"தற்சார்பு இந்தியா" - வினாடிவினாப் போட்டி - 2020 சுதந்திரத் தினக் கொண்டாட்டம்
2020 ஆகஸ்ட் 15 தேதி சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக "தற்சார்பு இந்தியா" கருத்துரு பெரிய அளவில் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே நாட்டுப்பற்று உணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வினாடிவினாப் போட்டி நடத்த திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம், "மைகவ்" இணையதளத்துடன் இணைந்து, ஜூலை 29-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை, "தற்சார்பு இந்தியா-சுதந்திர இந்தியா" என்ற தலைப்பில் இணையதள வினாடிவினாப் போட்டியை நடத்துகிறது.

இந்தப்போட்டியில் 10 பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
முதல் பரிசாக ரூ.25,000
இரண்டாம் பரிசு ரூ.15,000,
மூன்றாம் பரிசு ரூ.10,000 மற்றும்
ஆறுதல் பரிசாக (7 பேருக்கு) ரூ.5,000-மும் அளிக்கப்பட உள்ளது.

14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய இந்திய குடிமக்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post