
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 10
TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.
இந்த Part 10 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 8
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9
விடைகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் கீழ கமெண்டில் தெரிவிக்கவும்
1. இன்பத் தமிழ்எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் – இத்தொடரில் விளைவு என்ற சொல்லின் பொருள் என்ன?
(A) விளைச்சல் (B) வளர்ச்சி (C) விவசாயம் (D) இவை அனைத்தும்
விடை: (B) வளர்ச்சி
2. இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்- என்று பாடியவர் யார்?
(A) நாமக்கல் கவிஞர் (B) கலாப் பிரியா (C) பாரதிதாசன் (D) மு.மேத்தா
விடை: (C) பாரதிதாசன்
3. பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்களில் பொருத்தமற்றது?
(A) தமிழ்ச்சிட்டு (B) தமிழ்நிலம் (C)தேன்மொழி (D) தமிழ்க்கனி
விடை: (D) தமிழ்க்கனி
4. பொருந்துக: எண்களும் தமிழெண்களும்
ச – A) 3
ங – B) 4
சு – C)9
கூ – D)6
(A) 1B 2A 3C 4D (B) 1B 2A 3D 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C
விடை: (B) 1B 2A 3D 4C
5. ‘என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய் – என்று பாடியவர் யார்?
(A) நாமக்கல் கவிஞர் (B) கலாப் பிரியா (C) பாரதியார் (D) மு.மேத்தா
விடை: (C) பாரதியார்
6. சரியான சொற்றொடரை கண்டறிக
பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது
உலகில் மனிதன் வாழ முடியாது பறவைகள் இல்லாத
வாழமுடியாது மனிதன் பறவைகள் இல்லாத உலகில்
மனிதன் வாழ முடியாது இல்லாத உலகில் பறவை
(A) 2, 4 மட்டும் சரி (B) 2, 3மட்டும் சரி (C) 1மட்டும் சரி (D) 1.,2,3 மட்டும் சரி
விடை: (C) 1மட்டும் சரி
7. பொருந்துக: தமிழ்ச்சொற்களும் நிகரான ஆங்கில சொற்களும்
மின்படிக்கட்டு – A) Lift
மின்தூக்கி – B) Disck
குறுந்தகடு – C) Heritage
பாரம்பரியம் – D) Escalator
(A) 1B 2A 3C 4D (B) 1D 2A 3B 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C
விடை: (B) 1D 2A 3B 4C
8. அனைத்துவகை போட்டித்தேர்வுகளுக்குமான நூல்கள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எந்த தளத்தில் உள்ளது?
(A) 7 ஆம் தளம் (B) 6 ஆம் தளம் (C) 5 ஆம் தளம் (D) 2 ஆம் தளம்
விடை: (A) 7 ஆம் தளம்
9. ஏந்த மாநிலம் நடமாடும் நூலகம் திட்டத்த தொடங்கியுள்ளது?
(A) ஆந்திரா (B) கேரளா (C) தமிழ்நாடு (D) இவை அனைத்தும்
விடை: (C) தமிழ்நாடு
10. ஆசியா கண்டத்திலேயே 2ஆவது பெரிய நூலகம் எது?
(A) திருவனந்தபுரம் பொது நூலகம் (B) தஞ்சை சரஸ்வதி நூலகம் (D) கன்னிமரா நூலகம் (D) அண்ணா நூற்றாண்டு நூலகம்
விடை: (D) அண்ணா நூற்றாண்டு நூலகம்
11. கீழ்த்திசை சுவடிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்எந்த தளத்தில் உள்ளது?
(A) 7 ஆம் தளம் (B) 6 ஆம் தளம் (C) 5 ஆம் தளம் (D) 2 ஆம் தளம்
விடை: (A) 7 ஆம் தளம்
12. மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது- இத்தொடருக்கு ஏற்ற கேள்வி எது?
எதை நம்பி வாழக்கூடாது
யார் கைப்பொருளை நம்பி வாழக்கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழலாமா?
வாழலாமா மாற்றார் கைப்பபொருளை நம்பி?
(A) 3, 4 மட்டும் சரி (B) 2 மட்டும்சரி (C) 1 மட்டும்சரி (D) எதுவுமில்லை
விடை: (C) 1 மட்டும்சரி
13. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று கூறியவர் யார்?
(A) ஔவையார் (B) கலாப் பிரியா (C) பாரதிதாசன் (D) மு.மேத்தா
விடை: (A) ஔவையார்
14. கீழ்க்கண்டவற்றுள் எது சரியான வாக்கியம்?
- மேற்கு மலைகள் நதிகளை அனுப்பி
கிழக்கு கரையின் நலம் கேட்கும்
2. கிழக்கு கரையின் நலம் கேட்கும்
மேற்கு மலைகள் நதிகளை அனுப்பி
3. நதிகளை அனுப்பி மேற்கு மலைகள்
கிழக்கு கரையின் நலம் கேட்கும்
4. மேற்கு மலைகள் கிழக்கு கரையின் நலம் கேட்கும்
நதிகளை அனுப்பி
(A) 1மட்டும் சரி (B) 2, 3மட்டும் சரி (C) 2, 4 மட்டும் சரி (D) 4 மட்டும் சரி (E) 1.,2,3 மட்டும் சரி
விடை: (A) 1மட்டும் சரி
15. ராமநாதபுரத்தை ஆட்சிசெய்த மன்னர் யார்?
(A) கோபால நாயக்கர் (B)பாஸ்கர சேதுபதி (C) முத்துவடுகநாதர் (D) செல்லமுத்து
விடை: (D) செல்லமுத்து
16. இலக்கண அடிப்படையில் சொற்கள் எத்தனை வகைப்படும்?
(A) 8 (B) 7 (C) 4 (D) 5
விடை: (C) 4
17. புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது – என்று பாடிய கவிஞர் யார்?
(A) நாமக்கல் கவிஞர் (B) கலாப் பிரியா (C) தாராபாரதி (D) மு.மேத்தா
விடை: (C) தாராபாரதி
18. அகரவரிசையில் எழுதுக : சூடாமணி, செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு,
- சூடாமணி, செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு,
2. செவ்வாழை, சோளம், சிறுகதை, சார்பு, சூடாமணி
3. சார்பு, சிறுகதை, சூடாமணி, செவ்வாழை, சோளம்
4. சிறுகதை, சார்பு, சூடாமணி செவ்வாழை, சோளம்
(A)1மட்டும் சரி (B) 3மட்டும் சரி (C) 2, 4 மட்டும் சரி (D) 4 மட்டும் சரி (E) 1.,2,3 மட்டும் சரி
விடை: (B) 3மட்டும் சரி
19. கொடுப்பது பழத்தின் இயல்பு பெறுவது வேரின் இயல்பு – என்று கூறியவர் யார்?
(A) கலில் ஜிப்ரன் (B) கலாப் பிரியா (C) தாராபாரதி (D) மு.மேத்தா
விடை: (A) கலில் ஜிப்ரன்
20. வாழ்க்கை பின்திரும்பி செல்லாது நேற்றுடன் ஒத்துப் போகாது – என்று பாடியவர் யார்?
(A) மு.மேத்தா (B) கலாப் பிரியா (C) தாராபாரதி (D) கலில் ஜிப்ரன்
விடை: (D) கலில் ஜிப்ரன்
21. காந்தியக் கவிஞர் வெ.ராமலிங்கனாரின் செய்யுளில் உள்ளபடி பொருந்துக
அன்பும் அறமும் – A) வானொலியாம்
அச்சம் என்பதை – B) தேன்மொழியாம
இன்பம் பொழிகிற – C) போக்கிவிடும்
தமிழெனும் – D) ஊக்கிவிடும்
(A) 1B 2A 3C 4D (B) 1D 2C 3A 4B (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C
விடை: (B) 1D 2C 3A 4B
22. புகைவரை வெற்றி கொண்டவரை பாடும் இலக்கியம்
(A) குறவஞ்சி (B) தூது (C) பள்ளு (D) பரணி
விடை: (D) பரணி
23. சந்திப்பிழையற்ற வாக்கியத்தை கண்டறிக
- முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி
வான் முகிலினும் புகழ்படைத்த உபகாரி
2. முல்லைககு தேர்கொடுத்தான் வேள்பாரி
வான் முகிலினும் புகழ்படைத்த உபகாரி
3. முல்லைககு தேர்கொடுத்தான் வேள்ப்பாரி
வான் முகிலினும் புகழ்படைத்த உபக்காரி
4. முல்லைககு தேர்கொடுத்தான் வேள்பாரி
வான் முகிலினும் புகழப்படைத்த உபகாரி
(A)1மட்டும் சரி (B) 3மட்டும் சரி (C) 2, 4 மட்டும் சரி (D) 4 மட்டும் சரி (E) 1.,2,3 மட்டும் சரி
விடை: (A)1மட்டும் சரி
24. தமிழகததின் இரண்டாவது பெரிய காப்பகமான முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு
(A) 1000 சதுர கிலோமீட்டா (B) 2000 சதுர கிலோமீட்டா (C) 895 சதுர கிலோமீட்டர் (D) 10,000 சதுர கிலோமீட்டா
விடை: (C) 895 சதுர கிலோமீட்டர்
25. வயது வந்த அக்காக்களுக்காய் கையில் பெட்டியுடன் ஓடிஓடி பழம் பொறுக்கும் தங்கச்சிகள்- இவ்வரிகள் இடம்பெற்றது எந்த நூலில்?
(A) அப்படியே நிற்கட்டும் அந்தமரம் (B) விசாரணைக் கமிஷன் (C) கப்பலுக்கு போன மச்சான் (D) மீதமிருக்கும் சொற்கள்
விடை: (A) அப்படியே நிற்கட்டும் அந்தமரம்
26. திருக்குறள் வரிகளை சரியான முறையில பொருந்துக
வாய்மை எனப்படுவது யாதெனின் – A) பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த – B) யாதொன்றும் தீமை இலாத சொலல்
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் – C) தன்நெஞ்சே சுடும்
தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் – D) வருத்தலும் வல்ல தரசு
(A) 1B 2A 3C 4D (B) 1B 2D 3A 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C
விடை: (B) 1B 2D 3A 4C (C)
27. சுரதாவின் காடு என்னும் தலைப்பிலுள்ள கவிiத் இடம்பெற்றுள்ள நூலின் பெயர் என்ன?
(A) அப்படியே நிற்கட்டும் அந்தமரம் (B) விசாரணைக் கமிஷன் (C) கப்பலுக்கு போன மச்சான் (D) தேன்மழை
விடை: (D) தேன்மழை
28. வள்ளுவரின் கூற்றுப்படி எந்த நான்கும் இருந்தால் அது வலிமையான அரசு?
(A) இயற்றல்-ஈட்டல்-காத்தல்-வகுத்தல் (B) பெருக்கல்-ஈட்டல்-காத்தல்-வகுத்தல் (C) கழித்தலர்-ஈட்டல்-காத்தல்-வகுத்தல் (D) பெற்றல்-ஈட்டல்-காத்தல்-வகுத்தல்
விடை: விடையை கமெண்ட் செய்யவும்
29. சிறந்த கவிதைகளைத் தொகுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் நூலகத் தொகுத்தவர்?
(A) மு.மேத்தா (B) கலாப் பிரியா (C) தாராபாரதி (D) ராஜமார்த்தாண்டன்
விடை: (D) ராஜமார்த்தாண்டன்
30. உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை- என்று கூறும் நூல் எது?
(A) திருமுருகாற்றுப்படை (B) சிறுபாணாற்றுப்படை (C) பொரும்பாணாற்றுப்படை (D) மலைபடுகடாம்
விடை: (C) பொரும்பாணாற்றுப்படை
31. வானம் ஊன்றிய மதலைபோல ஏணிசாத்திய ஏற்றருஞ்சென்னி – என்று பாடிய புலவர் யார்?
(A) கம்பர் (B) கபிலர் (C) ஜெயங்கொண்டார் (D) கடியலுர் உருத்திரங்கண்ணனார்
விடை: (D) கடியலுர் உருத்திரங்கண்ணனார்
32. கடல்பயணத்தை முந்நீர் வழக்கம் என்று குறிப்பிடும் நூல் எது?
(A) திருமுருகாற்றுப்படை (B) தொல்காப்பியம் (C) பொரும்பாணாற்றுப்படை (D) மலைபடுகடாம்
விடை: (B) தொல்காப்பியம்
33. கோடுஉயர் திண்மணல் அகன்துறை நீகான் மாடஒள்ளெரி மருங்கு அறிந்து ஒய்ய- இவ்வரிகளுடன் தொடர்புடைய புலவர் யார்?
(A) கம்பர் (B) கபிலர் (C) மருதன் இளநாகனார் (D) கடியலுர் உருத்திரங்கண்ணனார்
விடை: (C) மருதன் இளநாகனார்
34. பூம்புகார் துறைமுகத்தில் கப்பல் மூலமாக ஏற்றுமதி இறக்குமதி மிகுதியாக நடந்தது என்பது பற்றி விரிவாக பேசும் நூல் எது?
(A) பட்டினப்பாலை (B) குறுந்தொகை (C) பதிற்றுப்பத்து (D) சிலப்பதிகாரம்
விடை: (A) பட்டினப்பாலை
35. பத்துப்பாட்டு நூல்களுள் இடம்பெறாத நூல் எது?
(A) பட்டினப்பாலை (B) திருமுருகாற்றுப்படை (C) பதிற்றுப்பத்து (D) பெரும்பாணாற்றுப்படை
விடை: (C) பதிற்றுப்பத்து
36. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகரம் எது?
(A) மதுரை (B) திருநெல்வேலி (C) கொல்லம் (D) வஞ்சிமாநகர்
விடை: (B) திருநெல்வேலி
37. கால்படவும் கதிருபூரா- ஏலேலங்கிடி ஏலேலோ கழலுதையா மணிமணியா- ஏலேலங்கிடி ஏலேலோ – என்ற நாட்டுப்புற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் எது?
(A)அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (B) மலை அருவி (C) கீதாஞ்சலி (D) இது எங்கள் கிழக்கு
விடை: (B) மலை அருவி
38. பழங்காலத்தில் வேணுவனம் என்றழைக்கப்பட்ட மாவட்டம் எது?
(A) மதுரை (B) திருநெல்வேலி (C) கொல்லம் (D) வஞ்சிமாநகர்
விடை: (B) திருநெல்வேலி
39. தமது வீட்டில் வட்டத்தொட்டி என்ற பெயரில் இலக்கிய கூட்டங்கள் நடத்தியவர் யார்?
(A) மா.பொ.சி (B) டி.கே.சி (C) வ.உ.சி (D) சின்னக்குத்தூசி
விடை: (B) டி.கே.சி
40. முன்றுறை அரையனார் எந்த சமயத்தைச்சார்ந்தவர்? ஆவரின் காலம் எந்த நூற்றாண்டு?
(A) கிறிஸ்த்துவம், 7ஆம் நூற்றாண்டு (B) இந்து, 2ஆம் நுhற்றாண்டு
(C) புத்தம், 5ஆம் நூற்றாண்டு (D) சமணம், 4ஆம் நூற்றாண்டு
விடை: (D) சமணம், 4ஆம் நூற்றாண்டு
41. சூழ்கலி நீங்க தமிழ்மொழி ஓங்க துலங்குக வையகமே- என்று பாடியவர் யார்?
(A) மு.மேத்தா (B) பாரதியார் (C) தாராபாரதி (D) ராஜமார்த்தாண்டன்
விடை: (B) பாரதியார்
42. இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவு இல் சொல்லோடு தழாஅல் வேண்டும் -என்று கூறும் நூல்
(A) பட்டினப்பாலை (B) தொல்காப்பியம் (C) பதிற்றுப்பத்து (D) பெரும்பாணாற்றுப்படை
விடை: (B) தொல்காப்பியம்
43. குல்வெட்டுக்களும், செப்பேடுகளும் கிடைக்கும் காலம் முறையே
(A) 5, 7 ஆம் நூற்றாண்டு (B) 3, 7 ஆம் நூற்றாண்டு (C) 5,6 ஆம் நூற்றாண்டு (D) 3, 9 ஆம் நூற்றாண்டு
விடை: (B) 3, 7 ஆம் நூற்றாண்டு
44. எழுத்து வகைகளும் அவை பிறக்கும் இடங்களும்
வல்லினம் – A) மூக்கு
மெல்லினம் – B) மார்பு
இடையினம் – C) தலை
ஆய்தம் – D) கழுத்து
(A) 1B 2A 3D 4C (B) 1D 2C 3A 4B (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C
விடை: (A) 1B 2A 3D 4C
45. அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னும் இடத்தை சுற்றி வாழ்ந்த பழங்குடியினரின் பெயர் என்ன?
(A) காடர்கள் (B) சுகுவாமிஷ் (C) குறவர்கள் (D) இருளர்கள்
விடை: (B) சுகுவாமிஷ்
46. சுகுவாமிஷ் பழங்குடியினர் ……………… தாயாகவும் ……………….. தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்
(A) பூமியை, வானத்தை (B) காற்றை கடலை (C) மலையை நதியை (D) காடு கழனி
விடை: (A) பூமியை, வானத்தை
47. கல்வி கரையில கற்பவர் நாள்சில- என்று கூறும் நூல் எது?
(A) பட்டினப்பாலை (B) திருமுருகாற்றுப்படை (C) பதிற்றுப்பத்து (D) நாலடியார்
விடை: (D) நாலடியார்
48. கற்றோர்க்கு கல்வி நலனே கலனல்லால்-மற்றோர் அணிகலம் வேண்டாவாம்- பாடியவர் யார்ஃ
(A) பாரதிதாசன் (B) பாரதியார் (C) ஔவையார் (D) குமரகுருபரர்
விடை: (D) குமரகுருபரர்
49. மன்னிக்கத் தெரிந்த
மனிதனின் உள்ளம்
மாணிக்கக் கோயிலப்பா!
இதை மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல் மறைந்தே
போகுமப்பா
இப்பாடல் வரிகளைப் பாடிய கவிஞர் யார்?
(A) அப்துல் ரகுமான் (B) ஆலங்குடி சோமு (C) கண்ணதாசன் (D) காளிதாசன்
விடை: (B) ஆலங்குடி சோமு
50. திரைப்பட பாடலாசிரியராக புகழ்பெற்ற ஆலங்குடி சோமு பிறந்த மாவட்டம்
(A) கோவை (B) மாமல்லபுரம் (C) காஞ்சி (D) சிவகங்கை
விடை: (D) சிவகங்கை
51. ஒரு தேர்வு தந்தவிளைவன்றுகல்வி அது வளர்ச்சியின் வாயில்- என்று கூறியவர் யார்ஃ
(A) பாரதிதாசன் (B) குலோத்துங்கன் (C) ஔவையார் (D) குமரகுருபரர்
விடை: (B) குலோத்துங்கன்
52. பல்துறைக் கல்வி எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?
(A) அப்படியே நிற்கட்டும் அந்தமரம் (B) விசாரணைக் கமிஷன் (C) கப்பலுக்கு போன மச்சான் (D) இளமை விருந்து
விடை: (D) இளமை விருந்து
53. எந்த குலோத்துங்கனின் அமைச்சரவையில் அவைக்கள புலவராக ஜெயங்கொண்டார் விளஙகினார்?
(A) முதல் குலோத்துங்கன் (B) இரண்டாம் குலோத்துங்கன் (C) மூன்றாம் குலோத்துங்கன் (D) நான்காம் குலோத்துங்கன்
விடை: A) முதல் குலோத்துங்கன்
54. கலிங்கத்துபரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது?
(A) 600 (B) 599 (C) 700 (D) 1001
விடை: (B) 599
55. பிறிது மொழிதல் அணியில் ……………மட்டுமே இடம்பெறும்
(A) உருவகம் (B) உவமை (C) உவமேயம் (D) இவை அனைத்தும்
விடை: (B) உவமை
56. பள்ளிக் குழந்தைகளுக்கு காலணி திட்டத்தை நடைமுறைப்பபடுத்தியவர்
(A) காமராசர் (B) எம்.ஜி.ஆர் (C) செல்வி.ஜெ.ஜெயலலிதா (D) கலைஞர் கருணாநிதி
விடை: (B) எம்.ஜி.ஆர்
57. இதந்தரும் இந்த
சுதந்திர நாளைச்
சோந்தம் கொண்டாட
தந்த பூமியை தமிழால்
வணங்குவோம் – என்று சுதந்திரத்தைப் பற்றி பாட்டு எழுதியவர் யார்?
(A) ரா.கி (B) கி.ரா (C) மீரா (D) கு.ப.ரா
விடை: (C) மீரா
58. ஓன்றே குலம்! ஒருவனே தேவன்! இவ்வரிகள் எத்தனையாவது திருமுறையில் இடம்பெற்றுள்ளது
(A) 8 (B) 10 (C) 5 (D) 9
விடை: (B) 10
59. காசை விரும்பி கலங்கிநின்று உன்பாத ஆசை விரும்பாது அலைந்தேன் – என்று பாடியவர் யார்?
(A) பாரதிதாசன் (B) குணங்குடி மஸ்தான் சாகிபு
(C) கண்ணதாசன் (D) காளிதாசன்
விடை: (B) குணங்குடி மஸ்தான் சாகிபு
60. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசால் எந்தெந்த நகரப் பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
(A) குமரி,நாகை (B) காஞ்சி செங்கல்பட்டு (C) சேலம் தருமபுரி (D) சென்னை மதுரை
விடை: (D) சென்னை மதுரை
61. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?
(A) 8 (B) 6 (C) 5 (D) 9
விடை:(B) 6
62. வல்லினம் மிகுந்து தோன்றும் போது அது எந்தவகை புணர்ச்சி?
(A) தோன்றல் புணர்ச்சி (B) திரிதல் புணர்ச்சி (C) விகாரப் புணர்ச்சி (D) கெடுதல் புணர்ச்சி
விடை:(A) தோன்றல் புணர்ச்சி
63. எறிதிரை, கலன்,நாவாய் நீர், தோணி போன்ற தமிழ்ச்சொற்கள் இடம் பெற்றுள்ள அயல்மொழி எது?
(A) சீனம் (B) லத்தீன் (C) உருது (D) கிரேக்கம்
விடை: (D) கிரேக்கம்
64. தந்தை மகனை நன்றாக படிக்கவைத்தார்? – இது எவ்வகை வினை?
(A) பிறவினை (B) தன்வினை (C) எதிர்மறை வினை (D) கிரேக்கம்
விடை: (A) பிறவினை
65. மொட்டைக் கிளையொடு
நின்று தினம்பெரும்
மூச்சுவிடும் மரமே
வெட்டப்படும் ஒரு
நாள் வருமென்று
விசனம் அடைநதனையோ! – உணர்ச்சிப் பெருக்கு மிக்க இக்கவிதையை எழுதிய கவிஞர் யார்?
(A) பாரதிதாசன் (B) கவிஞர் தமிழொளி
(C) கண்ணதாசன் (D) காளிதாசன்
விடை: (B) கவிஞர் தமிழொளி
66. திருக்குறளை ஆங்கிலத்தில் முழுமையாக மொழிபெயர்த்தவர் யார்?
(A) கால்டுவெல் (B) உ.வே.சா (C) மா.பொ.சி (D) ஜி.யு.போப்
விடை: (D) ஜி.யு.போப்
67. இந்திரவிழா புகார்நாளில் எத்தனை நாள் நடைபெறும்?
(A) 28 (B) 6 (C) 5 (D) 9
விடை: (A) 28
68. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் யார்?
(A) கவிஞர் அறிவுமதி (B) கவிஞர் தாமரை (C) கவிஞர் தமிழொளி (D) கவிஞர் வைரமுத்து
விடை: (C) கவிஞர் தமிழொளி
69. ஒரு பூவின் மலர்ச்சியையும் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை- என்று கூறியவர்
(A) கவிஞர் அறிவுமதி (B) ஈரோடு தமிழன்பன் (C) கவிஞர் தமிழொளி (D) கவிஞர் வைரமுத்து
விடை: (B) ஈரோடு தமிழன்பன்
70. உலகத்தாய் மொழிகள் தினம் எது?
(A) ஜனவரி 28 (B)அக்டோபர் 6 (C) பிப்ரவரி 21 (D) செபடம்பர் 9
விடை: (C) பிப்ரவரி 21
71. தமிழ்விடுதூது எத்தனை கண்ணிகள் கொண்டது?
(A) 550 (B) 200 (C) 300 (D) 268
விடை: (D) 268
72. பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தந்தம் கருமமே கட்டளைக் கல் – இக்குறளில் பயின்று வரும் அணி எதுஃ
(A) உவமை அணி (B) ஏகதேச உருவகஅணி (C) சிலேடை அணி (D) தீவகஅணி
விடை: விடையை கீழே கமெண்ட் செய்யவும்
73. என்பதன் தமிழ்பெயர் எது?
(A) முந்திரி (B) அரைக்காணி முந்திரி (C) கால்வீசம் (D) அரைவீசம்
விடை: (A) முந்திரி
74. கந்த மலர்தர கூரை விரித்த இலை- இதில் கந்த என்பதன் பொருள் என்ன?
(A) பணம் (B) குணம் (C) மணம் (D) மனம்
விடை: (C) மணம்
75. நீறு எடுப்பவை நிலம் சாடுபவை மாறு ஏற்று சிலைப்பவை மண்டி பாய்பவையாய் – இப்படி ஏறுதழுவலைப் பற்றிக் கூறும் நூல்
(A) பட்டினப்பாலை (B) திருமுருகாற்றுப்படை (C) பதிற்றுப்பத்து (D) கலித்தொகை
விடை: (D) கலித்தொகை
76. மணிமேகலை என்னும் நூல் எந்த சமயத்துடன் தொடர்பு உடையது?
(A) சமணம் (B) பௌத்தம் (C) கிறிஸ்த்தவம் (D) இந்து
விடை: (B) பௌத்தம்
77. எந்தஇடத்தில் வல்லினம் மிகாது?
(A) உம்மைத்தொகை (B) இருபெயராட்டு பண்புத்தொகை (C) இரண்டாம் வேறறுமைத்தொகை (D) நான்காம் வேற்றுமைத்தொகை
விடை: விடையை கீழே கமெண்ட் செய்யவும்
78. உலக சுற்றுச்சூழல் தினம் எது?
(A) ஜூன் 5 (B) செப் 9 (C) ஜனவரி 10 (D) டிசம்பர் 20
விடை: (A) ஜூன் 5
79. குறம் என்றும் பள்ளு என்றும் கொள்வார் கொடுப்பார் உறவுஎன்று மூன்று இனத்தும் உண்டோ – இவ்வரிகள் இடம்பெறும் நூல்
(A) கலங்கத்துபரணி (B) நந்தி கலம்பகம் (C) திருக்கற்றால குறவஞ்சி (D) தமிழ்விடுதூது
விடை: (D) தமிழ்விடுதூது
80. பண்டைய தமிழரின் அரிய வரலாற்று செய்திகள் அடஙகிய பண்பாட்டுக் கருவுலமாக திகழும் நால் எது?
(A) புறநானூறு (B) கலித்தொகை (C) பதிற்றுப்பத்து (D) அகநானூறு
விடை: (A) புறநானூறு
81. பொருந்துக: நூல்களும், ஆசிரியர்களும்
நாம் ஏன் தமிழ்க்காக்க வேண்டும் – (A) மா.நன்னன்
தவறின்றி தமிழ் எழுதுவோம் – (B) முனைவர் சேதுமணி மணியன்
புச்சைநிழல் – (C) பாரதியார்
குயில்பாட்டு – (D) உதயசங்கர்
(A) 1B 2A 3C 4D (B) 1B 2A 3D 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C
விடை: (B) 1B 2A 3D 4C
82. தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார்?
(A) குடியரசு (B) விடுதலை (C) 12 (D) இவை அனைத்தும்
விடை: (C) 12
83. வேலொடு நின்றான் இதுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்றுவரும் அணி
(A) உவமை அணி (B) உருவக அணி (C) சிலேடை அணி (D) வேற்றுமை அணி
விடை: (A) உவமை அணி
84. தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் – இந்த சிலப்பதிகார வரிகளில் சிறுமலை என்பது எந்த மாவட்டம்?
(A) காஞ்சிபுரம் (B) நீலகரி (C) கோவை (D) திண்டுக்கல்
விடை: (D) திண்டுக்கல்
85. வேங்கை எட்டு இவை எவ்வகை மொழி?
(A) தனிமொழி (B) தொடர்மொழி (C) பொதுமொழி (D) இவை அனைத்தும்
விடை: (C) பொதுமொழி
86. பொருந்துக: நூல்களும் ஆசிரியர்களும்
புயலிலே ஒரு தோணி – (A) நப்பூதனார்
நைடதம் – (B) ப.சிங்காரம்
மலைபடுகடாம் – (C) அதிவீரராம பாண்டியர்
முல்லைப்பாட்டு – (D)பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார்
(A) 1B 2A 3C 4D (B) 1B 2C 3D 4A (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C
விடை: (B) 1B 2C 3D 4A
87. பஞ்சபூதங்களில் அறிவியல் என்ற நூலை எழுதியவர்
(A) ப.சிங்காரம் (B) கண்ணதாசன் (C) நீலமணி (D) வாணிதாசன்
விடை:(C) நீலமணி
88. பொருளல்லவரை பொருளாக செய்யும் பொருளல்ல தில்லை பொருள் – இக்குறளில் பயின்று வரும் அணி
(A) உவமை அணி (B) உருவக அணி (C) சிலேடை அணி (D) சொற்பொருள் பின்வருநிலை அணி
விடை: (D) சொற்பொருள் பின்வருநிலை அணி
89. ஆதி வைத்திய நாத புரிக்குக னாடுக – என்ற வரிகளில் குறிப்பிடப்படும் கடவுள் யார்?
(A) புத்தர் (B) இயேசு கிறிஸ்த்து (C) முருகன் (D) சிவன்
விடை: விடையை கீழே கமெண்ட் செய்யவும்
90. சா.கந்தசாமியின் படைப்பில் சாகித்ய அகாடமி விருது பெற்ற புதினம் எதுஃ
(A) விசாரணைக் கமிஷன் (B) கப்பலுக்கு போன மச்சான் (C) அகலிகை (D) அப்பாவின் சிநேகிதர்
விடை: (A) விசாரணைக் கமிஷன்
91. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் – என்று கூறியவர் யார்?
(A) பாரதிதாசன் (B) கண்ணதாசன் (C) காளிதாசன் (D) பாரதியார்
விடை: (D) பாரதியார்
92. அன்புடை தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளை கூறும் அகத்திணை எத்தனை வகை?
(A) 7 (B) 8 (C) 4 (D) 5
விடை: (A) 7
93. பெருமாள் திருமொழியில் எத்தனை பாடல்கள் உள்ளன?
(A) 107 (B)108 (C) 104 (D) 105
விடை: (D) 105
94. ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடலை எழுதி கண்ணதாசன் பாடலாசிரியராக உருவெடுத்த ஆண்டு
(A) 1907 (B) 1908 (C) 1904 (D) 1949
விடை: (D) 1949
95. பொருந்துக: ஆங்கில வார்த்தைகளும் பொருத்தமான தமிழ் வார்த்தைகளும்
Consulate – (A) காப்புரிமை
Patent – (B) துணை தூதரகம்
Guild – (C) பாசனம்
Irrigation – (D) வணிகக்குழு
(A) 1B 2C 3A 4D (B) 1B 2A 3D 4C (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C
விடை: (B) 1B 2A 3D 4C
96. ‘கூர்வேல் குவைஇய மொய்ப்பின் தேர்வண் பாரிதன் பறம்பு நாடே’ இதில் குறிப்பிடப்படும் பறம்புமலை தற்போது எந்த மாவட்டத்தில் எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
(A) நீலகிரி மேற்கு தொடர்ச்சிமலை (B) தேனி கிழக்கு தொடர்ச்சிமலை (C) நாமக்கல் கொல்லிமலை (D) சிவகங்கை ,பிரான்மலை
விடை: (D) சிவகங்கை ,பிரான்மலை
97. பொருந்துக: மெய்கீர்த்தியில் உள்ளபடி பொருந்துக
- செல்லும் ஓடைகளே – (A) மலைமட்டுமே மக்கள் மனதல் இருள் இல்லை
- வருகின்ற நீரே – (B) வண்டுகளே மக்கள் கள்ளுண்பது
இல்லை - கள்ளுன்பது – (C) கலக்கம் அடைகின்றன
மக்கள்கலங்குவது இல்லை - இருளை உடையது – (D) சிறைப்படும் வேறு யாரும்
சிறைப்படுவதில்லை
(A) 1B 2C 3A 4D (B) 1C 2D 3B 4A (C) 1B 2D 3D 4C (D) 1A 2B 3D 4C
விடை: (B) 1C 2D 3B 4A
98. பால்வதை தெரிந்த பண்டமொடு கூலம் குவிந்த கூலவீதியும்- என்று குறிப்பிடும் நூல் எது?
(A) சிலப்பதிகாரம் (B) கலித்தொகை (C) பதிற்றுப்பத்து (D) அகநானூறு
விடை: (A) சிலப்பதிகாரம்
99. சிலப்பதிகாரம் எத்தனை காதைகளைக் கொண்டது?
(A) 25 (B) 40 (C) 30 (D) 50
விடை: (C) 30
100. கு.ப.ரா ஆசிரியராக பணியாற்றிய இதழ எது
(A) பாரதமாதா தமிழ்நாடு (B) பாரததேவி (C) கிராமஊழியன் (D) இவை அனைத்தும்
விடை: (D) இவை அனைத்தும்
இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 10 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 பி.டி.எப் தொகுப்புகள்:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 10 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!