மெயின்புரி நகரைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியை அனாமிகா சுக்லா. இவர் அங்குள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (கேஜிபிவி) பள்ளியில் முழுநேர ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். ஆனால், இவரின் பெயர் அம்பேத்நகர், பாக்பத், அலிகார், சஹரான்பூர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 25 பள்ளிகளிலும் பணிபுரிவதாக பதிவேட்டில் இருக்கிறது. இதனால் கடந்த 13 மாதங்களாக அனாமிகா சுக்லாவுக்கு இந்தப் பள்ளிகள் மூலம் ஊதியமாக ரூ.1 கோடி கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் அனைத்தும் ஆன்லைன் மூலம் வழங்கப்படுவதால் இதை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பள்ளி வாரியாக ஆசிரியர்களுக்கு “மனவ் சம்பதா” எனும் டேட்டா பேஸ் இணையதளத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது அனாமிகா சுக்லாவின் பெயர் 25 பள்ளிகளில் ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
25 மாவட்டங்களில் அனாமிகா சுக்லா ஆசிரியர் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 25 பள்ளிக்கூடங்களில் இருந்து கடந்த 13 மாதங்களாக அனாமிகா சுக்லாவுக்கு மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில பள்ளிக் கல்வி இயக்குநர் விஜய் கிரண் ஆனந்திடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறுகையில், “இது மிகப்பெரிய மோசடி. இது எவ்வாறு நடந்தது எனத் தெரியவில்லை. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். தனக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் இத்தனை பள்ளிகளில் இருந்து வரும்போது அதை ஆசிரியராக இருப்பவர் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டியது கடமை. அதுமட்டுமல்லாமல் 25 பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் தனது வருகைப் பதிவையும் அனாமிகா செய்துள்ளது தெரியவந்துள்ளதால் விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார். ள்ளியில் பணிபுரிந்து வருவதாக கடந்த பிப்ரவரி மாதம் பதிவேட்டில் தெரியவந்தது.
ஆனால், அவர் மெயின்புரி பள்ளியில் பணிபுரிந்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஏதோ தவறு நடக்கிறது என்பதை அறிந்த அதிகாரிகள் விசாரணையில் இறங்கியபோது அனாமிகா சுக்லா சிக்கினார். ரேபரேலி மாவட்ட கல்வி அதிகாரி ஆனந்த் பிரகாஷ் கூறுகையில், “ரேபரேலி கேஜிபிவி பள்ளியில் அனாமிகா பணிபுரியாதபோது அவர் இங்கு பணியாற்றுவதாக பதிவேட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சர்வ சிக்ஷ அபியான் அமைப்பு 6 மாவட்டங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி சுக்லாவின் பெயர் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அப்போதுதான் அனாமி சுக்லாவின் பெயர் 25 கேஜிபிவி பள்ளிகளில் இருப்பது தெரியவந்து. இது தொடர்பாக அனாமி சுக்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இன்னும் பதில் அளிக்கவில்லை. அவரின் ஊதியமும் நிறுத்தப்பட்டது. லாக்டவுன் காரணமாக நேரடியாக விசாரணை நடத்த முடியவில்லை. தற்போது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. தனது ஒரே வங்கிக்கணக்கை பல பள்ளிகளுக்கும் வழங்கி அதில் ஊதியத்தை அனாமிகா பெற்றுள்ளது தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்தார். உ.பி. பள்ளிக்கல்வி அமைச்சர் சதீஸ் திவேதி கூறுகையில், “ஆசிரியை அனாமிகா குறித்து விசாரிக்க உத்தரவி்டப்பட்டுள்ளது. தவறு செய்தது உண்மையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக அரசு பதவி ஏற்றபின் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் டேட்டா பேஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில்தான் இந்த மோசடி நடந்தது தெரியவந்தது. இதற்கு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram




