Home Notes All Exam Notes 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

0
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் - TNPSC Part 2
6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான 100 தமிழ் முக்கிய கேள்விகள் இங்கே! இந்த தொகுப்பில் 6 முதல் 10 வரை உள்ள 100 முக்கிய தமிழ் கேள்விகள் உள்ளன, இது TNPSC தேர்வுகளில் உங்கள் தேர்வு தயாரிப்பை மேலும் சிறப்பாக செய்ய உதவும்.

இந்த Part 2 இல் உள்ள கேள்விகள் தமிழ் இலக்கணம் மற்றும் பொது அறிவு பற்றிய முக்கியமான பகுதியைக் கவர்ந்துள்ளன. இவை TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 3

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 4

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 5

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 6

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 7

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 8

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 9

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 10

1. முதல் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை ?

அ) 30 ஆ) 12 இ) 18 ஈ) 247

விடை: அ) 30

2. ஒருவர்ககு சிறந்த அணி என்பது எது?

அ)பணம்,புகழ் ஆ)பணிவு,இன்சொல் இ)அழகு,அணிலன்கள் ஈ)வீடு,நிலம்

விடை: ஆ)பணிவு,இன்சொல்

3. தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்ற அப்துல்கலாம் அவர்ளால் பாராட்டப்பட்டவர் யார்?

அ)இஸ்ரோ சிவன் ஆ)மயில்சாமி அண்ணாதுரை இ)நெல்லை.சு.முத்து ஈ)விக்ரம் சாராபாய்

விடை: இ)நெல்லை.சு.முத்து

4. ‘ரோபோ’ என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?

அ)ரைட் சகோதரர்கள் ஆ)ஜேம்ஸ் வாட் இ)செஸ்டர்ன கார்லசன் ஈ)காரல் கபெக்

விடை: ஈ)காரல் கபெக்

5. அப்தல்கலாம் அவர்களுக்கு பிடித்தமான நுhல் எது?

அ)திருக்குறள் ஆ)நாலடியார் இ)எட்டுத்தொகை ஈ)பத்துப்பாட்டு

விடை: அ)திருக்குறள்

6. மெய்யெழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள் மொழி இறுதியில் வரும்?

அ)11 ஆ) 15 இ) 20 ஈ)18

விடை: அ)11

7. “நாட்டுப்புற இயல் ஆய்வு” என்னும் நுhலைத் தொகுத்தவர் யார்?

அ)வானமாமலை ஆ)சு.சக்திவேல் இ)புவியரசு ஈ)தென்னிந்திய புத்தக நிறுவனம்

விடை: ஆ)சு.சக்திவேல்

8. வணிகம் + சாத்து சேர்த்து எழுதுக

அ)வணிகசாத்து ஆ)வணகச்சாத்து இ)வணிகம்சாத்து ஈ)வணிகந்சாத்து

விடை: ஆ)வணகச்சாத்து

9. சுட்டு எழுத்துக்களை நீக்கினாலும் பிற எழுத்துக்கள் பொருள் தரும் எனில் அது எவ்வகைச் சுட்டு?

அ)அண்மைச்சுட்டு ஆ)அகச்சுட்டு இ) புறச்சுட்டு ஈ)சேய்மைசுட்டு

விடை: இ) புறச்சுட்டு

10. வினா எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

அ) 6 ஆ) 8 இ)5 ஈ) 4

விடை: இ)5

11. வணிகர்களின் நேர்மையை “நடுவுநின்ற நன்னெஞ்சினோர்” என்று பாராட்டும் நுhல் எது?

அ) பரிபாடல் ஆ) கலித்தொகை இ) நெடுநல்வாடை ஈ)பட்டினப்பாலை

விடை: ஈ)பட்டினப்பாலை

12. அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எவை?

அ) தங்கம் ஆ) வெள்ளி இ)வைரம் ஈ) குதிரைகள்

விடை: ஈ) குதிரைகள்

13. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

அ)6 ஆ)4 இ) 8 ஈ) 12

விடை: அ)6

14. இடுகுறி பொதுப்பெயருக்கு எடுத்துக்காட்டு?

அ) மரம் ஆ) தென்னைமரம் இ)வாழை மரம் ஈ)மாமரம்

விடை: அ) மரம்

15. அன்பினில் இன்பம் காண்போம்
அறத்தினில் நேர்மை காண்போம்- என்று தொடங்கும் பாடலை எழுதியவர் யார்?

அ)கவிமணி தேசியவிநாயகனார் ஆ)அழ.வள்ளியப்பா இ)கவிஞர் அறிவுமதி ஈ) மலேசியக் கவிஞர் முத்தரையனார்

விடை: ஈ) மலேசியக் கவிஞர் முத்தரையனார்

16. சிறந்த அறம் எது?

அ) அன்னதானம் செய்வது ஆ) முதியோர்களை பராமரிப்பது இ)மனதில் குற்றம் இல்லாமல் இருப்பது ஈ) தெய்வபக்தி உள்ளவனாக இருப்பது

விடை: இ)மனதில் குற்றம் இல்லாமல் இருப்பது

17. ஆசியஜோதி எந்த நுhலைத்தழுவி இயற்றப்பட்டது?

அ) தி பில்கிரிமேஜ் ஆ)லைட் ஆஃப் ஆசியா இ)லைட் பிரம் மெனி லேம்ப் ஈ)நாட் எனாப் ஒன் லைப்

விடை: ஆ)லைட் ஆஃப் ஆசியா

18. சமூகசேவைக்காக நோபல் பரிசு பெற்ற பெண்மணி யார்?

அ)அன்னை தெரேசா ஆ)மேரி கோம் இ)மாதா அமிர்தானந்தமயி ஈ)முத்துலெட்சுமி

விடை: அ)அன்னை தெரேசா

19. Transplanation- தமிழ்ப்படுத்துக?

அ) மடைமாற்றம் ஆ)உருமாற்றம் இ)உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஈ)மரம்நடுதல்

விடை: இ)உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை

20. ஒரு பொருளின் தன்மையை உள்ளது உள்ளபடி அழகுடன் கூறும் அணி எது?

அ)உயர்வு நவிற்சி அணி ஆ)தன்மை நவிற்சி அணி இ)இல்பொருள் உவமை அணி ஈ)தீவக அணி

விடை: ஆ)தன்மை நவிற்சி அணி

21. இந்திய வனமகன் என்று போற்றப்படுபவர் யார்?

அ)லியாண்டர் பயஸ் ஆ)சத்யார்த்தி கைலா இ)பிரக்னாநந்தா ஈ)ஜாதவ் பயேங்

விடை: ஈ)ஜாதவ் பயேங்

22. ‘ஐ’ காரம் சொல்லின் முதலில் வரும்போது எத்தனை மாத்திரை?

அ)1 1/2 ஆ)2 இ)1/2 ஈ)2

விடை: அ)1 1/2

23. ‘பொய்யாமொழி’ என்றழைக்கப்படும் நுhல் எது?

அ) தேவாரம் ஆ) திருக்குறள் இ) திருவாசனம் ஈ)புனித வேதாகமம்

விடை: ஆ) திருக்குறள்

24. போரவை கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாய் யார்?

அ) நப்பசலையார் ஆ) இ)காவற்பெண்டு இ)வெண்ணிக்குயத்தியார் ஈ)ஔவையார்

விடை: இ)காவற்பெண்டு

25. பூட்டுங்கதவுகள் பிரித்து எழுதுக?

அ) பூட்டும் + கதவுகள் ஆ) பூட்டும்+ கதவுகள இ) பூட்டுங் + கதவுகள ஈ)பூட்டும் + கதவுகள்

விடை: ஈ)பூட்டும் + கதவுகள்

26. முத்துராமலிங்க தேவரை ” தேசியம் காத்த செம்மல்” என்ற பாராட்டியவர் யார்?

அ)ராஜாஜி ஆ)பெரியார் இ)திரு.வி.க ஈ)அண்ணா

விடை: இ)திரு.வி.க

27. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதியின் பெயர் என்ன?

அ)நீதிபதி பின்ஹே ஆ)சர் ஸ்டீபன் காப் இ)சர் ஜோசப் ஹேகன் ஈ)சர் ஸ்டீபன் மோரிஸ்

விடை: அ)நீதிபதி பின்ஹே

28. சொல்லின்செல்வர் என்று போற்றப்படுபவர் யார்?

அ) கி.வ. ஜகந்நாதன் ஆ) பத்திரிக்கையாளர் சோ இ)ரா.பி. சேதுப்பிள்ளை ஈ)வலம்புரி ஜான்

விடை: இ)ரா.பி. சேதுப்பிள்ளை

29. வாயில் என்பதை வாசல் என் வழங்குகிறோம் இதை இலக்கணப்படி எப்படி கூறலாம்?

அ)இலக்கண போலி ஆ)இடக்கரடக்கல் இ)மருஉ ஈ)இடைகுறை

விடை: இ)மருஉ

30. ஓவமாக்கள் என்பது யாரைக்குறிக்கும்?

அ) அரசவை அமைச்சர்கள் ஆ) போர்படை போர்வீரர்கள் இ)கற்றறிந்த சான்றோர்கள் ஈ)ஓவியம் வரைபவர்கள்

விடை: ஈ)ஓவியம் வரைபவர்கள்

31. கேலிச்சித்திரத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

அ)ராஜா ரவிவர்மா ஆ)பாரதியார் இ) சுப்பிரமணிய சிவா ஈ)சே.பிருந்தா

விடை: ஆ)பாரதியார்

32. தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகம் தோற்றுவிககப்பட்ட ஆண்டு?

அ) 1940 ஆ) 1960 இ)1981 ஈ)1990

விடை: இ)1981

33. விகுதி இல்லாமல் முதனிலை திரிந்து வழங்கும் தொழிறபெயர் எவ்வாறு அழைக்கப்படும்?

அ)தொழிற்பெயர் ஆ)விகுதி பெற்ற தொழிற்பெயர் இ)முதனிலைத் திரிந்நத தொழிற்பெயர் ஈ)விணையாலணையும் பெயர்

விடை: இ)முதனிலைத் திரிந்நத தொழிற்பெயர்

34. ……………….. தீமை உண்டாகும்?

ஆ)செய்ய வேண்டிய செயலை செய்வதால் ஆ) இ)செய்யத் தக்க செயலை செய்யாமல் இருப்பதால் இ)செய்ய வேண்டிய செயலை தள்ளிப்போடுவதால் ஈ)செய்ய வேண்டிய செயலை பிறறிடம் ஒப்படைப்பதால்

விடை: இ)செய்யத் தக்க செயலை செய்யாமல் இருப்பதால்

35. தன்குடியை சிறந்த குடியாக செய்ய விரும்புபவரிடம்………….. இருக்கக் கூடாது

அ)கோபம் ஆ)பொறாமை இ)சோம்பல் ஈ)பொய் பேசுதல்

விடை: இ)சோம்பல்

36. கடித இலக்கியத்தின் முன்னோடி யார்?

அ) அழகிரிசாமி ஆ) மு.வ. வரதராசனார் இ)அண்ணா ஈ)டி.கே. சிதம்பரனார்

விடை: ஈ)டி.கே. சிதம்பரனார்

37. உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறும் அணி

அ) உருவக அணி ஆ) உவமை அணி இ)இல்பொருள் உவமை அணி ஈ)தீவக அணி

விடை: இ)இல்பொருள் உவமை அணி

38. அறநெறிச்சாரம் என்ற நுhலின் ஆசிரியர் யார்?

அ)காரியாசான் ஆ)முன்றுறை அரையனார் இ)முனைப்பாடியார் ஈ)ஔவையார்

விடை: இ)முனைப்பாடியார்

39. உலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய் என்று கூறியயவர் யார்?

அ)வள்ளுவர் ஆ)கம்பர் இ)ஜீவானந்தம் ஈ)பாரதிதாசன்

விடை: ஈ)பாரதிதாசன்

40. இயேசு காவியம் என்னும் நுhலை இயற்றியவர் யார்?

அ)கவியரசர் கண்ணதாசன் ஆ)கவிப்பேரரசு வைரமுத்து இ)பா.விஜய் ஈ)மனுஷ்ய புத்ரன்

விடை: அ)கவியரசர் கண்ணதாசன்

41. காடர்கள் பேசும் மொழி…………..

அ)கோத்தா ஆ) கோரகா இ)தோடா ஈ)ஆல்அலப்பு

விடை: ஈ)ஆல்அலப்பு

42. செய்பவா கருவி, நிலம், செயல், காலம, செய்பொருள் ஆறும் வெளிப்படுமாறு வருவது?

அ) குறிப்பு வினையெச்சம் ஆ)தெரிநிலை பெயரெச்சம் இ)வினைமுற்று ஈ)தொழிற்பெயர்

விடை: ஆ)தெரிநிலை பெயரெச்சம்

43. உலக ஓசோன் நாள்?

அ) ஜனவரி 15 ஆ) பிப்ரவரி 20 இ)செப்டம்பர் 16 ஈ) மே 18

விடை: இ)செப்டம்பர் 1

44. அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டது?

அ) 4 ஆ) 3 இ)2 ஈ)9

விடை: அ) 4

45. நீலகேசி எத்தனை சருக்கங்களைக் கொண்டது?

அ)25 ஆ) 15 இ)4 ஈ)10

விடை: ஈ)10

46. ரங்கராஜன் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ) சுரதா ஆ)கல்யாண்ஜி இ)இன்குலாப் ஈ)சுஜாதா

விடை: ஈ)சுஜாதா

47. பேரியாழ் எத்தனை நரம்புகளைக் கொண்டது?

அ) 12 ஆ) 20 இ)19 ஈ)14

விடை: இ)19

48. ஓன்றுக்கு மேற்பட்ட சொற்களில் ‘உம்’ என்னும் உருபு வெளிப்பட வருவது ……………எனப்படும்

அ)எண்ணும்மை ஆ)உம்மைத்தொகை இ)முற்றும்மை ஈ)உவமைத்தொகை

விடை: அ)எண்ணும்மை

49. அரசரை அவரது ……………… காப்பாற்றும்

அ) படைபலம் ஆ) பெருவீரம் இ)அண்டைநாடுகளின் ஆதரவு ஈ)குற்றமற்ற ஆட்சி

விடை: ஈ)குற்றமற்ற ஆட்சி

50. தகடுர் என்றழைக்கப்பட்ட ஊர் எது?

அ)தஞ்சை ஆ)கோவை இ)குடந்தை ஈ)தருமபுரி

விடை: ஈ)தருமபு

51. ‘பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள்” என்னும் நுhலின் பதிப்பாசிரியர் யார்?

அ)மீரா ஆ)இறையரசன் இ)அ.கௌரன் ஈ)சு.சமுத்திரம்

விடை: இ)அ.கௌரன்

52. சேரர்களின் நாடு எவ்வாறு அழைக்கப்பட்டது?

அ)சேரநாடு ஆ)மலைநாடு இ)குடநாடு ஈ)கொங்குநாடு

விடை: இ)குடநாடு

53. தென்னிந்திய சமூக சீர்த்திருத்தத்தின் தந்தை யார்?

அ) அம்பேத்கார் ஆ) ப.ஜிவானந்தம் இ)பெரியார் ஈ)அயோத்திதாசர்

விடை: ஈ)அயோத்திதாசர்

54. சிறுகதை மன்னன் என்று போற்றபபடும் புதுமைபித்தனின் இயற்பெயர் என்ன?

அ)சீவலமாறன் ஆ)ராமலிங்கம் இ) சொ.விருத்தாச்சலம் ஈ)ரங்கராஜன்

விடை: இ) சொ.விருத்தாச்சலம்

55. பா வகைகள் எத்தனை வகைப்படும்?

அ) 4 ஆ) 5 இ)8 ஈ)6

விடை: அ) 4

56. ஆண்மையின் கூர்மை ………….

அ)பெருவீரம் வெளிப்படுத்துதல் ஆ)பெரும் கொடை கொடுத்தல் இ)நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல் ஈ) பகைவருக்கு உதவுதல்

விடை: ஈ) பகைவருக்கு உதவுத

57. இறையரசனின் இயற்பெயர் என்ன?

அ) கருப்பு காந்தி ஆ) சிவஞானி இ)சே.சேசுராசா

விடை: இ)சே.சேசுராசா

58. மு.மேத்தா எந்நுhலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்?

அ) அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ஆ)புதிய உரைநடை இ)ஆகாயத்துக்கு அடுத்த வீடு ஈ)வணக்கம் வள்ளுவ

விடை: இ)ஆகாயத்துக்கு அடுத்த வீடு

59. அச்சில் வெளிவந்த அம்பேத்காரின் முதல் புத்தகம் எது?

அ) எனது போராட்டம் ஆ)கள்ளிக்காட்டு இதிகாசம் இ)இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஈ)இந்திய தேசிய பொருளாதார பங்கு வீதம்

விடை: இ)இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

60. இராஜலட்சமி என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)சே.பிருந்தா ஆ) மீரா இ)கோமகள் ஈ)ராஜம் கிருஷ்ணன்

விடை: இ)கோமகள்

61. வாழை + மரம் இந்த புணர்ச்சி எந்தவகைப் புணர்ச்சி?

அ) உயிர்முதல் புணர்ச்சி ஆ)மெய்முதல் புணர்ச்சி இ)உயிரீற்றுப் புணர்ச்சி ஈ)மெய்யீற்றுப் புணர்ச்சி

விடை: ஆ)மெய்முதல் புணர்ச்சி

62. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் – குறளில் பயின்றுவரும் அணி எது?

அ) உவமை அணி ஆ) உருவக அணி இ)ஏகதேச உருவக அணி ஈ)வேற்றுமை அணி

விடை: இ)ஏகதேச உருவக அணி

63. இந்திய தேசிய இராணுவத்தில் வான்படை பயிற்சி பெற்ற 45 பேர் கொண்ட குழுவின் பெயர் என்ன?

அ)டோக்கியோ கேடட்ஸ் ஆ) ஆஃப்ரேசன் புளு ஸ்டார் இ)ப்ளீட்ஸ் க்ரீக் ஈ)கொரில்லா படை

விடை: அ)டோக்கியோ கேடட்ஸ்

64. நரி விருத்தம் என்னும் நூலை இயற்றியவர் யார்?

அ)ஒட்டக் கூத்தர் ஆ)ஜெயங்கொண்டார் இ)திருத்தக்கதேவர் ஈ)போகர்

விடை: இ)திருத்தக்கதேவர்

65. முத்தொள்ளாயிரத்தில் சோழநாடு எவ்வாறு சிறப்பிக்கப்பபடுகிறது?

அ)புண்ணியபூமி ஆ)முத்துடைநாடு இ)அச்சமில்லாத நாடு ஈ)ஏர்க்களச்சிறப்பு போர்களச்சிறப்பு

விடை: ஈ)ஏர்க்களச்சிறப்பு போர்களச்சிறப்பு

66. மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளைக் கொண்டது?

அ) 103 ஆ) 582 இ)782 ஈ)400

விடை: இ)782

67. ஆகுபெயர்கள் எத்தனை வகைப்படும்?

அ) 16 ஆ) 15 இ) 18 ஈ)8

விடை: அ) 16

68. ஈ.வெ.ரா. வுக்கு பெரியார் பட்டம் வழங்கப்பட்ட நாள் எது?

அ)1938, நவம்பர் 13 ஆ)1920 நவம்பர் 15 இ)1900 அக்டோபர் 20 ஈ)1890 டிசம்பர் 5

விடை: அ)1938, நவம்பர் 13

69. தெற்காசியாவின் சாக்ரடிஸ் என்றழைக்கப்படுபவர் யார்?

அ) பெரியார் ஆ) அம்பேத்கார் இ) அயோத்திதாசர் ஈ)ப.ஜீவானந்தம்

விடை: அ) பெரியார்

70. புதுக்கவிதைகளின் தந்தை யார்?

அ)பாரதியார் ஆ) மு.மேத்தா இ) தமிழன்பன் ஈ)நா.பிச்சமுர்த்தி

விடை: ஈ)நா.பிச்சமுர்த்தி

71. யாருடைய காலகட்டம் சீனசிந்தனையின்பொற்காலமாக கொண்டாடப்படுகிறது?

அ)போதிதர்மர் ஆ) தாங் வம்சம் இ)ஹான் வம்சம் ஈ)லாவோட்சு

விடை: ஈ)லாவோட்சு

72. யசோதரகாவியம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது?

அ) 5 ஆ) 8 இ) 10 ஈ)20

விடை: அ) 5

73. அடிகள் எத்தனை வகைப்படும்?

அ) 5 ஆ) 4 இ) 8 ஈ)3

விடை: அ) 5

74. தொடை எத்தனை வகைப்படும்?

அ)6 ஆ) 7 இ) 5 ஈ)8

விடை: ஈ)8

75. ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகவியல் மேதை யார்?

அ) ரூஸோ ஆ)வால்டேர் இ)பிளேட்டோ ஈ)ஆல்பர் சுவைட்சர்

விடை : ஈ)ஆல்பர் சுவைட்ச

76. கல்யாண்ஜியின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் எது?

அ) குறிஞ்சி மலர் ஆ)தமிழின்பம் இ)ஒரு சிறு இசை ஈ)இதனால் சகலமானவர்களுக்கும்

விடை: இ)ஒரு சிறு இசை

77. குறுந்தொகையின் அடி வரையறை?

அ) 4-12 ஆ)9-13 இ) 4-8 ஈ)3-6

விடை: இ) 4-8

78. சு.சமுத்திரம் எந்நுலுக்காக சாகித்ய அகாடமி விருதுபெறறார்?

அ)வைகறை மேகங்கள் ஆ) வால்காவிலிருந்து கங்கை வரை இ) பெய்யென பெய்யும் மழை ஈ)வேரில் பழுத்த பலா

விடை: ஈ)வேரில் பழுத்த பலா

79. புகழ்வது போல இகழ்வதும் இகழ்வது போல புகழ்வதும் வருவது எந்த அணி?

அ) உவமை அணி ஆ) உருவக அணி இ)வஞ்சப் புகழ்ச்சி அணி ஈ)வேற்றுமை அணி

விடை: இ)வஞ்சப் புகழ்ச்சி அணி

80. சிற்பியின் மகள் என்னும் நூலை எழுதியவர் யார்?

அ) கோமகள் ஆ) ஆண்டாள் இ)பூவண்ணன் ஈ)மா.நன்னன்

விடை: இ)பூவண்ணன்

81. முகமதுரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)காயிதே மில்லத் ஆ)உமறுபுலவர் இ)குணங்குடி மஸ்தான் சாகிபு ஈ)நாகூர்ரூமி

விடை: ஈ)நாகூர்ரூமி

82. இஸ்மத் சந்நியாசி என்றழைக்கப்பட்டவர் யார்?

அ)தவத்திரு குன்றங்குடி அடிகளார் ஆ)கிருபானந்த வாரியார் இ)ஜெயேந்திரர் ஈ)வீரமாமுனிவர்

விடை: ஈ)வீரமாமுனிவர்

83. கரிசல் எழுத்தாளர்களின் வரிசையில் மூத்தவர் யார்?

அ)கி.ராஜநாராயணன் ஆ) ப.ஜெயப்பிரகாசம் இ)சோ.தர்மன் ஈ)அழகிரிசாமி

விடை: ஈ)அழகிரிசாமி

84. செய்யுளில் ஓரிடத்தில் நின்ற சொல் அச்செய்யுளில்பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்தி பொருள் தருவது?

அ) உவமை அணி ஆ) உருவக அணி இ)தீவக அணி ஈ)வேற்றுமை அணி

விடை: இ)தீவக அணி

85. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் நூலை எழுதியவர் யார்?

அ)நா.முருகேச பாண்டியன் ஆ)கபிலர் இ)ஔவையார் ஈ)கலைஞர் கருணாநிதி

விடை: அ)நா.முருகேச பாண்டியன்

86. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எந்நூல் தமிழுக்கு கருவூலமாய் விளங்கியது?

அ)நூறாசிரியம் ஆ)பாவியக்கொத்து இ)கொய்யாக்கனி ஈ)திருக்குறள் மெய்ப்பொருளுரை

விடை: கமெண்ட் பண்ணவும்

87. கரும்பின் நுனிப்பகுதியை எவ்வாறு குறிக்கலாம்?

அ) அடி ஆ)கழை இ)கொழுந்து ஈ)கொழுந்தாடை

விடை: ஈ)கொழுந்தாடை

88. தமிழழகனாரின் இயற்பெயர் என்ன?

அ)ரங்கராஜன் ஆ) முத்தையா இ)சண்முக சுந்தரம் ஈ)துரை.மாணிக்கம்

விடை: இ)சண்முக சுந்தரம்

89. திருவள்ளுவர் என்ற பெயரில் முதல் தமிழ்கணிணி தயாரித்த தனியார் நிறுவனம்?

அ)டி.சி.எம் டேட்டா புரோடெக்ட்ஸ் ஆ)டோக்கியோ கேடட்ஸ் இ)டீப் புளு ஈ)ஐ.பி.எம்

விடை: அ)டி.சி.எம் டேட்டா புரோடெக்ட்ஸ்

90. மா.ராமலிங்கம் என்னும் இயற்பெயரைக் கொண்டவர் யார்?

அ)காளமேகப்புலவர் ஆ) அதிவீரராம பாண்டியர் இ) எழில்முதல்வன் ஈ)சுரதா

விடை: இ) எழில்முதல்வன்

91. வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் ?

அ)தொழிற்பெயர் ஆ) விகுதிபெற்ற தொழிற்பெயர் இ)விணையாலணையும் பெயர் ஈ)முதனிலைத் தொழிற்பெயர்

விடை: ஆ) விகுதிபெற்ற தொழிற்பெயர்

92. உலக காற்றாலை உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடம்?

அ) 5 ஆ)3 இ) 2 ஈ)1

விடை: அ) 5

93. முல்லைப்பாட்டு எந்தவகைப் பாவகையால் ஆனது?

அ) விருத்தப்பா ஆ) கலிப்பா இ) வெண்பா ஈ)ஆசிரியப்பா

விடை: ஈ)ஆசிரியப்பா

94. புலம்பெயர் தமிழர்களைப்பற்றிய முதல் புதினம்?

அ) குறிஞ்சிமலர் ஆ) புயலிலே ஒரு தோணி இ)ஆறாம் திணை ஈ)இதனால் சகலமானவர்களுக்கும்

விடை: ஆ) புயலிலே ஒரு தோணி

95. தொகைநிலைத்தொடர்கள் எத்தனை வகைப்படும்?

அ) 6 ஆ)3 இ) 2 ஈ)1

விடை: அ) 6

96. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” என்று கூறும் நூல்?

அ) குறுந்தொகை ஆ)புறநானூறு இ)நற்றிணை ஈ)கலித்தொகை

விடை: இ)நற்றிணை

97. அதிவீரராம பாண்டியரின் இயற்பெயர் என்ன?

அ)சொ.விருத்தாசலம் ஆ)ரங்கராஜன் இ)முகமது ரஃபி ஈ)சீவலமாறன்

விடை: ஈ)சீவலமாற

98. மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் யார்?

அ) நக்கீரர் ஆ)பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் இ)மதுரை இளநாகனார் ஈ)முடத்தாம கண்ணியார்

விடை:

99. கோபல்லபுரத்து மக்கள் புதினம் எந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது?

அ) 1991 ஆ)31945 இ) 1854 ஈ)1995

விடை: அ) 1991

100. தொகாநிலைத் தொடர்க்ள எத்தனை வகைப்படும்?

அ) 9 ஆ)3 இ) 2 ஈ)1

விடை: அ) 9

6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 1

PRINTOUT 50 PAISE LOW COST

இந்த 100 தமிழ் முக்கிய கேள்விகள் TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த பயிற்சியாக இருக்கும். இந்த Part 2 கேள்விகளுடன் உங்கள் தமிழ் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!


🌐 முக்கிய வலைதளம் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள்:


📂 பி.டி.எப் தொகுப்புகள்:

🚀 6 முதல் 10 வரை 100 தமிழ் முக்கிய கேள்விகள் – TNPSC Part 2 க்விஸ் பதிவிறக்கம் செய்து, உங்கள் தேர்வு தயாரிப்பை மேம்படுத்துங்கள்!

TAMIL MIXER EDUCATION GOOGLE SEARCH

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version