Buy Exam Books Here |
|
To Join Whatsapp |
|
To Follow FaceBook |
|
To Join Telegram Channel |
|
To Follow Twitter |
|
To Follow Instagram |
டிஎன்பிஎஸ்சி 2021ம் ஆண்டில் 42 வகையான தேர்வுகளை நடத்துகிறது. மே மாதம் குரூப் 2, செப்டம்பரில் குரூப் 4-விஏஓ தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள தேர்வு விவர பட்டியல்: 2021ம் ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அதன் இணையதளமான www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: டிஎன்பிஎஸ்சி 2021ம் ஆண்டு 42 வகையான பதவிகளுக்கு தேர்வு நடத்தும். குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும்.
குரூப் 4 தேர்வுக்கான (குரூப் 4, விஏஓ தேர்வு) அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். ஒருங்கிணைந்த இன்ஜினீயர் தேர்வு ஏப்ரல் மாதமும், ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ்(குரூப் 3) தேர்வு ஜூலை மாதமும் அறிவிப்பு வெளியிடப்படும்.
2020 ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்ட துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி, வணிகவரித்துறை உதவி ஆணையர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் மாவட்ட அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், கூட்டுறவு சங்கம் துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப் 1 பதவிகளுக்கான தேர்வு வருகிற 3ம் தேதி நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.