HomeBlogஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு டி.வி. மூலம் தினமும் இலவச பயிற்சி
- Advertisment -

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு டி.வி. மூலம் தினமும் இலவச பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு டி.வி. மூலம் தினமும் இலவச பயிற்சி



ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு டி.வி. மூலம் தினமும் இலவச பயிற்சி

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு மனிதநேய பயிற்சி மையம் இந்தியாவிலேயே முதல்முறையாக டி.வி. மூலம் இலவச பயிற்சியை வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தினமும் ஒளிபரப்ப இருக்கிறது என மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் மூலம் தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ-மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கோடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சாதாரண ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவர் சென்னையில் வந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தங்கி படிக்கின்றபோது ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு ஆகின்றது என்று பெற்றோர் சொன்ன பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவந்தது. பொதுவாக முதல் முயற்சியில் ஒரு மாணவர் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினம். மிகவும் குறைந்த மாணவர்கள்தான் இதில் வெற்றி பெறுவார்கள். மற்ற மாணவர்கள் 2-வது, 3-வது அல்லது 4-வது முயற்சியில் வெற்றிபெறுவார்கள். அவ்வாறு முயற்சி செய்து வருபவர்களுக்கு ஆண்டுதோறும், தங்கி படிப்பதற்கு நிறைய செலவு ஆகிறது என்று நாங்கள் புரிந்துகொண்டு ஏதாவது ஒரு மாற்றுவழி கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வந்தோம்.

மிகக் குறைந்த விலையில் Amazon-ல் இங்கே பொருட்கள் வாங்கிடுங்கள்  
ஏழை எளியவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்கள் என அனைத்து பிரிவை சார்ந்தவர்களுக்கும் ஒரு பைசா செலவு இல்லாமல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பது தான் மனிதநேய மையத்தின் உயரிய நோக்கம். அதற்காகத்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக டி.வி. வாயிலான கல்வி ஒளிபரப்பு முயற்சி, எவ்வித கட்டணமும் இன்றி மாணவர்களுக்காக வழங்கப்பட இருக்கிறது. தூர்தர்ஷனின் பொதிகை சேனலில் ஒளிபரப்பப்படுவதால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளும் பார்த்து படித்து பயன்பெற முடியும். மேலும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கலைக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி மற்றும் பல்வேறு பிரிவுகளில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் போன்றோர், விருப்பம் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்பவர்கள் தகுதியும், திறமையும் உள்ள திருமணமான பெண்கள் வீட்டில் இருந்தபடியே இந்த டி.வி. வாயிலாக கல்வி நிகழ்ச்சியை கண்டு பயன்பெறலாம்.

வருகிற 3-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை தூர்தர்ஷனின் பொதிகை சேனலில் மனிதநேயம் இலவச கல்வி மையத்தின் ‘தொலைக்காட்சி வழி ஐ.ஏ.எஸ். பயிற்சி’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். மேலும் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு எங்களுடைய www.mntfreeias.com என்ற இணையதளத்தில் தங்களுடைய பெயர் மற்றும் முகவரி விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

NOTICE LINK: CLICK HERE


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again…Thank you…

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -