Home Notes All Exam Notes தொடர் வாக்கியங்கள் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

தொடர் வாக்கியங்கள் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

0
தொடர் வாக்கியங்கள் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!
தொடர் வாக்கியங்கள் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

தொடர் வாக்கியங்கள் முக்கிய வினா விடைகள் – TNPSC, அரசு தேர்வுகளுக்கு உதவும்!

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான தொடர் வாக்கியங்கள் பற்றிய முக்கிய வினா-விடைகள் இங்கே! இந்த வினா-விடைகள் உங்கள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான தமிழ் இலக்கணம் பகுதிக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும்.

தொடர் வாக்கியங்கள் என்பது எளிமையாக ஒரு தொடர்புடைய சுயவிவரங்களைக் கூறி ஒரு கருத்தை விவரிக்கும் வாக்கியங்களை குறிக்கின்றது. இந்த க்விஸ் மூலம், தொடர் வாக்கியங்களை பற்றிய உங்கள் அறிவை மேம்படுத்துங்கள்.

1) சொற்றொடர் எழுதுவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச் சொல் _

அ) பயனிலை ஆ) எழுவாய்
இ) பெயரடை ஈ) வினையடை

விடை: ஆ) எழுவாய்

2) கீழே உள்ளவற்றில் வினைப் பயனிலையைத் தேர்ந்தெடு

அ) சொன்னவள் கலா ஆ) நான் வந்தேன்
இ) படித்தாய் ஈ) பந்து உருண்டது

விடை: ஆ) நான் வந்தேன்

3) பின்வருவற்றுள் கூற்றினை ஆராய்க

1. ஒரு தொடரில் எழுவாயும் செய்ப்படு பொருளும் பெயர்ச் சொல்லாகவும் பயனிலை வினைமுற்றாகவும் இருக்கும்.
2. ஒரு தொடரில் செய்ப்படு பொருள் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம்
இல்லை.
3. செயப்படு பொருள் தோன்றும் தொடர் விளக்கமாக இருக்கும்.

அ) 1 மட்டும் சரி ஆ) 2 மட்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) அனைத்தும் சரி

விடை: ஈ) அனைத்தும் சரி

4) ‘மீனா கனகாம்பரத்தைச் சு+டினாள்’ – என்னும் தொடரில் ‘கனகாம்பரம்’ என்பது

அ) எழுவாய் ஆ) பயனிலை
இ) செய்படு பொருள் ஈ) வினை பயனிலை

விடை: இ) செய்படு பொருள்

5) ‘படித்தாய்’ என்னும் சொல் என்பது

அ) வினைப் பயனிலை ஆ) எழுவாய்
இ) தோன்றா எழுவாய் ஈ) வினையடை

விடை: இ) தோன்றா எழுவாய்

6) பொருத்துக

1. வினைப் பயனிலை – விளையாடுபவன் யார்
2. வினைப் பயனிலை – நான் வந்தேன்
3. பெயர்ப் பயனிலை – சொன்னவள் கலா

அ) 123 ஆ) 213 இ) 312 ஈ) 231

விடை: ஆ) 213

7) நல்ல நூல் ஒன்று படித்தேன் என்பது –

அ) வினைப் பயனிலை ஆ) எழுவாய்
இ) வினையடை ஈ) பெயரடை

விடை: ஈ) பெயரடை

8) மகிழ்நன் மெல்ல வந்தான் என்பது

அ) வினைப் பயனிலை ஆ) தோன்றா எழுவாய்
இ) வினையடை ஈ) பெயரடை

விடை: இ) வினையடை

9) உருட்ட வைத்தான் என்பது

அ) தன்வினை ஆ) பிற வினை
இ) செய்வினை ஈ) செயப்பாட்டு வினை

விடை: ஆ) பிற வினை

10) அவர்கள் நன்றாகப் படித்தனர் என்பது

அ) தன்வினை ஆ) பிறவினை
இ) செய்வினை ஈ) செயப்பாட்டு வினை

விடை: அ) தன்வினை

11) கூற்றினை ஆராய்க

1.அவன் திருந்தினான் – தன்வினை
2. பள்ளிக்குப் புத்தகய்கள வருவித்தார் – தன்வினை
3. தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார் – பிறவினை

அ) 1 மட்டும் சரி ஆ) 1ம் 2ம் சரி
இ) 1ம் 3ம் சரி ஈ) அனைத்தும் சரி

விடை: இ) 1ம் 3ம் சரி

12) செய்யபாட்டு வினைத்தொடர் அல்லாததைத் தேர்ந்தெடு

அ) தோசை வைக்கப்பட்டது ஆ) பாட்டு;ப் பாடப்பட்டது
இ) உரை கவிதாவால் படிக்கப்பட்டது ஈ) பாட்டு பாடுகிறாள்

விடை: ஈ) பாட்டு பாடுகிறாள்

13) என் அண்ணன் நாளை வருவான் என்பது

அ) தன்வினைத் தொடர் ஆ) பிறவினைத் தொடர்
இ) உடன்பாட்டு வினைத்தொடர் ஈ) செய்தித் தொடர்

விடை: ஈ) செய்தித் தொடர்

14) குமரன் மழையில் நனைந்தான் என்பது

அ) தன்வினைத் தொடர் ஆ) பிறவினைத் தொடர்
இ) உடன்பாட்டு வினைத்தொடர் ஈ) செய்தித் தொடர்

விடை: இ) உடன்பாட்டு வினைத்தொடர்

15) அப்துல் நேற்று வருவித்தான் என்பது

அ) தன்வினைத் தொடர் ஆ) பிறவினைத் தொடர்
இ) உடன்பாட்டு வினைத்தொடர் ஈ) செய்தித் தொடர்

விடை: ஆ) பிறவினைத் தொடர்

16) கீழ்வருவனவற்றில் தவறான கூற்றைத் தேர்ந்தெடு

அ) உள்ளே பேசிக் கொண்டிருப்பவர் யார்? – வினாத் தொடர் ஆ) குமரன் மழையில் நனையவில்லை – எதிர்மறை வினைத் தொடர்
இ) இது நாற்காலி – வினைப் பயனிலைத் தொடர் ஈ) எவ்வளவு உயரமான மரம் – உணர்ச்சித் தொடர்

விடை: இ) இது நாற்காலி – வினைப் பயனிலைத் தொடர்

17) தனிவாக்கியம் குறித்த கீழ்கண்டவற்றுள் சரியானது எது?

அ) வினாப் பொருள் தரும் வாக்கியம்
ஆ) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்.
இ) தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும.; ஈ) ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்.

விடை: ஆ) ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்.

18) செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறி

அ) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது.
ஆ) தச்சன் நாற்காலியைச் செய்தான்.
இ) நாற்காலியை செய்தவன் தச்சன்
ஈ) நாற்காலியைத் தச்சன் செய்தான்.

விடை: அ) நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது.

19) வாக்கியங்களைக் கவனி:

கூற்று (யு) எ.கா: “நான் புத்தகம் கொண்டு வருகிறேன்” என்று பவானி காயத்ரியிடம் கூறினாள்.
காரணம் (சு): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறுpயீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம் பெறும் என்பது நேர்க்கூற்று.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டுமட சரி மேலும் காரணம் என்பது கூற்றுவிற்கு சரியான விளக்கமல்ல.
ஆ) இவற்றுள் கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
இ) இவற்றுள் கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் என்பது கூற்றுவிற்கு சரியான விளக்கம்.

விடை: ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் என்பது கூற்றுவிற்கு சரியான விளக்கம்.

20) எவ்வகை வாக்கியம்?

மாணவன் பாடம் படித்திலன்

அ) எதிர்மறைத் தொடர் ஆ) பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
இ) உடன்பாட்டுத் தொடர் ஈ) கலவைத் தொடர்

விடை: அ) எதிர்மறைத் தொடர்

21) செயப்பாட்டு வினைச் சொறிறொடரைக் கண்டறிக

அ) வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார். ஆ) தொல்காப்பியம் வ.உ.சியால் பதிப்பிக்கப்பட்டது
இ) பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி
ஈ) வ.உ.சி பதிப்பித்தது தொல்காப்பியம்

விடை: ஆ) தொல்காப்பியம் வ.உ.சியால் பதிப்பிக்கப்பட்டது

22) வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக

அ) தனி வாக்கியம் ஆ) கலவை வாக்கியம்
இ) செய்யப்பாட்டு வினை வாக்கியம் ஈ) பிறவினை வாக்கியம்

விடை: அ) தனி வாக்கியம்

23) பிறவினை வாக்கியத்தைக் கண்டறிக:

அ) புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.
ஆ) அகநானூற்றுப் பாடல்களை மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திர சன்மர் தொகுத்தார்.
இ) அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான். ஈ) ஐற்குநூறு நூலைப் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுத்தார்.

விடை: இ) அகநானூற்றைப் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி தொகுப்பித்தான்.

24) பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

அ) அவHகளிருவருக்கும் இடையே கான்வர்கேசன் நடந்தது. ஆ) அவர்களிருவருக்கும் இடையே விவாதம் நடந்தது.
இ) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது. ஈ) அவர்களிருவருக்கும் இடையே ஸ்பீச் நடந்தது.

விடை: இ) அவர்களிருவருக்கும் இடையே உரையாடல் நடந்தது.

25) குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்;
செய்வினையை செய்யப்பாட்டு வினையாக மாற்றுக

அ) குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கினார்;. ஆ) உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவH தொடங்கினாH.
இ) குடியரசுத் தலைவர் தொடங்கினார் உலகத் தமிழ் மாநாட்டை ஈ) உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப் பெற்றது.

விடை: ஈ) உலகத் தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப் பெற்றது.

26) செயப்பாட்டு வினைச் சொற்றொடரைக் கண்டறிக

அ) நாடகக் கலைஞர்கள் நாட்டுப்பற்றை வளர்த்தனர்
ஆ) நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது
இ) வளர்த்தனர் நாட்டுப்பற்றை நாடகக் கலைஞHகளால்
ஈ) நாட்டுப்பற்றை நாடகக்கலைஞர் வளHப்பார்

விடை: ஆ) நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது

27) பொருத்துக

1) மக்கள் பெரியாரைப் போற்றுகின்றனர் – செய்தி வாக்கியம்
2) பெரியார் மக்களால் போற்றப்படுகின்றார் – உணர்ச்சி வாக்கியம்
3) என்னே! பெரியாரின் பொதுநலத் தொண்டு – செய்வினை
4) பெரியாரை அனைத்து மக்களும் போற்றுவர் – செயப்பாட்டு வினை

அ) 1234 ஆ) 2143 இ) 3421 ஈ) 4213

விடை: இ) 3421

28) பொருத்துக

1) தனிவாக்கியம் – யார் கல்விச் செல்வம் பெறுகிறார்களே அவர்கள் வாழ்வு வளம் பெறும்
2) வினா வாக்கியம் – பாலு கந்தனை வணங்கினான்
3) கட்டளை வாக்கியம் – குழந்தைக்கு என்ன தெரியும்?
4) கலவை வாக்கியம் – எழுந்து நில்!

அ) 1234 ஆ) 4321 இ) 2143 ஈ) 2341

விடை: ஈ) 2341

29) நேற்று மழை பெய்தது: அதனால் ஏரி குளங்கள் நிரம்பின – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக

அ) தொடர் வாக்கியம் ஆ) கலவை வாக்கியம் இ) கட்டளை வாக்கியம் ஈ) தனிநிலை வாக்கியம்

விடை: அ) தொடர் வாக்கியம்

30) நன்னூல் எவ்வகை நூல்?

அ) செய்தி வாக்கியம் ஆ) விழைவு வாக்கியம் இ) கட்டளை வாக்கியம் ஈ) வினா வாக்கியம்

விடை: ஈ) வினா வாக்கியம்

31) கீழ்கண்டவற்றில் பிறவினைத் தொடரைக் கூறு

அ) பாத்திமா தமிழ் கற்றாள் ஆ) பாத்திமா தமிழ் கற்பித்தாள் இ) பாத்திமா மாணவர்களிடம் கூறினாள்
ஈ) பாத்திமாவிடம் மாணவன் தான் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள்

விடை: ஆ) பாத்திமா தமிழ் கற்பித்தாள்

32) பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார் எவ்வகைத் தொடர்?

அ) உணர்ச்சித் தொடர் ஆ) வினாத் தொடர் இ) கட்டளைத் தொடர் ஈ) செய்தித் தொடர்

விடை: ஈ) செய்தித் தொடர்

33) பிழையில்லாமல் இலக்கணத்தைக் கல் – தன் வினை வாக்கியத்திற்குச் சரியான பிறவினை வாக்கியத்தைத் தேர்க

அ) பிழையில்லாமல் இலக்கணத்தை எழுது
ஆ) பிழையில்லாமல் இலக்கணத்தைக் கற்பி
இ) பிழையில்லாமல் இலக்கணத்தைப் படி
ஈ) பிழையில்லாமல் இலக்கணத்தைப் பேச்சு

விடை: ஆ) பிழையில்லாமல் இலக்கணத்தைக் கற்பி

34) துணி கலையரசியால் தைக்கப்பட்டது – இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு

அ) கலையரசி துணி தைத்தாள்
ஆ) கலையரசி தைத்தால் துணி
இ) கலையரசி என்ன தைத்தாள்
ஈ) கலையரசி துணியைத் தைத்தாள்

விடை: ஈ) கலையரசி துணியைத் தைத்தாள்

35) பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரை எடுத்து எழுது

அ) சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது
ஆ) திருநெல்வேலி சமஸ்தானம் பெரியது
இ) விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்
ஈ) வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்

விடை: ஈ) வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்

36) “எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்” எவ்வகைத் தொடர்

அ) செயப்பாட்டு வினைத் தொடர் ஆ) கட்டளைத் தொடர் இ) அயற்கூற்றுத் தொடர் ஈ) செய்வினைத் தொடர்

விடை: ஈ) செய்வினைத் தொடர்

37) கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு அயற்கூற்றில் வருவன

அ) மேற்கோள்குறிகள் வராது
ஆ) தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது இ) அது, அவை – அங்கே என மாறும்
ஈ) காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்

விடை: ஆ) தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது

38) பொருத்துக

1) என்னே, மயிலின் அழகு! – எதிர்மறைத் தொடர்
2) கண்ணன் பாடம் படித்திலன் – உணர்ச்சித் தொடர்
3) மணிமொழி பரிசு பெற்றாள் – கட்டளைத் தொடர்
4) உழைத்துப் பிழை – உடன்பாட்டுத் தொடர்

அ) 3421 ஆ) 3412 இ) 2143 ஈ) 2314

விடை: இ) 2143

39) வாக்கிய அமைப்பைக் கண்டறிதல்
பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்-
எவ்வகை வாக்கியம்

அ) தனி வாக்கியம் ஆ) கலவை வாக்கியம்
இ) செயப்பாட்டு வினை வாக்கியம் ஈ) பிறவினை வாக்கியம்

விடை: அ) தனி வாக்கியம்

40) கட்டளை வாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

அ) வினாப்பொருள் தரும் வாக்கியம்
ஆ) விழைவு, வேண்டல், வாழ்த்தல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம்
இ) ஒரு செய்தியைத் தெரிவிக்கும் வாக்கியம்
ஈ) தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வருவது

விடை: ஆ) விழைவு, வேண்டல், வாழ்த்தல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைத் தெரிவிக்கும் வாக்கியம்

41) பொருத்துக

1) செய்தித் தொடர் – உண்மைக்கு அறிவில்லை அல்லவா?
2) உணர்ச்சி வாக்கியம் – மாணவர் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்
3) கட்டளை வாக்கியம் – ஆஹா! என்னே அழகு!
4) வினா வாக்கியம் – அனைவரும் தாய்மொழியைப் போற்றுக

அ) 2341 ஆ) 3421 இ) 1234 ஈ) 4123

விடை: அ) 2341

42) எது செய்தி வாக்கியம் இல்லை?

அ) மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்
ஆ) குடியரசுத் தலைவர் சென்னைக்கு வருகை தந்தார்
இ) மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக
ஈ) திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்

விடை: இ) மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக

43) தன் வினை வாக்கியத்தைக் கண்டறிக

அ) பரிதிமாற் கலைஞர் வடமொழியும் தமிழும் பயின்றார்
ஆ) பரிதிமாற் கலைஞர் வடமொழியும் தமிழும் பயிற்றுவித்தார்
இ) பரிதிமாற் கலைஞர் வடமொழியும், தமிழும் பயிலார்
ஈ) பரிதிமாற் கலைஞரால் வடமொழியும், தமிழும் பயிற்றுவிக்கப்பட்டது

விடை: அ) பரிதிமாற் கலைஞ வடமொழியும் தமிழும் பயின்றார்

சமூகம் மற்றும் பயிற்சி

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான தொடர் வாக்கியங்கள் வினா-விடைகள் உங்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும். அவற்றை பழகி, தமிழ் இலக்கணம் சார்ந்த தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 தொடர் வாக்கியங்கள் முக்கிய வினா-விடைகள் க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

PRINTOUT 50 PAISE LOW COST

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version