ட தயிர்போல் – 3. அமைதி
(D) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் – 4. வீழ்தல்
(A) 3 4 2 1
(B) 3 1 4 2
(C) 4 3 2 1
(D) 4 1 3 2
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 3 4 2 1
Source: பத்தாம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
பக்கம் எண் 99
18. கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.
(A) கடி மணம்
(B) அழைத்தனர் உற்றார்
(C) நிலவோ காய்ந்தது
(D) அம்ம வாழி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) அம்ம வாழி
Source: ஒன்பதாம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
மூன்றாம் பருவம் – பக்கம் 23
29. ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக :
(a) தேவகோட்டை – 1. கோவை
(b) கோவன்புத்தூர்- 2. சோணாடு
(c) பூந்தமல்லி – 3. தேவோட்டை
(d) சோழநாடு – 4. பூனமல்லி
(A) 1 2 3 4
(B) 3 1 4 2
(C) 2 1 4 3
(D) 4 3 2 1
விடை: (B) 3 1 4 2
Source: 12 வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
பக்கம் 82
3. பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
(A) அங்குக்கேட்டேன்
(B) அங்கு கேட்டேன்
(C) இங்கு பேசாதே
(D) எங்கு சென்றாய்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அங்குக்கேட்டேன்
Source: 9 வகுப்பு பழைய தமிழ் புத்தகம் இரண்டாம் பருவம்
பக்கம் 24
16. பொருத்தமானதைத் தேர்வு செய்க :
மலை
(A) வெற்பு, சிலம்பு, பொருப்பு
(B) பொழிவு, எழில், வளப்பு
(C) அருள், பரிவு, கருணை
(D) ஆதவன், பகலவன், ஞாயிறு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) வெற்பு, சிலம்பு, பொருப்பு
Source: 9 வகுப்பு பழைய தமிழ் புத்தகம் மூன்றாம் பருவம் பக்கம் 24
40. பொருத்துக :
(A) மருப்பு – 1. வழிவந்தோன்
(B) விரகு – 2. தந்திரம்
(C) மருகன் – 3. சிறிய அடி
(D) சீறடி – 4. யானைத் தந்தம்
(A) 1 4 3 2
(B) 1 2 4 3
(C) 4 2 1 3
(D) 2 1 4 3
விடை: (C) 4 2 1 3
Source: 12 வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
பக்கம் எண் 28
41. பொருத்துக :
(A) மாணி – 1. பொன்
(B) மானி – 2. குள்ளன்
(C) கணகம் – 3. படை
(D) கனகம் – 4. மாமன்
(A) 1 2 3 4
(B) 2 4 3 1
(C) 4 3 2 1
(D) 3 1 4 2
விடை: (B) 2 4 3 1
Source: 12 ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
பக்கம் 62
Source: 12 ஆம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
பக்கம் 62
5. ஒலி மரபைக் கண்டறிக.
புள்
(A) நரலும்
(B) கருவும்
(C) சிமிழ்க்கும்
(D) சீறும்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) சிமிழ்க்கும்
Source: எட்டாம் வகுப்பு புதிய புத்தகம் பக்கம் 214
15. கூற்று: வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும். ௭. ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.
காரணம்: இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
(A) கூற்று – சரி, காரணம் – தவறு
(B) கூற்று – தவறு, காரணம் – சரி
(C) கூற்று – தவறு, காரணம் – தவறு
(D) கூற்று – சரி, காரணம் – சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கூற்று – சரி, காரணம் – தவறு
Source: ஆறாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்
பக்கம் 141
36. கூற்று (A) : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.
காரணம் (R) : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.
(A) [A] சரி [R] தவறு
(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி
(C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
(D) [A] தவறு [R] சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) [A] சரி [R] தவறு
Source: ஏழாம் வகுப்பு புதிய புத்தகம்
பக்கம் 144
42. அரைப்புள்ளி அமையும் இடங்கள் :
கூற்று: கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம்: கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
(A) கூற்று சரி; காரணம் சரியன்று
(B) கூற்று சரியன்று; காரணம் சரி
(C) கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
(D) கூற்று, காரணம் இரண்டும் சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கூற்று, காரணம் இரண்டும் சரி
Source: ஏழாம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
மூன்றாம் பருவம் – பக்கம் எண் 64
50. “பாடும் பாடல்’ என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.
(A) நிகழ்காலப் பெயரெச்சம்
(B) இறந்தகாலப் பெயரெச்சம்
(C) எதிர்காலப் பெயரெச்சம்
(D) குறிப்புப் பெயரெச்சம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) எதிர்காலப் பெயரெச்சம்
Source: எட்டாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்
பக்கம் 63
76. ‘மண்ணோடியைந்த மரத்தனையர்’ என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
விடை: இரக்கம் இல்லாதவர்
source: பத்தாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்
பக்கம் 232
24. பிழையான தொடரைக் கண்டறிக
(A) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
(B) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
(C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
(D) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
Source: 12 ஆம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்
பக்கம் 17
48. கூற்று [A] : உவே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் கமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார்.
காரணம் [R]: அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.
(A) [A] சரி ஆனால் [R] தவறு, [1] என்பது [A]ஐ விளக்கவில்லை
(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
(C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
(D) [A] தவறு ஆனால் [R] சரி
(E) விடை தெரியவில்லை.
விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
source: ஆறாம் வகுப்பு பழைய தமிழ் புத்தகம்
முதல் பருவம் – பக்கம் 8
62. தொடரமைக்க:
விரிந்தது – விரித்தது
(A) மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில் தோகை விரிந்தது
(B) மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; மயில் தோகை விரிந்தன
(C) மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகை விரித்தது
(D) மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
(E) விடை தெரியவில்லை
விடை: (D) மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
Source: ஒன்பதாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்
பக்கம் 120
87. பூட்கை” என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
(A) படுக்கை –
(B) உடல்
(C) குறிக்கோள்
(D) மலை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) குறிக்கோள்
Source: ஒன்பதாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்
பக்கம் 255
77. கூற்று: ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்களுக்குக் சுட்டு எழுத்துக்கள் என்று பெயர்.
காரணம்: ௭. யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைச் சுட்டுகிறது.
(A) கூற்று – சரி; காரணம் – தவறு
(B) கற்று – தவறு; காரணம் – சரி
(C) கூற்று- சரி; காரணம் – சரி
(D) கூற்று – தவறு; காரணம் – தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கூற்று – சரி; காரணம் – தவறு
Source: ஆறாம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம்
பக்கம் 41
🌐 Important Website and Social Media Links:
- 🌍 Official Website: Tamil Mixer Education
- 💬 WhatsApp Group: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 TNPSC Group 4 – 2025 தமிழ் கேள்விகள்: பாடநூலில் எங்கிருந்து கேட்கப்பட்டது + Outsource Images – Download now and boost your preparation!