HomeBlogவரலாற்றில் இன்று ஜூன் 8….!!

வரலாற்றில் இன்று ஜூன் 8….!!




வரலாற்றில் இன்று ஜூன் 8….!!




கிரிகோரியன் ஆண்டு : 159 ஆம் நாளாகும். 
நெட்டாண்டு : 160 ஆவது நாள். 
ஆண்டு முடிவிற்கு : 206 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்:

452 – அண் பேரரசர் அட்டிலா இத்தாலியை முற்றுகையிட்டுப் பிடித்தார்.

632 – இசுலாமிய இறைவாக்கினர் முகம்மது நபி மதீனாவில் இறந்தார்.

1042 – எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார்.

1405 – யார்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்போக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்கிலாந்தின் நான்காம் என்றி மன்னரின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர்.

1783 – ஐசுலாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் உயிரிழந்தனர். அடுத்த ஏழாண்டுகள் அங்கு பஞ்சம் நிலவியது.

1856 – 194 பிட்கன் தீவினரைக் கொண்ட ஒரு குழு நோர்போக் தீவை அடைந்து அத்தீல் மூன்றாவது குடியிருப்பை ஆரம்பித்தனர்.





1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னிசி அமெரிக்கக் கூட்டில் இருந்து விலகியது.

1867 – பிரான்சு யோசப் அங்கேரியின் மன்னராக முடிசூடினார்.

1887 – ஏர்மன் ஒலரித் துளையிடும் அட்டைக் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.

1928 – தேசியப் புரட்சி இராணுவத்தினர் பீக்கிங் நகரைக் கைப்பற்றி, அதன் பெயரை பெய்ஜிங் (“வடக்குத் தலைநகர்”) என மாற்றினர்.

1940 – இரண்டாம் உலகப் போர்: ஆல்ஃபபெட் நடவடிக்கை நிறைவடைந்தது. நார்வே போர்த்தொடரின் இறுதியில் நேசப்படையினர் நார்விக்கில் இருந்து விலகினர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிரியா, மற்றும் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தன.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆத்திரேலியாவின் சிட்னி, நியூகாசில் நகரங்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.

1949 – எழுத்தாளர் எலன் கெல்லர் உட்பட ஏழு பேரை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களாக எஃப்பிஐ அறிக்கை தெரிவித்தது.

1953 – மிச்சிகனை சூறாவளி தாக்கியதில் 116 பேர் உயிரிழந்தனர், 340 வீடுகள் சேதமடைந்தன.


1953 – வாசிங்டன் உணவகங்களில் கறுப்பினத்தவர்களையும் அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.





1966 – இரண்டு போர் வானூர்திகள் தெற்கு கலிபோர்னியாவில் மோதிக் கொண்டதில் நாசா விமானி ஒருவரும், வான்படை விமானி ஒருவரும் உயிரிழந்தனர்.

1967 – ஆறு நாள் போர்: அமெரிக்காவின் லிபர்ட்டி என்ற ஆய்வுக் கப்பல் இசுரேலின் வான்படையினரால் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதில் 34 பேர் கொல்லப்பட்டனர், 171 பேர் காயமடைந்தனர்.

1972 – வியட்நாம் போர்: ஒன்பது வயது சிறுமி நேப்பாம் குண்டு வீசப்பட்டதில் காயமடைந்தது வீதி வழியே ஓடி வருவதை அசோசியேட்டட் பிரெசு செய்தியாளர் படம் பிடித்தார். இப்படத்திற்கு பின்னர் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டது.

1982 – போக்லாந்து போர்: 56 பிரித்தானியப் படையினர் அர்ஜெந்தீன வான் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

1984 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்பால்சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.


1992 – முதலாவது உலகப் பெருங்கடல்கள் நாள் கொண்டாடப்பட்டது.

1995 – படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.

2004 – 1882 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அவதானிக்கப்பட்டது.

2007 – இலங்கையில் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் மீட்கப்பட்டன.

2007 – ஆத்திரேலியாவில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் உயிரிழந்தனர். வணிகக் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது.

2008 – உக்ரைனில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் 37 தொழிலாளர்கள் காணாமல் போயினர்.

2014 – பாக்கித்தான் கராச்சியில் ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்:


1625 – ஜியோவன்னி டொமினிகோ காசினி, இத்தாலிய-பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1712)

1810 – ராபர்ட் சூமான், செருமானிய இசையமைப்பாளர் (இ. 1856)


1867 – பிராங்க் லாய்டு ரைட், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 1959)

1874 – சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி, இலங்கை அரசியல்வாதி, சட்டசபை சபாநாயகர் (இ. 1966)

1916 – பிரான்சிஸ் கிரிக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர், நரம்பியலாளர் (இ. 2004)

1918 – டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை, தமிழக அரசியல்வாதி (இ. 2006)

1921 – சுகார்த்தோ, இந்தோனேசியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2008)

1930 – இர. ந. வீரப்பன், மலேசிய எழுத்தாளர் (இ. 1999)

1941 – ஜார்ஜ் பெல், ஆத்திரேலியக் கருதினால்

1955 – டிம் பேர்னேர்ஸ்-லீ, உலகளாவிய வலையை உருவாக்கிய ஆங்கிலேயக் கணினியாளர்

1957 – டிம்பிள் கபாடியா, இந்திய நடிகை




1975 – சில்பா செட்டி, இந்திய நடிகை

இறப்புகள்:


632 – முகம்மது நபி, இசுலாமியத்தை உருவாக்கிய சமயத் தலைவர் (பி. 570/571)

1809 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1737)

1845 – ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது அரசுத்தலைவர் (பி. 1767)

1951 – புதுக்கோட்டை சீனு, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர், எழுத்தாளர்

1968 – மதுரை மணி ஐயர், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1912)

1969 – அருணாசலம் மகாதேவா, இலங்கை அரசியல்வாதி (பி. 1885)

1970 – ஆபிரகாம் மாசுலோ, அமெரிக்க உளவியலாளர் (பி. 1908)

1986 – தாமசு பறோ, ஆங்கிலேய இந்தியவியலாளர், சமற்கிருதப் பேராசிரியர் (பி. 1909)

1990 – பி. ஏ. பெரியநாயகி, தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகி, கருநாடக இசைப் பாடகி, நடிகை (pi. 1927)

2009 – ஹபீப் தன்வீர், இந்திய நாடகாசிரியர், இயக்குநர், நடிகர் (பி/ 1923)

2012 – கே. எஸ். ஆர். தாஸ், தெலுங்குத் திரைப்பட இயக்குநர் (பி. 1936)

2016 – கே. கே. கத்யால், இந்தியப் பத்திரிகையாளர்

சிறப்பு நாள்:

உலக மூளைக்கட்டி நாள்

உலகப் பெருங்கடல்கள் நாள்








Check Related Post:

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular