Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
உதவித் தொகையுடன் வேலைவாய்ப்பு பயிற்சி
– மகளிரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
கோவை
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி சேர்க்கைக்கான கால
அவகாசம் டிச.,12 ம்
தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேட்டுப்பாளையம் ரோடு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இப்பயிற்சி மையம் அமைந்துள்ளது.
இங்கு,
ஓராண்டு தொழிற்பிரிவு படிப்புகளில், ஐ.ஓ.டி.டெக்னீசியன் மற்றும் டெஸ்க்டாப் பப்ளிசிங்
ஆபரேட்டர் போன்ற தொழிற்பிரிவுகளிலும், ஈராண்டு தொழிற்பிரிவுகளில் இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் மற்றும் இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி சிஸ்டம் மெயின்டனன்ஸ் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கும், நேரடி
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்ற
மகளிர் இதற்கு விண்ணப்பிக்கலாம்; வயது வரம்பு
ஏதுமில்லை. பயிற்சியை முடிப்பவர்களுக்கு மத்திய அரசின்
சான்றிதழ் வழங்கப்படும்.
அனைத்து
பயிற்சியாளர்களுக்கும் மாதம்,
750 ரூபாய் உதவித்தொகை, இலவச
லேப்டாப், சைக்கிள், சீருடை,
காலணி, பாடபுத்தகங்கள், வரைபட
கருவிகள், இலவச பஸ்பாஸ்,
ஆகியவை வழங்கப்படும். பயிற்சி
முடிக்கும் நிலையில், வளாக
நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
மேலும்,
விபரங்களுக்கு 94990-55692/
98651-28182/ 94434-29953 என்ற எண்களை தொடர்பு
கொள்ளலாம்.