|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
இந்தியாவில் தொழில்நுட்ப படிப்பிற்கு மிகவும் பிரபலமான இடமாக என்.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டி பார்க்கப்படுகிறது. 2021- 2022 கல்வி அமர்வுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) ஆகியவை தாய்மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்க உள்ளது என கல்வி அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சரான ரமேஷ் போக்ரியால் நிஷாங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவானது புதிய கல்வி கொள்கைக்கு ஏற்ப ஒருவர் முடிந்தவரை தனது தாய் மொழியிலேயே கல்வியை பெற வேண்டும் என்ற விருப்பத்தை கொண்டுள்ளது.
தொழில்நுட்ப கல்வியை துவங்க இங்கு ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொறியியல் படிப்புகளை தாய் மொழியில் வழங்கும் திட்டம் அடுத்த கல்வியாண்டில் துவங்கப்படும். ஒரு சில ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி கல்வி நிறுவனங்கள் இதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
அரசின் பட்டியல் நிறுவனங்கள்
இந்த முடிவுகளை பற்றி ஒரு மூத்த அதிகாரி கூறும்போது பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் பனாரஸில் உள்ள ஐ.ஐ.டி பல்கலைகழகமான இந்து பல்கலைகழகத்தில் துவங்கும். மேலும் இப்போதைக்கு தாய்மொழியில் பொறியியல் பயில ஐ.ஐ.டி, பி.எச்.யு மற்றும் மேலும் சில கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அடுத்து இவை அதிகரிக்கலாம். என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இதற்கு வலுவான வரவேற்பு இருப்பதால் ஐ.ஐ.டி மற்றும் பி.எச்.யு வில் இதற்கான முயற்சிகள் துவங்கப்பட வேண்டும் என உணர்ந்ததாக அமைச்சகத்தின் வட்டாரங்கள் பேசிகொள்கின்றனர். ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகிய கல்வி நிறுவன அதிகாரிகளை நேரில் சந்திக்க வேண்டும்.
அவர்களை சந்தித்த பின்னே எதிர்வரும் நாட்களில் தாய் மொழியை அடிப்படையாக கொண்டு பொறியியல் கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் பெயர்கள் முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு புதிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டதில் இருந்தே போக்ரியால் பிராந்திய மொழிகள் தொடர்பான அழுத்தம் மற்றும் பிரச்சனைகளுக்கு உள்ளானார். ஒரு பேட்டியில் அவர் கூறும் போது எங்கெல்லாம் ஒருவருக்கு அவரது தாய் மொழியில் கல்வியை அளிக்க முடியுமோ அங்கு எல்லாம் முடிந்த அளவு அவர்களின் தாய் மொழியிலேயே கல்வியை வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
புதிய கல்வி கொள்கை குறித்த அறிவிப்புக்கு பின்னர் நடந்த பொது மன்றங்கள் மற்றும் கருத்தரங்களிலும் இதே கருத்தை முன் வைத்தார். ஒருவரின் தாய் மொழியை வளர்க்கவே புதிய கல்வி கொள்கை வாதிடுகிறது என அவர் கூறினார்.
2021 ஆம் ஆண்டு முதல் கூட்டு நுழைவு தேர்வுகள் கூட பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று கடந்த மாதம் அமைச்சகம் அறிவித்தது. இந்த நுழைவு தேர்வானது ஏற்கனவே இந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது. எனவே வரும் ஆண்டுகளில் மாநிலத்தின் தாய் மொழியிலேயே தேர்வுகள் நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


