Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி போட்டிகள்

Bharani· 2 min readபகிர ↗
ராணுவத்தினர் தியாகத்தை பரப்பும் வகையில்  பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி போட்டிகள்.
எஸ் பவுண்டேஷன் அறக்கட்டளை அறிவிப்பு 
ராணுவத்தினரின் தியாகத்தைப் பரப்பும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையத்தின் மூலம் பல்வேறு போட்டிகளை நடத்தவுள்ளதாக  எஸ் பவுண்டேஷன் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வகையில் எஸ் பவுண்டேஷன் அறக்கட்டளை என்ற அமைப்பு ‘மறத்தல் தகுமோ’ என்ற தலைப்பில் ஆண்டுதோறும் பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. 
இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணையத்தின் மூலம் புதுமொழி எழுதுதல் (ஸ்லோகன்), கையெழுத்து ஆகிய போட்டிகளும், கல்லூரி மாணவர்களுக்கு கூடுதலாக டிஜிட்டல் போஸ்டர் தயாரிப்பு. தனித்திறனை வெளிப்படுத்தும் வீடியோ தயாரிப்பு ஆகிய போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
இப்போட்டிகள் குறித்த முழு விவரங்களையும் https://sfoundationindia.wordpress.com/online-competitions-2020/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 
போட்டிகளுக்கான படைப்புகளை செப்டம்பர் 30.ம் தேதிக்குள் sfoundationinfo@gmail.com என்ற மின்னச்சலுக்கு அனுப்ப வேண்டும். படைப்புகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கு ரொக்கப் பரிசும், போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த தகவலை எஸ் பவுண்டேஷன் அறக்கட்டளையின் அறங்காவலர் வழக்கறிஞர் சுமதி தெரிவித்துள்ளார்    
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download



Check Related Post:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here