HomeBlogமஞ்சள் - கிருமி நாசினி

மஞ்சள் – கிருமி நாசினி




மஞ்சள் – கிருமி நாசினி




பச்சை
மஞ்சளை நன்கு அரைத்து,
அடிபட்ட இடங்களில் பூசுவதால்
பூச்சிகள் கடித்து உடலில்
பரவிய நஞ்சு முறியும்.
 
மஞ்சளை
உணவில் அதிகம் சேர்த்து
சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு
வெகுவாக குறைகிறது.
மஞ்சள்
கலந்து செய்யப்பட்ட உணவுகளை
சாப்பிடுவதால் நமது
உடலில் தங்கியுள்ள நச்சுக்கள், குடற் பூச்சிகள் போன்றவை
அழிகின்றன. குறிப்பாக சிறு
குழந்தைகளுக்கு மஞ்சள்
கலந்த உணவுகளை அடிக்கடி
கொடுத்து வந்தால் அவர்களின்
செரிமானத் திறன் மேம்படுகிறது. புண்கள் உடலில் ஏற்படும்
காயங்கள் புண்களாக மாறி
மிகுந்த வலியை வேதனையை
தருகிறது. இந்த புண்கள்
கிருமித் தொற்றுக்கள் ஏற்படாமல்
காப்பது முக்கியமாக இருக்கிறது. உடலில் பட்ட காயங்கள்
மற்றும் புண்கள் மீது
அவ்வப்போது மஞ்சள் தூளை
தூவி வருவதால் அவை
இயற்கையான கிருமி கொல்லியாக
செயல்பட்டு, உடலில் இருக்கின்ற கிருமிகளை அழித்து, மேற்கொண்டு புண்களில் கிருமித்தொற்று ஏற்படாமல்
காத்து காயங்களை வேகமாக
ஆற்றுகிறது.
தினமும்
மஞ்சளை நீரில் கலந்து,
முகத்திற்கு நன்கு பூசி
சிறிது கழித்து முகம்
கழுவி வந்தால் முகத்தில்
முளைக்கின்ற தேவையற்ற முடிகள்
உதிரும். எதிர்காலத்தில் முகத்தில்
தேவையற்ற முடிகள் முளைக்காமல் தடுக்கவும் செய்கிறது.
இரவு
நேரங்களில் சூடான பசும்
பாலில் சிறிது மஞ்சள்
மற்றும் சிறிது மிளகு
தூள் கலந்து, தினந்தோறும் பருகிவர எப்படிப்பட்ட சளி,
ஜலதோஷ பாதிப்புகளும் நீங்கும்.
ஜலதோஷத்தால் மூக்கில் நீர்
வடிதல், தலைவலி போன்றவை
குறையும்.
அம்மை
நோயிலிருந்து விடுபட
மஞ்சள் மற்றும் வேப்பிலையை ஒன்றாக சேர்த்து, அரைத்து
உடலில் பூசி தினமும்
குளித்து வந்தால் அம்மை
நோய் நீங்கும். அம்மை
பாதிக்கப்பட்டவர்களை சுற்றி
மஞ்சள் கலந்த நீரை
தெளித்து வந்தால் பிறருக்கும் அம்மை தாக்காமல் காக்கும்.
பாத
வெடிப்புகளுக்கு இரசாயன
மருந்துகளை பூசுவதைவிட தேங்காய்
எண்ணெயுடன், மஞ்சள் தூளை
நன்கு கலந்து, பாதத்தில்
உள்ள வெடிப்புகளில் தடவி
வந்தால் வெகு விரைவில்
பாத வெடிப்புகள் குணமாகும்.
புதிதாக
குழந்தையை பெற்றெடுத்த பெண்கள்
மஞ்சள் பொடியை உணவில்
கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று உபாதைகள்
நீங்குவதோடு, கருப்பையில் தங்கியிருக்கும் நச்சுக்கள் நீங்கி உடல்
நலத்தை மேம்படுத்தும்.
மதுபோதையில் இருப்பவர்களை நெருப்பு
மூட்டி புகை ஏற்படுத்தி, அதில் மஞ்சள் தூளை
போட்டு, அந்த மஞ்சள்
புகையை மது போதையில்
இருப்பவர்கள் வாய்
வழியாக உள்ளுக்கு இழுத்தால்
மதுபோதை உடனடியாக தெளியும்.







Check Related Post:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular