சுஷாந்த் சிங் மறைவால் தோனி 2.ம் பாகம் கைவிடப்பட்டதா?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வாழ்க்கை கதையான "எம்.எஸ்.தோனி அன்ட் டோல்ட் ஸ்டோரி" படத்தில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை, பட உலகினரையும் ரசிகர்களையும் உலுக்கி உள்ளது. 2016.ல் வெளியான இந்த படத்தில் தோனி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்ததாக அவருக்கு பாராட்டுகள் கிடைத்தன.

சுஷாந்த் சிங் 11 படங்களில் நடித்து இருந்தாலும் தோனி அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. அந்த படத்துக்காக தோனியுடன் அதிக நாட்கள் செலவிட்டு அவரது உடல்மொழிகளை கற்றார். கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி எடுத்தார். கிரிக்கெட் வீடியோக்கள் பார்த்தார். அவரது கடும் உழைப்பு தோனி கதாபாத்திரமாகவே மாற வைத்து இருந்தது என்றனர்.
சுஷாந்த் சிங் நடிக்க தோனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்  ஈடுபட்டு வந்தனர். அதை தற்போது கைவிட்டுள்ளனர். இதுகுறித்து தோனி படத்தின் தயாரிப்பாளர் அருண் செய்துள்ளோம். சுஷாந்த் சிங் இல்லாமல் தோனி 2.ம் பாகத்தை எடுக்க முடியாது. தோனி 2. பாகம் உருவானால் அதுவும் வெற்றி படமாக அமைந்து இருக்கும். அந்த வாய்ப்பு இனிமேல் இல்லை என்றார்.Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post