💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 10 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 முடிவுகள் வெளியீடு மற்றும் தற்காலிக பதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கான நாட்கள் குறித்த தகவல்கள் அடங்கிய செய்தி குறிப்பு.
அரசாணை ( நிலை ) எண் .54 பள்ளிக் கல்வித் ( அ.தே ) துறை , நாள் 09.06.2020 – ன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2020 தொடர்பான தேர்வு முடிவுகள் 10.08.2020 ( திங்கட்கிழமை ) அன்று காலை 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி , மாதம் , வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம் .
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்குப் பதிலாக , மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின் , 17.08.2020 முதல் 25.08.2020 வரையிலான நாட்களில் பயின்ற பள்ளியின் வாயிலாக குறை தீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து , பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரகத் தேர்வுத் துறை இணைய தளம் ( www.dge.tn.gov.in ) மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் :
17.08.2020 முதல் 21.08.2020 வரையிலான நாட்களில் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம்.