Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
வங்கிப் பணியிடத்
தேர்வுக்கு
இலவச பயிற்சி வகுப்புகள்
பாரத
ஸ்டேட் வங்கி பணியிடத்
தேர்வுக்கு
விண்ணப்பித்துள்ளவா்கள், மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகம்
சார்பில் இலவசப் பயிற்சி
வகுப்புகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பாரத
ஸ்டேட் வங்கி வாயிலாக
நன்னடத்தை அலுவலா்கள் பணியிடத்திற்கு 2000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடத்திற்கு முதன்மைத் தோவு வரும்
டிச. 31, ஜன. 2, 4, 5 ஆகிய
நாள்களில் நடைபெற உள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வா்களுக்கு மாவட்ட
வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டுதல் மையம்
சார்பில் இலவசப் பயிற்சி
வகுப்புகள் இணைய வழியில்
நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் தங்கள்
விவரங்களைப் பதிவேற்றம் செய்ய
வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது
தொலைபேசி எண் 04342- 296188 வாயிலாகவோ
தொடா்பு கொள்ளலாம்.
இந்த
வங்கிப் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு எழுதவுள்ள இளைஞா்கள், மாற்றுத்
திறனாளிகள் இணைய வழி
இலவசப் பயிற்சி வகுப்பில்
சோந்து பயன்பெறலாம்.