குரூப்
1 தேர்வுக்கு விளக்கம் பெற கட்டணமில்லாத தொலைபேசி எண்
குரூப்
1 தேர்வுக்கு விளக்கங்கள் பெற
கட்டணமில்லாத தொலைபேசி
எண்ணில் ஜனவரி 8-ஆம்
தேதி வரை தொடர்பு
கொள்ளலாம் என்று அரசுப்
பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழகத்தில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு
ஜனவரி 3-ஆம் தேதி
நடைபெறுகிறது. அதுகுறித்த கூடுதல் விளக்கங்கள் தேவைப்பட்டால் கட்டணமில்லாத தொலைபேசி
எண்ணில் 1800 425 1002 தொடர்பு
கொள்ளலாம்.
தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியிலும் contacttnpsc@gmail.com உரிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விடைத்தாள்கள்:
தேர்வாணையத்தால் இனிவரும் காலங்களில் நடத்தப்படவிருக்கும் கொள்குறிவகைத் தேர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் விடைத்தாள்கள் பல சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள விடைத்தாளின் மாதிரிப் படிவமும், விடைத்தாள் கையாளும் முறை குறித்த விளக்கக் குறும்படமும், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


