
190 சிந்துவெளி நாகரிகம் பற்றிய முக்கிய வினா விடைகள்
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilization) பற்றிய முக்கிய வினா விடைகள் இப்போது! இந்த தொகுப்பில், சிந்துவெளி நாகரிகம் தொடர்பான 220 முக்கிய வினா விடைகள் வழங்கப்பட்டுள்ளது, இது TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு உங்களுக்கு பயனுள்ள பயிற்சியாக இருக்கும்.
சிந்துவெளி நாகரிகம் என்பது இந்திய வரலாற்றின் மிக முக்கியமான பிரக்ஷிப் (civilization) ஆகும். இதனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய வினா விடைகள் இதில் தரப்பட்டுள்ளன.
இந்த வினா விடைகளின் சிறப்பம்சங்கள்:
- 📚 சிந்துவெளி நாகரிகம் பற்றிய அடிப்படை அறிவு
- 📝 அரசியல், சமூகம், தொழில்நுட்பம் பற்றிய முக்கிய கேள்விகள்
- 🎯 TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயனுள்ள வினா விடைகள்
- 💡 சிந்துவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் அதன் வளர்ச்சி
- வரலாறு என்ற சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது? கிரேக்க மொழி
- இஸ்டோரியா என்ற சொல்லின் பொருள் என்ன? விசாரிப்பதன் மூலம் கற்றல்
- தம்மா என்பது எந்த மொழிச்சொல்? பிராகிருதம்
- சமஸ்கிருதத்தில் தர்மா என்பதன் பொருள் என்ன? அறநெறி
- வெற்றிக்குப் பின் போரைத் துறந்த முதல் அரசர் யார்? அசோகர்
- உலகிலேயே முதன் முதலாக விலங்குகளுக்கும் தனியே மருத்துவமனை அமைத்து தந்தவர் யார்? அசோகர்
- தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள 24 ஆரக்கால் சக்கரம் அசோகரின் எந்தத் தூணிலிருந்து பெறப்பட்டத? சாரநாத் கல்தூண்
- எந்த ஆய்வாளர்கள் அசோகரின் சிறப்புகளை வெளியுலகுக்கு கொண்டு வந்தனர்? வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப், அலெக்சாண்டர் கன்னிங்காம்
- எந்த ஆங்கில எழுத்தாளர் அசோகர் குறித்த அனைத்து வரலாற்று ஆவணங்களையும் சேகரித்து தொகுத்து நூலாக வெளியிட்டார்? சார்லஸ் ஆலன்
- நெருப்பின் பயனை அறிந்து இருந்த மனித இனம் எது? ஹோமோ ஏராக்டஸ்
- எங்கு கண்டுபிடிக்கப்பட்ட மனித காலடித்தடங்கள் 3.5 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளது? கிழக்கு ஆப்பிரிக்கா தான்சானியா
- மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றி படிப்பதற்கு பெயர்? மானுடவியல் – anthropology
- anthropology என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது? கிரேக்க மொழி
- குரோமேக்னான்ஸ் மனிதர்கள் எங்கு வாழ்ந்ததாக சான்றுகள் கிடைத்துள்ளன? லாஸ்காஸ் பிரான்ஸ்
- ஆஸ்ட்ரலோபிதிகஸ் மனித இனம் வாழ்ந்த இடம்? கிழக்கு ஆப்பிரிக்கா
- ஹோமோ ஹெபிலிஸ் மனித இனம் வாழ்ந்த இடம்? தென்னாப்பிரிக்கா
- ஹோமோ எரக்டஸ் மனித இனம் வாழ்ந்த இடம்? ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
- நியாண்டர்தால் மனித இனம் வாழ்ந்த இடம்? ஐரோப்பா மற்றும் ஆசியா (யுரேசியா)
- குரோ மேக்னான்ஸ மனித இனம் வாழ்ந்த இடம்? பிரான்ஸ்
- பீக்கிங் மனிதன் வாழ்ந்த இடம்? சீனா
- ஹோமோ செப்பியன்ஸ் வாழ்ந்த இடம்? ஆப்பிரிக்கா
- ஹைடல்பர்க் மனிதன் வாழ்ந்த இடம்? லண்டன்
- மனிதர்கள் நெருப்பை உருவாக்க எந்தக் கல்லை பயன்படுத்தினார்கள்? சிக்கிமுக்கி கல்
- தமிழ்நாட்டில் உள்ள தொல் பழங்கால பாறை ஓவியங்களின் இடங்களை குறிப்பிடுக?1.கீழ்வலை -2.உசிலம்பட்டி -3.குமுதிபதி -4.மாவடைப்பு5.பொறிவரை -1.விழுப்புரம்2. மதுரை 3.கோவை 4.கோவை 5.கரிக்கையூர் நீலகிர
- மெசோபடோமியா நாகரிகத்தின் காலகட்டம் என்ன? கி.மு. 3500 முதல் கி.மு 2000 வரை
- எகிப்து நாகரிகத்தின் கால கட்டம் என்ன? கி.மு 3100 முதல் கி.மு 1100 வரை
- சீன நாகரிகத்தின் கால கட்டம் என்ன? கி.மு 1700 முதல் கி.மு 1122 வரை
- ஹரப்பா நகரத்தின் இடிபாடுகளை முதன் முதலில் தனது நூலில் விவரித்தவர் யார்? சார்லஸ் மேசன்
- அந்த பாழடைந்த கோட்டை உயரமான சுவர்கள் உடனும் கோபுரங்களுடனும் ஒரு மலை மீது கட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டவர் யார்? சார்லஸ் மேசன்
- எப்போது லாகூரிலிருந்து கராச்சிக்கு ரயில் பாதை அமைத்தனர்? 1856
- நாகரீகம் என்ற வார்த்தை எந்த மொழி வார்த்த? லத்தின்
- சிவிஸ் என்ற லத்தின் வார்த்தையின் பொருள் என்ன? நகரம்
- எந்த ஆண்டு இந்திய தொல்லியல் றை உருவாக்கப்பட்டது? 1861
- இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? புதுதில்லி
- மெகர்கர் எங்கு அமைந்துள்ளது? போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கு பலுசிஸ்தான் மாநிலம் பாகிஸ்தான்
- செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட தானிய களஞ்சியம் ஒன்று ராக்கிகார்க்கியில் கண்டுபிடிக்கப்பட்டது இது எங்கு அமைந்துள்ளது? ஹரியானா மாநிலம்
- சுமேரியாவின் அக்காடிய பேரரசுக்கு உட்பட்ட எந்த அரசன் சிந்துவெளிப் பகுதியில் உள்ள மெலுக்கா எனுமிடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதி உள்ளார்? நாரம் சின்
- கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டத? லோத்தல் குஜராத்
- லோத்தல் என்னும் இடம் குஜராத்தில் எங்கு அமைந்துள்ளது? சபர்மதி ஆற்றின் துணை ஆற்றில்
- அமர்ந்த நிலையில் உள்ள ஒரு ஆண் சிலை எங்கு உள்ள கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? மொகஞ்சதாரோ
- தந்தத்தினால் ஆன அளவுகோல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளத? குஜராத்
- முதன்முதலில் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம் எது? செம்பு
- நடன மாது என அழைக்கப்படும் பெண் சிலை எதனால் செய்யப்பட்டிருந்தது? வெண்கலம்
- இன்றும் கொற்கை வஞ்சி தொண்டி மத்ரை உறை கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் எங்கு உள்ளன? பாகிஸ்தான்
- கொற்கை பூம்புகார் போன்ற இடங்கள் எங்கு உள்ளன?ஆப்கானிஸ்தான்
- காவ்ரி மற்றும் பொருண்ஸ் ஆகிய ஆறுகள் எங்கு உள்ளன? ஆப்கானிஸ்தான்
- காவிரிவாலா மற்றும் பொருணை ஆகிய பெயர்கள் எங்கு உள்ளன? பாகிஸ்தான்
- சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த கற்களைப் பயன்படுத்தினார்கள்? கார்னிலியன்
- சிந்துவெளி மக்களுக்கு எந்த உலகத்தின் பயன் பற்றி தெரியாத? இரும்பு
- எந்த ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது? கி.மு 1900
- கதிரியக்க கார்பன் வயது கணிப்பு முறையில் பயன்படுத்தப்படும் ஐசோடோப் எது? கார்பன் 14
- குஃபு மன்னனால் சுண்ணாம்புக் கல்லால் கட்டப்பட்ட கிசே பிரமிடு எப்போது கட்டப்பட்டது? கி.மு 2500
- ஊர் நம்மு என்ற அரசனால் சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊரின் பெயர் என்ன? ஜிகரெட்
- எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ் என்பவரால் கட்டப்பட்ட இரட்டைக் கோவில்கள் உள்ள இடத்தின் பெயர்? அபு சிம்பல்
- சிந்துவெளி நாகரிகத்தின் எல்லை? மேற்கு-மக்ரான் கடற்கரை, கிழக்கு-காக்ரா-ஹாக்ரா நதிப்பள்ளதாக்கு, வடகிழக்கு- ஆப்கானிஸ்தான், தெற்கு- மஹாராஷ்டிரா
- மெசபடோமியா வின் சந்திர கடவுளின் பெயர் என்ன? சின்
- உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட பொது குளம் எங்கு உள்ளது? மொகஞ்சதாரோ
- மெசபடோமியாவில் சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட கோவில் எங்கு உள்ளது யாரால் கட்டப்பட்டது? ஜிகரட் ஊர் நம்மு
- இரட்டைக் கோயில்கள் யாரால் எங்கு கட்டப்பட்டது? இரண்டாம் ராமெசிஸ் அபு சிம்பல்
- மொஹஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் யாது? இறந்தவர்களின் மேடு
- முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரீகம் எது? ஹரப்பா
- முதன்முதலில் பருத்திச் செடியை வளர்த்தவர்கள் யார்? சிந்து சமவெளி மக்கள்
- கதிரியக்க கார்பன் வயது கணிப்பில் பயன்படும் ஐசோடோப்பு எது? 14
- ஹரப்பா நாகரீகம் கிராம நாகரிகமா அல்லது நகர நாகரிகமா? நகர நாகரீகம்
- இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் எது? சிந்து நாகரீகம்
- சிந்து நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் எது? ஹரப்பா
- சிந்து நாகரிக பகுதிகளில் புதிய கற்கால கிராமங்களின் தொடக்கம் நடைபெற்றது எப்பொழுது? கி.மு 7000
- ஹரப்பா நாகரிகத்தின் படி நிலைகள் என்னென்ன? 3 ,தொடக்ககால ஹரப்பா , முதிர்ச்சியடைந்த ஹரப்பா, பிற்கால ஹரப்பா
- தொடக்க கால ஹரப்பாவின் காலகட்டம் என்ன? கி.மு 3000 முதல் கி.மு 2500 வரை
- முதிர்ச்சியடைந்த ஹரப்பாவின் காலகட்டம் என்ன கிமு? கி.மு 2600 முதல் கி.மு 1900 வரை
- பிற்கால ஹரப்பாவின் காலகட்டம் என்ன? கி.மு 1900 முதல் கி.மு 1700 வரை
- ஹரப்பாவிற்கு முதன் முதலில் வருகை தந்தவர் யார்? சார்லஸ் மேசன் இங்கிலாந்து
- சார்லஸ் மேசன் ஹரப்பாவிற்கு எப்போது வருகை தந்தார்? 1826
- 1831 இல் அம்ரி என்ற இடத்திற்கு வருகை தந்தவர் யார்? அலெக்சாண்டர் பர்ன்ஸ்
- எப்போது லாகூரில் இருந்து முல்தானுக்கு ரயில் பாதை அமைத்தனர்? 1856
- இந்திய தொல்லியல் அளவீட்டு துறையின் முதல் அளவையாளர் யார்? அலெக்சாண்டர் கன்னிங்காம்
- அலெக்சாண்டர் எந்தெந்த வருடங்களில் ஹரப்பாவை பார்வையிட்டார்? 1853, 1856, 1875
- ஹரப்பாவின் முக்கியத்துவத்தையும் அதன் நாகரிகத்தையும் உணர்ந்து அங்கு ஆய்வு நடத்த காரணமாக இருந்தவர் யார்? சர் ஜான் மார்ஷல்
- 1940-களில் ஹரப்பாவில் ஆய்வுகள் நடத்தியவர் யார்? ஆர். இ. எம் வீலர்
- சிந்து நாகரீகமும் அதன் சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆக மொத்தம் எத்தனை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன? 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர்
- சிந்து நாகரிகத்தின் மேற்கு எல்லையாக அமைந்துள்ளது எது? சட்காஜென்தூர்(பாகிஸ்தான் ஈரான் எல்லை)
- சிந்து நாகரிகத்தின் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது? ஷார்டுகை ஆப்கானிஸ்தான்
- சிந்து நாகரீகத்தின் கிழக்கு எல்லையாக அமைந்துள்ளது? ஆலம்கிர்பூர்(உத்தரபிரதேசம்)
- சிந்து நாகரிகத்தின் தெற்கு எல்லையாக அமைந்துள்ளது? தைமாபாத்(மகாராஷ்டிரம்)
- ஹரப்பாவின் எந்த படிநிலையில் நகர மையங்கள் தோன்றின? முதிர்ந்த ஹரப்பா படிநிலை
- ஹரப்பா எங்கு உள்ளது? பஞ்சாப் பாகிஸ்தான்
- மொகஞ்சதாரோ அமைந்துள்ள இடம்? சிந்து பாகிஸ்தான்
- தோலவிரா அமைந்துள்ள இடம்? குஜராத் இந்தியா
- காலிபங்கன் எங்கு உள்ளது? ராஜஸ்தான் இந்தியா
- லோத்தல் அமைந்துள்ள இடம்? குஜராத் இந்தியா
- பனவாலி அமைந்துள்ள இடம்? ராஜஸ்தான் இந்தியா
- ராக்கி கார்க்கி எங்கு உள்ளது? ஹரியானா இந்தியா
- சர்கோட்டடா அமைந்துள்ள இடம்? குஜராத் இந்தியா
- வீடுகள் எவற்றால் கட்டப்பட்டிருந்தன? சேற்று மண்ணாலான செங்கற்கள்
- கழிவு நீர் வடிகால்கள் எவற்றால் கட்டப்பட்டிருந்தன? சுட்ட செங்கற்கள்
- எது ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம்? மொகஞ்சதாரோ
- பெருங் குளத்தின் எந்த திசையில் படிகட்டுகள் அமைந்திருந்தன? வடக்கு பக்கம் மற்றும் தெற்கு பக்கம்
- பெரும் குளத்தின் சுவர்கள் எதனால் பூச பட்டிருந்தன? ஜிப்சம் செறிந்த சுண்ணஞ்சாந்தால்
- சிந்து நாகரிக மக்கள் என்ன பயிர் வகைகளை பயிரிட்டார்கள்? கோதுமை பார்லி அவரை வகைகள் கொண்டக்கடலை எள் திணை வகைகள்
- ஹரப்பா மக்கள் பின்பற்றிய பயிரிடும் முறை என்ன? இரட்டை பயிரிடல் முறை
- உழுத நிலங்களை எங்கு காணமுடிகிறது? காலிபங்கன்
- பழமையான வேளாண்மையையும் மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையேயான உறவை குறித்து ஆய்வு செய்பவர்கள் யார்? தாவரவியலாளர்கள் paleobotanists
- ஹரப்பா பண்பாட்டில் காணப்படாத விலங்கு எது? குதிரை
- ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன? செபு
- ஹரப்பாவின் கைவினை தயாரிப்புகள் எங்கு ஏற்றுமதி செய்யப்பட்டன? மெசபடோமியா
- ஹரப்பா நாகரிகத்தின் சங்கு உற்பத்தி மையம் எங்கு அமைந்திருந்தது? நாகேஷ்வர் பாலக்கோட்
- வைடூரியம் உற்பத்தி மையம் எங்கு அமைந்திருந்தது? ஷார்டுகை
- கார்னிலியன் மணி உற்பத்தி மையம் அமைந்திருந்த இடம்? லோத்தல்
- ஸ்டீடைட் (நுரைக்கல்) உற்பத்தி மையம் அமைந்திருந்த இடம்? ராஜஸ்தான்
- செம்பு உற்பத்தி மையம் அமைந்திருந்த இடம்? ராஜஸ்தான் ஓமன்
- சிந்து நாகரிகத்தின் மட்பாண்டங்களில் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் என்னென்ன? இலைகள்,மீன் செதில், ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் வட்டங்கள், கோணல்மாணலாக கோடுகள், பக்கவாட்டில் உள்ள பட்டைகள், வடிவியல் கூறுகள், தாவரங்கள், விலங்குகள்
- ஹரப்பா நாகரிகம் எந்த கால நாகரிகம் ஆகும்? வெண்கலக் காலம்
- எந்தக் படிகக்கல்லால் செய்யப்பட்ட கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்? ரோரிசெர்ட்
- ரோரிசெர்ட் படிகக்கல் எங்கு காணப்படுகிறது? பாகிஸ்தானில் உள்ள ரோரி பகுதியில்
- நடனமாடும் பெண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? மொகஞ்சதாரோ
- ஹரப்பா மக்களுக்கு எந்த இடத்துடன் நெருக்கமான வணிக தொடர்பு இருந்தது? மெசபடோமியா
- சுமேரிய நாகரீகம் நிலவிய பகுதிகள் என்னென்ன? ஓமன் பக்ரைன் ஈராக் ஈரான்
- இந்தக் கல்வெட்டு குறிப்புகள் மெசபடோமியா ஹரப்பாவுக்கும் இடையேயான வணிக தொடர்புகளை குறிப்பிடுகின்றன? க்யூனிஃபார்ம் கல்வெட்டு
- க்யூனிபார்ம் கல்வெட்டு குறிப்புகளில் சிந்து பகுதியைக் குறிக்கும் சொல் எது? மெலுகா
- ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது? ஓமன்
- ஹரப்பாவைச் சேர்ந்த முத்திரைகள் எடைக்கற்கள் தாயக்கட்டைகள் மணிகள் எங்கு கண்டெடுக்கப்பட்டன? மெசபடோமியா
- ஹரப்பாவில் இருந்து மெசபடோமியாவிற்கு ஏற்றுமதியான உலோகங்கள் என்னென்ன? வைடூரியம் செம்பு தங்கம் பலவகைப்பட்ட மரங்கள்
- ஹரப்பா நாகரிக பகுதிகளில் கிடைக்கும் எந்த உலோகம் மெசபடோமியா உடனிருந்த தொடர்புக்கு ஒரு சான்றாகும்? நிக்கல்
- “உங்கள் பறவை ஹஜா பறவையாக அதன் ஒலிஅரண்மனையில் கேட்கட்டும் “என்ற வரிகள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளன? மெசபடோமியாபுராணம்
- ஹஜா பறவை என்பது எதைக் குறிக்கிறது என சில தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்? மயில்
- ஹரப்பா நாகரிக பகுதிகளில் இருந்து எந்த வடிவத்திலான எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன? கனசதுர வடிவம்
- சிந்து நாகரிகத்தின் எடைக்கற்கள், எடையின் விகிதம் எவ்வாறு பின்பற்றப் பட்டு இருந்தது? இருமடங்கு மற்றும் இரும எண் முறை
- 16ன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் எவ்வளவு எடை கொண்டதாக உள்ளது? 13.63 கிராம்
- இதுவரை சிந்து நாகரிகத்தின் எத்தனை எழுத்து தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன? 5000 மேற்பட்டவை
- ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் எத்தனை குறியீடுகளைக் கொண்டுள்ளது? 26
- சிந்து நாகரிகத்தில் வேள்வி பீடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள இடம் எது? காலிபங்கன்
- தங்கள் நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஹரப்பா மக்கள் எந்த திசை நோக்கி இடம்பெயர்ந்ததாக தொல்லியல் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன? கிழக்கு மற்றும் தெற்கு
- புதிய கற்காலப் பண்பாடு காஷ்மீர் கங்கை சமவெளி ஆகிய வட இந்தியப் பகுதிகளிலும் மத்திய இந்தியாவிலும் கிழக்கு இந்தியாவிலும் பாவி இருந்தபோது தக்காணத்திலும் மேற்கு இந்தியாவிலும் என்ன பண்பாடு நிலவியது? செம்புகால பண்பாடு
- எந்த ஆண்டுவாக்கில் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது? கி.மு 1900
- இந்தியாவில் நடந்த இரண்டாம் நகரமயமாக்கல் பகுதிகள் என்னென்ன? அரிக்கமேடு கீழடி உரையூர்
- ஹரப்பா நாகரிகம் எந்த ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது? 1921
- ஹரப்பா தொல்பொருள் சின்னம் எந்த ஆண்டு அகழ்ந்தெடுக்கப்பட்டது? 1920
- ஹரப்பா தொல்பொருள் சின்னம் எந்த ஆறுகளுக்கு இடையில் அகழ்ந்தெடுக்கப்பட்டது? ரவி சட்லஜ்
- ஹரப்பா தொல்பொருள் சின்னம் எங்கு கண்டெடுக்கப்பட்டது? பழைய பஞ்சாப் ,மாண்ட்கொமரி மாவட்டம் (பாகிஸ்தான்)
- எங்கு 70 அடி உயரமுள்ள மண்மேடு ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டது? சிந்து மாகாணம் பாகிஸ்தான் லர்க்க்னா மாவட்டம்
- எந்தாண்டு மொகஞ்சதாரோ அகழ்ந்தெடுக்கப்பட்டது? 1922
- ஹரப்பா நாகரிகம் கிமு 3250 முதல் கிமு 2750 வரை என குறிப்பிட்ட தொல்லியலாளர் யார்? சர் ஜான் மார்ஷல்
- தமிழ்நாட்டில் எந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாய்வுகள் தமிழ்நாட்டிற்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதை வெளிப்படுத்துகின்றன? ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு
- தமிழ்நாட்டின் ஆரணி, கொற்கை மயிலம் ,மானூர், தொண்டி, கண்டிகை, போன்ற இடப்பெயர்கள் தற்போது எந்த நாட்டில் வழக்கத்தில் உள்ளன? பாகிஸ்தான்.
- தமிழ்நாட்டில் உள்ள ஆலார், ஆசூர், படூர், இஞ்சூர், குந்தா, நாகல் ,தானூர் ,செஞ்சி போன்ற இடப்பெயர்கள் தற்போதைய எந்த நாட்டில் வழக்கத்தில் உள்ளன? ஆப்கானிஸ்தான்
- இன்றுவரை பிராகுயி என்ற திராவிட மொழி பேசப்பட்டு வரும் இடம் எது? பலுசிஸ்தான்
- ஹரப்பா நாகரீகத்தை தோற்றுவித்தவர்கள் திராவிடர்களாகத்தான் இருக்க வேண்டும் என்பது யாருடைய கருத்து? சர் ஜான் மார்ஷல்,ஆர்.டி பானர்ஜீ,ஹீராசு பாதிரியார்
- தமிழ்நாட்டை திரமிளிகே என அழைத்தவர்கள் யார்? யவனர்கள்
- தமிழ் அரசர்களை திராவிட மன்னர்கள் என்று குறிப்பிட்ட பல்லவ அரசன் யார்? நந்திவர்ம பல்லவன்
- தமிழ்நாட்டை திராவிட தேசம் என்றும் தமிழ் மன்னர்களை திரமிள ராஜாக்கள் என்றும் குறிப்பிட்டவர் யார்? கங்காதேவி
- கங்காதேவி எழுதிய நூலின் பெயர் என்ன? மதுரா விஜயம்
- ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் என்பதை உறுதி செய்தவர் யார்? சர் மார்டிமர் வீலர்
- கீழடி தொல்லியல் களம் என்பது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? சிவகங்கை
- ஹரப்பா நாகரீகத்தில் தெருக்கள் எந்த திசையில் அமைந்திருந்தன? கிழக்கு மேற்கு மற்றும் வடக்கு தெற்கு
- சிந்து நாகரிகத்தில் பெரிய தெருக்கள் எத்தனை அடி அகலம் இருந்தன? 33 அடி
- சிந்து நாகரிகத்தில் சிறிய தெருக்கள் எத்தனை அடி வரை அகலம் கொண்டதாக இருந்தன? 9 அடி முதல் 12 அடி வரை
- சிந்து நாகரிகத்தில் எந்த திசையில் கோட்டை இருந்தது? மேற்கு திசையில் மேடான நிலத்தில்
- சிந்து நாகரிகத்தில் எந்த திசையில் குடியிருப்பு பகுதிகள் அமைந்திருந்தன? கிழக்கு திசை
- கிணற்று சுவர், சாக்கடை சுவர் போன்ற வளைந்த சுவர்கள் கட்டுவதற்கு என்ன வடிவ செங்கற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன? ஆப்பு வடிவ செங்கற்கள்
- குளத்தின் தரைப்பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக எந்த பசையால் பூசப்பட்டிருந்தது? நீலக்கீல்
- நீச்சல் குளத்தின் எந்தப் பகுதியில் நீராவி பயன்பாட்டிற்கு வசதி செய்யப்பட்டிருந்தது? தென்மேற்கு மூலை
- சிந்துவெளி மக்களின் முக்கிய தொழிலாக இருந்தது? வேளாண்மை
- ஹரப்பாவில் இருக்கும் தானிய களஞ்சியத்தின் நீளம் மற்றும் அகலம் என்ன? 168 அடி நீளம் 135 அடி அகலம்
- ஹரப்பாவில் கட்டப்பட்டிருக்கும் தானியக்களஞ்சியம் இரண்டு வரிசைகளாக கட்டப்பட்டு இருந்தன இவ்விரண்டு வரிசைகளுக்கு இடையே உள்ள தூரம் எவ்வளவு? 23 அடி
- முகம் பார்க்கும் கண்ணாடிகள் எந்த உலோகத்தால் செய்யப்பட்டிருந்தன? வெண்கலம்
- சீப்புகள் எவற்றால் செய்யப்பட்டிருந்தது? தந்தம்
- சிந்துவெளி மக்கள் கண் காது தொண்டை தோல் தொடர்பான நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்துகளை செய்வதற்கு எந்த வகையான மீனின் எலும்புகளை பயன்படுத்தியுள்ளனர்? கட்டில்
- சிந்துவெளி மக்கள் இறந்த உடலை அடக்கம் செய்வதில் எத்தனை வகையான வழிமுறைகளை பின்பற்றினர்? மூன்று
- தாழிகள் தமிழகத்தில் எந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர் ,திருக்காம்புலியூர், தாமிரபரணி ஆற்றங்கரை
- இறந்தவர்களை எந்த திசையில் புதைக்கும் வழக்கம் நடைமுறையாக இருந்தது? வடக்கு தெற்காக
- சிந்துவெளி மக்கள் நீளத்தை அளக்க என்ன முறையை பயன்படுத்தினர்? அடிமுறை
- சிந்துவெளி மக்கள் நிலத்தை அளக்க எந்த உலோக அளவுகோலை பயன்படுத்தியுள்ளனர்? வெண்கலம்
- சிந்துவெளி மக்களின் முக்கிய வழிபாடு எது? தாய் தெய்வ வழிபாடு
- ஹரப்பாவில் கண்டு பிடிக்கப்பட்ட மகாயோகியின் உருவத்தில் வலப்புறமாக உள்ள உருவங்கள் என்னென்ன? யானை புலி
- ஹரப்பாவில் கண்டு பிடிக்கப்பட்ட மகாயோகியின் உருவத்தில் இடப்புறமாக உள்ள உருவங்கள் என்னென்ன? காண்டாமிருகம், எருமை
- விலங்குகளின் கடவுள் என அழைக்கப்பட்டவர் யார்? பசுபதி
- யோகிகளின் கடவுள் என அழைக்கப்பட்டவர் யார்? யோகேஸ்வரன்
- சிந்துவெளி மக்களிடம் எந்த மரம் முதன்மையாக மர வழிபாட்டில் இடம்பெற்றுள்ளது? அரசமரம்
- சிந்துவெளி எழுத்துக்களோடு தொடர்புடைய தமிழ் எழுத்துக்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? கீழ்வாலை, குளிர்சுனை,புறக்கல், ஆலம்பாடி, செத்தவாரை, நேகனூர்பட்டி
- ஹரப்பா நாகரீகம் எந்த நதியோரம் பரவியிருந்தது? ராவி நதியோரம்
- மொகஞ்சதாரோ எந்த நதியோரம் பரவியிருந்தது? சிந்து நதி ஓரம்
- ரூபார் நாகரீகம் எந்த நதியோரம் பரவியிருந்தது? சட்லஜ் நதியோரம் பஞ்சாப்
- காலிபங்கன் நாகரீகம் எந்த நதியோரம் பரவியிருந்தது? காகர் நதி தென் கரையோரம் , ராஜஸ்தான்
- சாகுந்தாரோ நாகரீகம் எந்த நதியோரம் பரவியிருந்தது? சரஸ்வதி நதியோரம் ராஜஸ்தான்
- தோலவிரா சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த இடம் எது? கபீர் மாவட்டம் குஜராத்
- கோட்டிஜி சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த இடம் எது? சிந்து மாகாணம்
- பனவாலி சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த இடம் எது? ஹரியானா
- சுர்கோட்டா சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த இடம் எது? குஜராத்
- உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைத் துறைமுகம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?’ லோத்தல் குஜராத்
- லோத்தல் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? எஸ்.ஆர்.ராவ்
இந்த 190 சிந்துவெளி நாகரிகம் பற்றிய முக்கிய வினா விடைகள் உங்களுக்கு TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயனுள்ள பயிற்சியாக இருக்கும். இந்த வினா விடைகள் மூலம் நீங்கள் சிந்துவெளி நாகரிகம் பற்றிய உங்கள் அறிவை பரிசோதித்து, தேர்வில் சிறந்த விளக்கங்களை பெற முடியும்.
🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:
- 🌍 எங்களது அதிகாரப்பூர்வ வலைதளம்: Tamil Mixer Education
- 💬 WhatsApp குழு: Tamil Mixer Education WhatsApp Group
- 📢 Telegram: Jobs and Notes
- 📷 Instagram: Tamil Mixer Education Instagram
📂 PDF Collections:
- 📄 TNPSC Notes PDF Collection: TNPSC Notes PDF
- 📘 Test Series PDF Collection: Test Series PDFs
- 🗂️ Old Question Paper PDF Collection: Old Question Papers
- 🕉️ Hindu Aranilaiyathurai Notes PDF Collection: Hindu Aranilaiyathurai Notes
- 📚 All Exam Notes: All Exam Notes
🚀 190 சிந்துவெளி நாகரிகம் பற்றிய முக்கிய வினா விடைகள் – பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!