மகாத்மா காந்தியடிகளின் 150- ஆவது ஜெயந்தி தின (அக்.2) நிறவையொட்டி, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலர் க.மு. நடராஜன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மீ. மருது பாண்டியன் ஆகியோர் வியாழக்கிழமை கூட்டமாக வெளியிட்டுள்ள செய்தி: போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெரும் மாணவ, மாணவியருக்கு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் அக்டோபர் 2-இல் நடைபெறும் காந்தி ஜெயந்தி விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
ஓவியப் போட்டியில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அமைதி, சமயநல்லிணக்கம் என்ற தலைப்புகளிலும், 10ம் வகுப்பு முதல் +2 வரையுள்ள மாணவர்கள் சர்வோதயம், இறையாண்மை என்ற தலைப்புகளிலும் ஏதேனும் ஒரு ஓவியம் வரைய வேண்டும். கட்டுரைப் போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் காந்தியடிகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட சுவையான நிகழ்வுகள் அல்லது காந்தியடிகளின் கொள்கையும் கோட்பாடும் என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்கள் காந்தியடிகளின் சமூக சிந்தனை அல்லது காந்தியடிகளின் இயற்கை வாழ்வியல் கொள்கைகள் ஆகியவற்றின் ஒரு தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.
ஓவியம் மற்றும் கட்டுரையில் மாணவர் பெயர், வகுப்பு, பிரிவு, பள்ளியின் பெயர் மற்றும் முகவரி, வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்களைக் குறிப்பிடவேண்டும். ஓவியங்கள் மற்றும் கட்டுரைகளை வருகின்ற செப்.21 ஆம் தேதி மாலை 5 மணிக்குள், “காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம்,மதுரை – 20 அல்லது செயலர், காந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை-20 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 97900-33307, 0452-2531060 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download
👉 ஜனவரி – டிசம்பர் 2019 (334 பக்கங்கள்)
50 Rs. – Click here to Pay & Download (After payment you will receive PDF by Mail)
✅ தினமணி நாளிதழில் வந்த அரசுப் பணி தேர்வுக்கான மாதிரி வினா விடைகள் Collections
👉ஜனவரி – மே 2020 (150 பக்கங்கள்)
30 Rs. – Click here to Pay & Download