Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
பழங்குடியின மாணவருக்கு போட்டித்தேர்வு இலவச
பயிற்சி–நாமக்கல்
பழங்குடியினர் நலத்துறை மூலம், நாமக்கல்
மாவட்டத்தில் வசிக்கும்
வேலைவாய்ப்பற்ற, பழங்குடியின மக்கள், அரசு மற்றும்
பொதுத் துறை நிறுவனங்களில் வேலையில் சேர்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
டி.என்.பி.எஸ்.சி.,
– யு.பி.எஸ்.சி.,
– எஸ்.எஸ்.சி.,
ரயில்வே, வங்கி, டி.ஆர்.பி.,
ஆகியவற்றால் நடத்தப்படும் போட்டி
தேர்வுகளுக்கு ஏதுவாக,
நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி கிராமத்தில் உள்ள,
அரசு பழங்குடியினர் நல
உறைவிட ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலவச பயிற்சி
மையம் துவங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி மையத்தில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின, தகுதியான
படித்த மாணவர்கள், இளைஞர்கள்
(ஆண்கள், பெண்கள்) இலவச
பயிற்சி பெற்று பயன்
பெறலாம். இப்பயிற்சி, 50 நாட்களுக்கு அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள், நேரில் சென்று, பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை, அப்பள்ளி
தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சி துவங்கும்
தேதி, உத்தேசமாக, ஜன.,
2021ல், பயிற்சி வகுப்புகள் துவங்கும்.