
TAMIL FINAL ANSWER KEY – TNPSC Group 4 – 2025
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1. குறில், நெடில் சொற்களுக்குச் சரியான பொருளைக் கண்டறிக. கணம் – காணம்
(A) கூட்டம், பொன்
(B) பொன், கூட்டம்
(C) கூட்டம், காடு
(D) காடு, தோட்டம்
(B) விடை தெரியவில்லை
விடை: (A) கூட்டம், பொன்
Question Source Link: Check Here
2. சரியான விடைக் குறிப்பைத் தேர்க :
கூற்று : “தந்தப் பலகை’ என்பதன் பொருள் ‘கொடுத்த பலகை’ என்பதாகும்.
காரணம்: இரண்டு சொற்களுக்கு இடையில் ‘ப’ என்ற ஒற்றெழுத்து மிகுந்து வந்ததால் கொடுத்த பலகை என்னும் பொருளைக் குறித்தது.
(A) கூற்று – சரி; காரணம் – தவறு
(B) கூறறு – தவறு; காரணம் – சரி
(C) கூற்று – சரி; காரணம் – சரி
(D) கூற்று – தவறு; காரணம் – தவறு
(B) விடை தெரியவில்லை
விடை: (D) கூற்று – தவறு; காரணம் – தவறு
Question Source Link: Check Here
3.பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
(A) அங்குக்கேட்டேன்
(B) அங்கு கேட்டேன்
(C) இங்கு பேசாதே
(D) எங்கு சென்றாய்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) அங்குக்கேட்டேன்
Question Source Link: Check Here
4. பொருத்துக :
(A) சாந்து – இழிதல்
(B) குருவி – குடை
(C) சுனை – ஓப்பு
(D) அருவி – அரை
(A) 4 3 2 1
(B) 4 1 3 2
(C) 2 4 1 3
(D) 4 2 1 3
(E) விடை தெரியவில்லை
விடை: (B) 4 1 3 2
Question Source Link: Check Here
5. ஒலி மரபைக் கண்டறிக.
புள்
(A) நரலும்
(B) கருவும்
(C) சிமிழ்க்கும்
(D) சீறும்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) சிமிழ்க்கும்
Question Source Link: Check Here
6. புவியியலில் “Advance” – என்னும் சொல்லிற்கு இணையான கலைச்சொல்லைத் தருக
(A) ஃபெல்ஸ்பார் கனிமவகை
(B) கடற்கரையியக்கம்
(C) பெரும் நில அதிர்விற்குப் பிறகான சிறு அதிர்வுகள்
(D) வியாழனின் துணைக்கோள்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) கடற்கரையியக்கம்
Question Source Link: Check Here
7. பொருத்துக :
(a) Pre-censorship – 1, உடைமை
(b) Possession – 2. முன் தணிக்கை
(C) Prescription – 3. முனைமம்
(d) Premium – 4. நீடனுபோகம்
(A) 2 1 4 3
(B) 1 2 3 4
(C) 4 3 2 1
(D) 1 4 3 2
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 2 1 4 3
Question Source Link: Check Here
8. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் கண்டறிக.
(A) அலை ஓய்ந்த கடல் போல் – 1. நடுங்குதல்
(B) அடியற்ற மரம் போல் – 2. மனம் உடைதல்
(C) மத்தில் அகப்பட்ட தயிர்போல் – 3. அமைதி
(D) புயலில் சிக்கிய பூங்கொடிபோல் – 4. வீழ்தல்
(A) 3 4 2 1
(B) 3 1 4 2
(C) 4 3 2 1
(D) 4 1 3 2
(E) விடை தெரியவில்லை
விடை: (A) 3 4 2 1
Question Source Link: Check Here
9. உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல — என்பது என்ன?
(A) கால்சுற்று
(B) கைச்சுற்று
(C) நகச்சுற்று
(D) திருமண்சுற்று
(E) விடை தெரியவில்லை
விடை: (C) நகச்சுற்று
Question Source Link: Check Here
10. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துக்கள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக
(A) கோலாமி
(B) பர்ஜி
(C) கொண்டா
(D) கண்ணெழுத்துகள்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கண்ணெழுத்துகள்
Question Source Link: Check Here
11. ஏலாதியில் இடம் பெறாத மருந்துப் பொருள்
1) சுக்கு
2) திப்பிலி
3) கண்டங்கத்திரி
4) சிறுநாவற்பூ
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) (3) மட்டும்
Question Source Link: Check Here
12. பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க
“தூற்றின் கண் தூவிய வித்து”
(A) பழமொழி நானூறு
(B) மூதுரை
(C) நாலடியார்
(D) திரிகடுகம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) திரிகடுகம்
Question Source Link: Check Here
13. “ஓலக்கம்” என்னும் சொல்லின் வேர்ச் சொல்லைக் கண்டறிக.
(A) ஓல்
(B) ஓலம்
(C) ஓலகம்
(D) ஒட்டோலக்கம்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ஓல்
Question Source Link: Check Here
14. பொருத்துக :
(a) அணிகம் 1. காமன்
(b) அநிகம் 2. சிவிகை
(c) அனிகம் 3. படையில் ஓர் அளவு
(d) அநங்கு 4. ஊர்தி
(A) 4 3 2 1
(B) 4 2 3 1
(C) 4 1 2 3
(D) 3 2 4 1
விடை: (C) 4 1 2 3
Question Source Link: Check Here
15. கூற்று: வினவப்பயன்படும் எழுத்துகள் வினா எழுத்துகள் எனப்படும். ௭. ஏ, யா, ஆ, ஓ என்னும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.
காரணம்: இவ்வினாவெழுத்துகளை இடவினா எழுத்துகள் எனக் குறிக்கலாம்.
(A) கூற்று – சரி, காரணம் – தவறு
(B) கூற்று – தவறு, காரணம் – சரி
(C) கூற்று – தவறு, காரணம் – தவறு
(D) கூற்று – சரி, காரணம் – சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கூற்று – சரி, காரணம் – தவறு
Question Source Link: Check Here
16. பொருத்தமானதைத் தேர்வு செய்க :
மலை
(A) வெற்பு, சிலம்பு, பொருப்பு
(B) பொழிவு, எழில், வளப்பு
(C) அருள், பரிவு, கருணை
(D) ஆதவன், பகலவன், ஞாயிறு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) வெற்பு, சிலம்பு, பொருப்பு
Question Source Link: Check Here
17. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க :
கலி, கழி
(A) போர், மிகுதி
(B) கலித்தல், கழித்தல்
(C) மகிழ்ச்சி, களித்தல்
(D) கலித்தொகை, மாவு களி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) போர், மிகுதி
Question Source Link: Check Here
18. கீழ்க்காண்பவற்றுள் இடைச்சொல் தொடரைக் கண்டறிக.
(A) கடி மணம்
(B) அழைத்தனர் உற்றார்
(C) நிலவோ காய்ந்தது
(D) அம்ம வாழி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) அம்ம வாழி
Question Source Link: Check Here
19. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்:
பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.
(A) பண்பு எனப்படுவது ஒழுகுதல் பாடறிந்து
(B) பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
(C) பாடறிந்து பண்பு எனப்படுவது ஒழுகுதல்
(D) ஒழுகுதல் எனப்படுவது பண்பு பாடறிந்து
(E) விடை தெரியவில்லை
விடை: (B) பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
Question Source Link: Check Here
20. “கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ?” எனும் பழமொழியின் பொருள் கண்டறிக.
(A) பெருமை
(B) கர்வம்
(D) குறைத்து மதிப்பிடாதே
(D) புகழ்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) குறைத்து மதிப்பிடாதே
Question Source Link: Check Here
21. மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைப் பொருத்துக :
(A) கடன் கழித்தல் – 1. கலங்கல் நீர்
(B) கடை விரித்தல் – 2. முரண்படுதல்
(C) கட்சைக் கட்டுதல் – 3. தன் ஆற்றலைச் சொல்லுதல்
(D) கக்கல் கரிசல் – 4. மனமின்றிச் செய்தல்
(E) விடை தெரியவில்லை
(A) 4 3 2 1
(B) 4 1 2 3
(C) 4 2 3 1
(D) 3 4 2 1
விடை: (A) 4 3 2 1
Question Source Link: Check Here
22. “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் திகழ்கிறார்” – என்று புகழ்ந்துரைத்தவரைக் கண்டறிக.
(A) தந்தை பெரியார்
(B) அறிஞர் அண்ணா
(C) ம.பொ. சிவஞானம்
(D) ப. ஜீவானந்தம்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) அறிஞர் அண்ணா
Question Source Link: Check Here
23. டி.கே. சிதம்பரநாதருடன் தொடர்பில்லாதது எது?
(1) தமிழ் எழுத்தாளர்
(2) திறனாய்வாளர்
(3) வழக்கறிஞர்
(4) பேராசிரியர்
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) (4) மட்டும்
Question Source Link: Check Here
24. பிழையான தொடரைக் கண்டறிக
(A) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்
(B) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்
(C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
(D) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின
(E) விடை தெரியவில்லை
விடை: (C) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது
Question Source Link: Check Here
25. வினைமுற்றுகளின் வகைகளோடு பொருத்துக :
(A) அழிந்தது தீமை – 1. சினைப்பெயர் கொண்டது
(B) அற்றது பிறப்பு – 2. இடப்பெயர் கொண்டது
(C) நல்லது கை – 3. குணப்பெயர் கொண்டது
(D) குளிர்ந்தது நிலம் – 4. தொழிற்பெயர் கொண்டது
(A) 3 1 4 2
(B) 3 4 1 2
(C) 4 3 2 1
(D) 4 1 2 3
விடை: (B) 3 4 1 2
Question Source Link: Check Here
26. ‘செற்றம்’ என்ற சொல்லின் எதிர்ச்சொல்லைக் கண்டறிக.
(A) பகை
(B) வண்மை
(C) வன்மை
(D) கேண்மை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கேண்மை
Question Source Link: Check Here
27. காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி – இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
(A) அம்புலி, காப்பு, சப்பாணி, தால், செங்கீரை, முத்தம், வருகை
(B) அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, முத்தம், தால், வருகை
(C) அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை
(D) அம்புலி, காப்பு, செங்கீரை, சப்பாணி, தால், முத்தம், வருகை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை
Question Source Link: Check Here
28. பிழை திருத்துக :
கூற்று : ஒரு அணில் மரத்தில் ஏறியது.
காரணம் : உயிர் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்னர் “ஓர்” பயன்படுத்த வேண்டும்.
(A) கூற்று – சரி: காரணம் – தவறு
(B) கூற்று – தவறு; காரணம் – சரி
(C) காரணம், கூற்று – இரண்டும் சரி
(D) கூற்று, காரணம் – இரண்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) கூற்று – தவறு; காரணம் – சரி
Question Source Link: Check Here
29. ஊர்ப் பெயர்களோடு மரூஉ சொற்களைப் பொருத்துக :
(a) தேவகோட்டை – 1. கோவை
(b) கோவன்புத்தூர்- 2. சோணாடு
(c) பூந்தமல்லி – 3. தேவோட்டை
(d) சோழநாடு – 4. பூனமல்லி
(A) 1 2 3 4
(B) 3 1 4 2
(C) 2 1 4 3
(D) 4 3 2 1
விடை: (B) 3 1 4 2
Question Source Link: Check Here
30. பிழையற்ற நிகழ்காலத் தொடரைக் கண்டறிக
(A) கண்ணன் நேற்று வருவான்
(B) அன்பு நாளை வந்தான்
(C) கவின்மொழி வருவாள்
(D) பூமி சுழல்கிறது
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பூமி சுழல்கிறது
Question Source Link: Check Here
31. கூற்று : யானைகள் விரைந்து ஓடியது.
காரணம் : யானைகள் என்ற பலவின்பால் பெயருக்கு ‘அது’ என்ற ஒன்றன்பா விகுதியே இடம்பெற வேண்டும்.
(A) கூற்று – சரி; காரணம் – சரி
(B) கூற்று – தவறு; காரணம் – சரி
(C) கூற்று – சரி; காரணம் – தவறு
(D) கூற்று – தவறு;காரணம் – தவறு
விடை: (D) கூற்று – தவறு;காரணம் – தவறு
Question Source Link: Check Here
32. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக – Veteran
(A) சோம்பல் உடையவர்
(B) திறனாளர்
(C) காலம் கடத்துபவர்
(D) முன்கோபி
(E) விடை தெரியவில்லை
விடை: (B) திறனாளர்
Question Source Link: Check Here
33. கலைச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
Glacier
(A) வெப்ப அறு
(B) செவுள் இழை
(C) செவுள் வலை
(D) பனியாறு
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பனியாறு
Question Source Link: Check Here
34. பொருத்துக :
(a) Call book – 1. பதிவேடு வழங்கு குறிப்பேடு
(b) Record issue regi – 2. வறியர் வழக்குப் பதிவேடு
(c) Pauper suit register – 3. செம்மைப்படி பதிவேடு
(d) Fair copy register – 4. மறுகவனிப்புப் பதிவேடு
(A) 1 3 4 2
(B) 2 3 1 4
(C) 3 2 4 1
(D) 4 1 2 3
விடை: (D) 4 1 2 3
Question Source Link: Check Here
35. “Adoring” என்னும் ஆங்கிலச் சொல்லிற்குத் தமிழ்ச்சொல் கண்டறிக.
(A) முன்னேறுதல்
(B) ஒப்புக்கொடுத்தல்
(C) போற்றுதல்
(D) துணை நிற்றல்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) போற்றுதல்
Question Source Link: Check Here
36. கூற்று (A) : அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.
காரணம் (R) : ஒருவருக்கு அதனை விடச் சிறந்த செல்வம் வேறு உண்டு.
(A) [A] சரி [R] தவறு
(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி
(C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
(D) [A] தவறு [R] சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) [A] சரி [R] தவறு
Question Source Link: Check Here
37. சரியான சொற்றொடரைத் தேர்வு செய்து கீழ்க்காணும் தொடரை நிறைவு செய்க.
தாம் கற்றவற்றைக் கற்றவர் முன் தெளிவாகச் சொல்ல வல்லவர்
(A) கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
(B) பிறர் மனத்தில் நன்கு பதியும்படி சொல்லுவார்
(C) முன்வினையையும் தோற்கடித்து வெற்றியடைவார்
(D) அரிய செயல்களை விரைந்து செய்து முடிப்பார்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார்
Question Source Link: Check Here
38. அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
“தகுதியான் வென்று விடல்”
(A) பெருமை
(B) பொறுமை
(C) கல்வி
(D) பண்பு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) பொறுமை
Question Source Link: Check Here
39. கூற்று: மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துக்களிலும் இன எழுத்துக்கள் உண்டு.
காரணம்: உயிர் எழுத்துக்களில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துக்கள் ஆகும்.
(A) கூற்று – சரி; காரணம் — தவறு
(B) கூற்று – தவறு: காரணம் – சரி
(C) கூற்று – சரி; காரணம் – சரி
(D) கூற்று – தவறு; காரணம் – தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கூற்று – சரி; காரணம் – சரி
Question Source Link: Check Here
40. பொருத்துக :
(A) மருப்பு – 1. வழிவந்தோன்
(B) விரகு – 2. தந்திரம்
(C) மருகன் – 3. சிறிய அடி
(D) சீறடி – 4. யானைத் தந்தம்
(A) 1 4 3 2
(B) 1 2 4 3
(C) 4 2 1 3
(D) 2 1 4 3
விடை: (C) 4 2 1 3
Question Source Link: Check Here
41. பொருத்துக :
(A) மாணி – 1. பொன்
(B) மானி – 2. குள்ளன்
(C) கணகம் – 3. படை
(D) கனகம் – 4. மாமன்
(A) 1 2 3 4
(B) 2 4 3 1
(C) 4 3 2 1
(D) 3 1 4 2
விடை: (B) 2 4 3 1
Question Source Link: Check Here
42. அரைப்புள்ளி அமையும் இடங்கள் :
கூற்று: கபிலர் பாரியைக் கண்டார்; புகழ்ந்து பாடினார்; பரிசு பெற்றார்.
காரணம்: கபிலர் என்ற ஓர் எழுவாய் பல பயனிலைகளைக் கொண்டு முடிந்துள்ளன.
(A) கூற்று சரி; காரணம் சரியன்று
(B) கூற்று சரியன்று; காரணம் சரி
(C) கூற்று, காரணம் இரண்டும் சரியன்று
(D) கூற்று, காரணம் இரண்டும் சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கூற்று, காரணம் இரண்டும் சரி
Question Source Link: Check Here
43. ஆசிரியர் புகழினியாளிடம் வந்து கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார் – இவ்வாக்கியத்தில் சரியான இடத்தில் கால்புள்ளி இடுக.
(A) ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
(B) ஆசிரியர், புகழினியாளிடம் – வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு செய்தார்.
(C) ஆசிரியர், புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு, செய்தார்.
(D) ஆசிரியர், புகழினியாளிடம், வந்து கேள்வி கேட்டுப், பதில் கூறுமாறு
செய்தார்.
(E) விடை தெரியவில்லை
விடை: (A) ஆசிரியர் புகழினியாளிடம் வந்து, கேள்வி கேட்டுப் பதில் கூறுமாறு செய்தார்.
Question Source Link: Check Here
44. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக. Visual Scanner
(A) காட்சிப் பக்கம்
(B) படப்பிடிப்பு
(C) கட்புலமேவி
(D) காட்சி உணர்தல்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கட்புலமேவி
Question Source Link: Check Here
45. பொறியியலில் “Anchorage“_ என்னும் ஆங்கிலச் சொல்லிற்குக் கலைச்சொல்
தருக.
(A) நேர்கோட்டு வைப்பு
(B) ஊன்றுதளை
(C) வெட்டுமுகம்
(D) நீக்குழல்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஊன்றுதளை
Question Source Link: Check Here
46. “வேளைப் பிசகு” – எனும் மரபுத் தொடரின் பொருள் தேர்க.
(A) நல்ல காலம்
(B) தீய காலம்
(C) கடந்த காலம்
(D) வரும் காலம்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) தீய காலம்
Question Source Link: Check Here
47. ‘ஆப்பசைத்தக் குரங்கனைப் போல’ என்ற உவமைத்தொடர் உணர்த்தும் சரியான பொருளைக் கண்டறிக.
(A) இன்பம்
(B) ஏக்கம்
(C) வேகம்
(D) வேதனை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) வேதனை
Question Source Link: Check Here
48. கூற்று [A] : உவே. சாமிநாதர் அனைவராலும் அன்போடும் உரிமையோடும் கமிழ்த்தாத்தா உ.வே.சா என்று அழைக்கப்படுகிறார்.
காரணம் [R]: அழிவு நிலையில் இருந்த வெவ்வேறு சுவடிகளைப் பலமுறை ஒப்பிட்டுப் பார்த்து வாசித்து, நமக்காகத் தாளில் எழுதி அச்சிட்டுப் புத்தகமாக இலக்கியங்களை வழங்கினார். தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்புப் பணியினை மேற்கொண்டார்.
(A) [A] சரி ஆனால் [R] தவறு, [1] என்பது [A]ஐ விளக்கவில்லை
(B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
(C) [A] மற்றும் [R] இரண்டும் தவறு
(D) [A] தவறு ஆனால் [R] சரி
(E) விடை தெரியவில்லை.
விடை: (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, [R] என்பது [A]ஐ விளக்கியுள்ளது
Question Source Link: Check Here
49. கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
(A) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.
(B) பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது.
(C) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார்.
(D) திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
(A) (1) மட்டும்
(B) (2) மட்டும்
(C) (3) மட்டும்
(D) (4) மட்டும்
விடை தெரியவில்லை
விடை: (C) (3) மட்டும்
Question Source Link: Check Here
50. “பாடும் பாடல்’ என்ற சொற்கள் எந்த பெயரெச்ச வகையென்று கண்டறிக.
(A) நிகழ்காலப் பெயரெச்சம்
(B) இறந்தகாலப் பெயரெச்சம்
(C) எதிர்காலப் பெயரெச்சம்
(D) குறிப்புப் பெயரெச்சம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) எதிர்காலப் பெயரெச்சம்
Question Source Link: Check Here
51. ‘நட’ என்னும் வேர்ச்சொல்லின் வழி உயர்திணை வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
(A) நடந்தது
(B) நடப்பது
(C) நடப்பவை
(D) நடந்தவன்
(B) விடை தெரியவில்லை
விடை: (D) நடந்தவன்
Question Source Link: Check Here
52. “வை” என்னும் வேர்ச்சொல்லின் ஏவல் வினைமுற்றினைக் கண்டறிக.
(A) வைத்த
(B) வைத்து
(C) வைத்தது
(D) வைத்தாள்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) வைத்தாள்
Question Source Link: Check Here
53. இரு பொருள் தருக : தாரணி!
(A) சூரியன், உலகம்
(B) கதிரவன், மதி
(C) கடல், பூமி
(D) பூமி, உலகம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பூமி, உலகம்
Question Source Link: Check Here
54. ஒரு பொருட் பன்மொழியில் “மீமிசை ஞாயிறு” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளைக் கண்டறிக.
(A) பக்கப்பகுதி
(B) கீழ்ப்பகுதி
(C) நடுப்பகுதி
(D) மேல்பகுதி
(E) விடை தெரியவில்லை
விடை: (D) மேல்பகுதி
Question Source Link: Check Here
55. பொருந்தா சொல்லைக் கண்டறிதல்.
முரல், வகுலி, வாளை, வியாளம்
(A) முரல்
(B) வகுலி
(C) வாளை
(D) வியாளம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) வியாளம்
Question Source Link: Check Here
56. பிறவினைத் தொடரைக் கண்டறிக.
(A) அன்பு பாடல் பாடினான்.
(B) கவின்மொழி திருக்குறள் கற்றாள்.
(C) அடிகள் மறை ஓதினார்.
(D) அரசன் மாலை அணிவித்தான்.
(E) விடை தெரியவில்லை
விடை: (D) அரசன் மாலை அணிவித்தான்.
Question Source Link: Check Here
57. எவ்வகை வினை என்பதைக் கண்டறிக.
இரண்டாம் வேற்றுமையில் இருப்பது முதல் வேற்றுமையாகவும், முதல் வேற்றுமையில் இருப்பது மூன்றாம் வேற்றுமையாகவும் மாறும் வினை எப்போது நிகழும்?
(A) செய்வினை செயப்பாட்டு வினையாக ன றுல்போது
(B) செயப்பாட்டு வினை செய்வினையாக மாறும்போது
(C) தன்வினை பிறவினையாக மாறும்போது
(D) பிறவினை தன்வினையாக மாறும்போது
(E) விடை தெரியவில்லை
விடை: (A) செய்வினை செயப்பாட்டு வினையாக ன றுல்போது
Question Source Link: Check Here
58. ‘தனிமரம் காடாதல் இல்’ பழமொழி உணர்த்தும் பொருள்
(A) ஆசையும் அழிவும்
(B) தீயவரைத் தண்டித்தல்
(C) பகையை நீக்குதல்
(D) நட்பைப் பெருக்குதல்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) நட்பைப் பெருக்குதல்
Question Source Link: Check Here
59. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. – இக்குறள் உணர்த்தும் பழமொழியைக் கண்டறிக.
(A) | எறும்பு ஊரக் கல்லும் தேயும்
(B) ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே
(C) கிட்ட நெருங்க முட்டப்பகை
(D) குந்தித் தின்றால் குன்றும் மாளும்
(E) விடை தெரியவில்லை
விடை: (B) ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே
Question Source Link: Check Here
60. தோழன் என்று பொருள் தரும் காம்ரேட் என்ற சொல் எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?
(A) ஜப்பான் மொழி
(B) சீன மொழி
(C) போர்த்துக்கீசிய மொழி
(D) பிரெஞ்சு மொழி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) போர்த்துக்கீசிய மொழி
Question Source Link: Check Here
61. சரியான இணையைக் கண்டறிக :
(A) தாராபாரதி – ஆசியஜோதி
(B) முடியரசன் – வீரகாவியம்
(C) கவிமணி – இதய ஒலி
(D) இரசிகமணி – விரல் நுனி வெளிச்சங்கள்
(A) (2) -சரி
(B) (1) – சரி
(C) (4) – சரி
(D) (3) – சரி
(E) விடை தெரியவில்லை
விடை: (A) (2) -சரி
Question Source Link: Check Here
62. தொடரமைக்க:
விரிந்தது – விரித்தது
(A) மாலை நேரத்தில் அல்லி இதழ் விரித்தன; மயில் தோகை விரிந்தது
(B) மாலை நேரத்தில் அல்லி இதழ்கள் விரித்தன; மயில் தோகை விரிந்தன
(C) மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகை விரித்தது
(D) மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
(E) விடை தெரியவில்லை
விடை: (D) மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
Question Source Link: Check Here
63. கூற்று: கலைக் கழகம்’ என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும்.
காரணம்: இரண்டு சொற்களுக்கு இடையே ‘க்’ என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
(A) கூற்று – சரி: காரணம் – சரி
(B) கூற்று – சரி; காரணம் – தவறு
(C) கூற்று – தவறு: காரணம் – சரி
(D) கூற்று – தவறு: காரணம் – தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கூற்று – சரி: காரணம் – சரி
Question Source Link: Check Here
64. சேர்த்து எழுதுக: பலா + அருமை
(A) பலாஅருமை
(B) பலஅருமை
(C) பலாவருமை
(D) பலாப்பழம் அருமை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) பலாவருமை
Question Source Link: Check Here
65. பிரித்து எழுதுக: “கங்கெளகம்” – என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
(A) கங் + கெளகம்
(B) கங்கு + ஒகம்
(C) கங்க + ஓகம்
(D) கங்கா + ஓகம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) கங்கா + ஓகம்
Question Source Link: Check Here
66. “கோறல், கொல்லுதல்” – போன்ற பொருள்களைத் தரக்கூடிய ஒரு சொல்லைக் கண்டறிக.
(A) ஆடல்
(B) அரவு
(C) ஆடு
(D) அடுதல்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) அடுதல்
Question Source Link: Check Here
67. பறவை, பூ, நீக்கம், அழிவு ஆகிய பொருள்களைத் தரும் ஓர் எழுத்து
(A) கா
(B) வீ
(C) பூ
(D) மா
(E) விடை தெரியவில்லை
விடை: (B) வீ
Question Source Link: Check Here
68. பொருத்துக :
விலங்குகள் – இளமைப்பெயர்
(A) நவ்வி – 1. சினை
(B) முதலை – 2. ஓந்தி
(C) உடும்பு – 3. பார்ப்பு
(D) மீன், கெண்டை – 4. மறி
(A) 4 3 2 1
(B) 4 1 2 3
(C) 4 2 1 3
(D) 1 4 3 2
விடை: (B) 4 1 2 3
Question Source Link: Check Here
69. புல்லின் உறுப்பைக் கண்டறிக.
(A) தளிர்
(B) முறி
(C) குழை
(D) ஓலை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) தளிர்
Question Source Link: Check Here
70. “Monopoly Control” என்ற கலைச்சொல்லிற்கான தமிழ்ச் சொல்லைத் தருக.
(A) தனி ஆதிக்க விலை
(B) தளி வல்லாண்மைக் கட்டுப்பாடு
(C) தனி வல்லாளர்
(D) தனி வரைவு கட்டுப்பாடு
(E) விடை தெரியவில்லை
விடை: (B) தளி வல்லாண்மைக் கட்டுப்பாடு
Question Source Link: Check Here
71. பொருத்துக :
(a) Abulia – 1. சீழ்கட்டி
(b) Acomia – 2. உடல் வழுக்கை.
(C) Abscess – 3. மன உறுதிக் குறைபாடு.
(D) Alopecia Universalis – 4. தலை வழுக்கை
(E) விடை தெரியவில்லை
விடை: 3 4 1 2
Question Source Link: Check Here
72. சுதேசி நாவாய்ச் சங்கத்தை நிறுவியவர் யார்?
விடை: வ.உ. சிதம்பரனார்
73. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
விடை: பாரதியார்
74. வ.உ.சி. அவர்கள் புலமை பெற்றிருந்த மொழிகள் யாவை?
விடை: தமிழ், ஆங்கிலம்
75. நான்மணிக்கடிகை என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் இயற்பெயரைச் சுட்டுக.
விடை: நாகனார்
76. ‘மண்ணோடியைந்த மரத்தனையர்’ என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
விடை: இரக்கம் இல்லாதவர்
77. கூற்று: ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்களுக்குக் சுட்டு எழுத்துக்கள் என்று பெயர்.
காரணம்: ௭. யா, ஆ, ஓ, ஏ என்பன சுட்டெழுத்துகளாக வந்து பிறவற்றைச் சுட்டுகிறது.
(A) கூற்று – சரி; காரணம் – தவறு
(B) கற்று – தவறு; காரணம் – சரி
(C) கூற்று- சரி; காரணம் – சரி
(D) கூற்று – தவறு; காரணம் – தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (A) கூற்று – சரி; காரணம் – தவறு
Question Source Link: Check Here
78. கூற்று: அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம் என்பன சுட்டுச் சொற்களாகும்.
காரணம்: இடப்பொருளைச் சுட்டுவதற்காக அ, இ, உ வந்துள்ளது.
(A) கூற்று – சரி; காரணம் – தவறு
(B) கூற்று – தவறு; காரணம் – சரி
(C) கூற்று – சரி; காரணம் – சரி
(D) கூற்று, காரணம் இரண்டும் தவறு
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கூற்று – சரி; காரணம் – சரி
Question Source Link: Check Here
79. பொருந்தாத இணையைக் கண்டறிக.
(A) ஏ – எ
(B) த – ந
(C) ஐ – அ
(D) ற – ன
(E) விடை தெரியவில்லை
விடை: (C) ஐ – அ
Question Source Link: Check Here
80. நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
(A) 42
(B) 40
(C) 82
(D) 70
(E) விடை தெரியவில்லை
விடை: (D) 70
Question Source Link: Check Here
81. ——————-உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
(A) மடவம் X மடந்தை
(B) உரவோர் ஆயின் X உரவோர் ஆக
(C) உரவோர் X மடந்தை
(D) உரவோர் X மடவம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) உரவோர் X மடவம்
Question Source Link: Check Here
82. ஒருவர் அல்லது நூல் கூறும் கூற்றை விளக்குமிடத்து பயன்படுத்த வேண்டிய நிறுத்தற்குறியைக் கண்டறிக.
(A) காற்புள்ளி
(B) அரைப்புள்ளி
(C) முக்காற்புள்ளி
(D) முற்றுப்புள்ளி
(E) விடை தெரியவில்லை
விடை: (C) முக்காற்புள்ளி
Question Source Link: Check Here
83. வரலாற்றியலில் ‘Whitehall’ – என்னும் சொல்லிற்கு இணை கண்டறிக.
(A) வெள்ளை மாளிகை — அமெரிக்கா –
(B) ரஷ்ய – மாளிகை
(C) வாடிகன் – மாளிகை
(D) பிரிட்டானிய அரசு அலுவலகம்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) பிரிட்டானிய அரசு அலுவலகம்
Question Source Link: Check Here
84. இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக :
(a) Dark Fiber – 1. பின்னணி நிரல்
(b) Demon – 2. அடர்த்தி
(c) Darkest – 3. மிகு இருள்மை
(d) Density- 4. இருட்டு இழை
(e) விடை தெரியவில்லை
(A) 4 2 3 1
(B) 4 1 3 2
(C) 1 3 4 2
(D) 2 4 1 3
விடை: (B) 4 1 3 2
Question Source Link: Check Here
85. மரபுத் தொடர்களுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
(A) அடரடி படரடி – 1. சித்தி அடைதல்
(B) அகட விகடம் – 2. உறுதியின்மை
(C) ஈரொட்டு – 3. தந்திரம்
(D) கை கூடுதல் – 4. பெருங்குழப்பம்
(A) 4 1 2 3
(B) 4 3 2 1
(C) 3 4 2 1
(D) 3 2 4 1
விடை: (B) 4 3 2 1
Question Source Link: Check Here
86. மரபுத் தொடரைத் தேர்ந்தெடு
காட்டில் சிங்கம் , யானை _
(A) அலறும், கத்தும்
(B) உறுமும், பிளிறும்
(C) முழங்கும், பிளிறும் ,
(D) உறுமும், கத்தும்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) முழங்கும், பிளிறும்
Question Source Link: Check Here
87. பூட்கை” என்ற சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
(A) படுக்கை –
(B) உடல்
(C) குறிக்கோள்
(D) மலை
(E) விடை தெரியவில்லை
விடை: (C) குறிக்கோள்
Question Source Link: Check Here
88. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் ______
(A) இரா. இளங்குமரனார்
(B) ௧. அப்பாத்துரையார்
(C) தேவநேயப் பாவாணர்
(D) சி. இலக்குவனார்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) தேவநேயப் பாவாணர்
Question Source Link: Check Here
89. தமிழ்ச் சொல்லைக் கண்டறிக :
(A) காதி
(B) சாவடி –
(C) சாம்பார்
(D) ௨டுக்கை
(E) விடை தெரியவில்லை
விடை: (D) ௨டுக்கை
Question Source Link: Check Here
90. திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை .- தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக :
(a) போர்ச்சுக்கீசிய மொழி – 1. 34
(b) தெலுங்கு மொழி – 2. 486
(c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி – 3. 06
(d) ஆங்கில மொழி – 4. 411
(e) விடை தெரியவில்லை
(A) 4 1 2 3
(B) 4 3 2 1
(C) 3 1 4 2
(D) 3 4 1 2
விடை: (C) 3 1 4 2
Question Source Link: Check Here
91. பெயரெச்சங்களின் வகை அறிந்து பொருத்துக :
(a) நிகழ்காலப் பெயரெச்சம் -1. இல்லாத பொருள்.
(b) உடன்பாட்டுப் பெயரெச்சம் – 2. அறிந்த பையன்
(c) குறிப்புப் பெயரெச்சம் – 3. ஓடுகிற குதிரை
(d) ஈறுகெடாத பெயரெச்சம் – 4. அறியாத குழந்தை
(e) விடை தெரியவில்லை
(A) 3 2 4 1
(B) 4 1 2 3
(C) 1 2 4 3
(D) 4 2 1 3
விடை: (A) 3 2 4 1
Question Source Link: Check Here
92. நாட்டில் பின்னால் நிகழப்போவதை முன்னரே அறிந்து கொள்பவரின் பெயர் __ என்ற பெயரால் அழைப்பர்.
(A) மறவி
(B) நீறவர்
(C) மறதி
(D) நீரவர்
(E) விடை தெரியவில்லை
விடை: (D) நீரவர்
Question Source Link: Check Here
93. குதிர்தல் – இணையான வேறு சொல்லறிக.
(A) படிதல்
(B) குடியமர்தல்
(C) ஒழுங்காதல்
(D) சீராதல்
விடை: (D) சீராதல்
Question Source Link: Check Here
94. எழுத்துப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
(A) எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
(B) எலும்பியிருக்க வேண்டுவன எலும்பி இனிதாகத் தோன்றும் அழகு
(C) எளும்பியிருக வேண்டுவன எளும்பி இனிதாகத் தோன்றும் அழகு
(D) இவை எதுவும் இல்லை
(E) விடை தெரியவில்லை
விடை: (A) எழும்பியிருக்க வேண்டுவன எழும்பி இனிதாகத் தோன்றும் அழகு
Question Source Link: Check Here
95. அஃறிணைத் தொடரைக் கண்டறிக. .
(A) மலர்கள் மலர்ந்தன
(B) மக்கள் கூடினர்
(C) மாணவர்கள் விளையாடினர்
(D) ஆசிரியர்கள் மகிழ்ந்தனர்
(E) விடை தெரியவில்லை
விடை: (A) மலர்கள் மலர்ந்தன
Question Source Link: Check Here
96. ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
(A) அவர் கோவிலுக்குச் சென்றனர்.
(B) மரம் முறிந்து விழுந்தன.
(C) சீவகனிடம் விடாமுயற்சி இருந்தது. ச
(D) சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.
(E) விடை தெரியவில்லை
விடை: (D) சிறுவர் தெருவில் ஓடி விளையாடினர்.
Question Source Link: Check Here
97. தென்னிந்தியாவின் ஸ்பா” என்றழைக்கப்படும் அருவியைக் கண்டறிக.
விடை: குற்றால அருவி
98. தமிழ் வளர்ச்சித் துறை – கொள்கை விளக்கக் குறிப்பு 2024-2025
1.6 – கனவு இல்லம் :
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “கனவு இல்லம் திட்டம்” தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, சாகித்ய அகாதெமி, ஞானபீட விருது, தொல்காப்பியர் விருது, கலைஞர். மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது (தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு மட்டும்) மற்றும் நோபல் பரிசு இலக்கியம் (தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கியப் பணிகளுக்கு பெற்றிருப்பின்) ஆகிய விருதுகளைப் பெற்ற விருதாளர்களுக்கு 2021-2022-ஆம் நிதியாண்டு முதல் . செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்டி ஒவ்வொரு நிதியாண்டிலும் அதிகபட்சமாக 10 விருதாளர்களுக்கு வீடு வழங்கப்படுகிறது.
“கனவு இல்லத் திட்டத்தின் சார்பாக ஒவ்வொரு. நிதியாண்டிலும் எத்தனை விருதாளர்களுக்கு இல்லம் வழங்கப்படுகிறது என்பதைக் கண்டறிக.
விடை: 10
Question Source Link: Check Here
99. Proposal எனும் சொல்லிற்கான இணையான சொல்லைத் தருக.
(A) உண்மை ௨௫
(B) பொய் ௨௫
(C) கருத்துரு
(D) எண்ண ௨௫
(E) விடை தெரியவில்லை
விடை: (C) கருத்துரு
Question Source Link: Check Here
100. “Irrigation Technology” – என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லறிக.
(A) தகவல் தொழில்நுட்பம்
(B) சூழலியல் தொழில்நுட்பம்
(C) நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
(D) வெப்ப மண்டலத் தொழில்நுட்பம்
(E) விடை தெரியவில்லை
விடை: (C) நீர்ப்பாசனத் தொழில்நுட்பம்
Question Source Link: Check Here
🌐 Important Website and Social Media Links:
- 🌍 Official Website: Tamil Mixer Education
- 💬 WhatsApp Group: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 TAMIL FINAL ANSWER KEY – TNPSC Group 4 – 2025 – Download now and check your answers!