10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி வழங்கப்படும்?
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில், மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் பழனிசாமி கூறியதாவது, தமிழகத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்தது. இதனோடு 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடங்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட இருந்தன.ஆனால், தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் கரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்புக்கு விடுபட்ட பாடத்துக்கான தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.மாணவ, மாணவிகள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்து 80% மதிப்பெண்ணும், பள்ளி வருகையை கணக்கில் எடுத்து 20% மதிப்பெண்ண் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.நிலுவையில் உள்ள 12-ம் வகுப்புத் தேர்வு குறித்து விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும். சூழலைப் பொறுத்து 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத முடியாத மாணவ, மாணவிகளுக்கு மறு தேதி அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வுகளின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகையின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும். அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு. அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு இறுதி தேர்வு மதிப்பெண்கள் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



