Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

அந்தமான் ஐ.ஏ.எஸ்., அருள்நிதியின் ‘ஆன்லைன்’ இலவச பயிற்சி

Bharani· 2 min readபகிர ↗
அந்தமானில் தொலைத்தொடர்பு துறை இணை கமிஷனராக பணியாற்றும், பழநியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அருள்நிதி, ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஏழாண்டுகளாக இலவச ஆலோசனை வழங்கி வருகிறார்.இவரிடம் ஆலோசனை பெற்ற 3 பேர் இந்தாண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தேர்வாகியுள்ளனர். தமிழை விருப்பப்பாடமாக கொண்டு தேர்வெழுதும் மாணவர்கள் தான் இவரது இலக்கு என்கிறார்.
இவர் கூறியதாவது: மருத்துவக் கனவைத் தாண்டி மாணவர்கள் சாதிக்க வேண்டிய துறையாக ஐ.ஏ.எஸ்., உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஆக தேர்வானவர்கள் எண்ணிக்கை குறைவு தான். நகர்ப்புற மாணவர்களுக்கு யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு பயிற்சி அளிக்க நிறைய மையங்கள் உள்ளன. கிராமப்புற மாணவர்களால் அவ்வளவு பணம் செலுத்தி படிக்க முடியாது.
கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக ‘பிரிலிமினரி’ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தடுத்த தேர்வுக்கு தயாராவது, நேர்முகத் தேர்வுக்கு தயாராவது குறித்து பயிற்சி அளிக்கிறேன். ஞாயிற்று கிழமைகளில் இரண்டு மணி நேரம் ‘ஆன்லைன்’ வழியே ஆலோசனை வழங்குகிறேன். தமிழகம் வரும் போது பழநி சென்று ஆயக்குடி இலவச பயிற்சி மைய மாணவர்களுக்கு இலவசமாக பாடம் நடத்துகிறேன். நேரம் கிடைக்கும் போது இ-மெயில் மூலமாகவும் பயிற்சி அளிக்கிறேன் என்றார்.மெயில் மூலம் தொடர்பு கொள்ள mathiramanan@gmail.com
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections


👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்) 

50 Rs. – Click here to Pay & Download  (After payment you will receive PDF by Mail) 


✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections

👉ஜனவரி – மே 2020  (150 பக்கங்கள்) 

30 Rs. – Click here to Pay & Download

Check Related Post:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here