|
Buy Exam Books Here |
|
|
To Join Whatsapp
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
|
|
|
To Follow FaceBook |
|
|
To Join Telegram Channel |
|
|
To Follow Twitter |
|
|
To Follow Instagram |
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்து நம் முன்னோர்கள், வீட்டிலுள்ள முதியோர், பெற்றோர்கள் நமக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கக் கேட்டிருப்போம். ஆனால், தற்போது பெரும்பாலானோர் மனநலப் பிரச்சனைகளுடன்தான் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களது உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
மனநிலையைப் பாதிக்கும் காரணிகளை மாற்றியமைக்கும் முயற்சியில் தற்போது பலர் ஈடுபட்டுள்ளனர். உடல் ஆரோக்கியத்துடன் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். உடல்நலத்தைப் போலவே மனநலத்தையும் தொடர்ச்சியாக பேணுவது அவசியம் என்று கூறும் மனநலப் பயிற்சியாளர் காஞ்சன் ராய் மனநலனை மேம்படுத்தும் 5 வழிகளைக் கூறுகிறார்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகள்
உணர்ச்சிகளின் மூலமாக மன அழுத்தத்தை வெளிப்படுத்திவிட வேண்டும். மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கும் சில எளிய பயிற்சி முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, தசைப்பயிற்சி உள்ளிட்டவைகளை மேற்கொள்வது உங்கள் உடல்நிலையையும், மனநிலையையும் மேம்படுத்த உதவும்.
ஆரோக்கியமான உணவு
மூளையின் சிறந்த செயல்பாட்டுக்கு ஆரோக்கியமான உணவுகள் அவசியம். உணவில் பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், கடல் உணவுகள் மற்றும் மெல்லிய இறைச்சி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இந்த உணவுகள் மெக்னீசியம், ஃபோலேட், துத்தநாகம் மற்றும் முக்கிய கொழுப்பு அமிலங்களை உள்ளடக்கியது. இவை பெருமூளை செயல்பாட்டை துரிதப்படுத்துகின்றன. பாலிபினால்கள் நிறைந்த ஒயின், டார்க் சாக்லேட்டுகள், பெர்ரி போன்றவையும் முக்கியம்.
உடற்பயிற்சி
உடற்பயிற்சிகள் மூலமும் மனநலனை மேம்படுத்த முடியும். சமூகத் தொடர்பு மற்றும் இயற்கையின் வெளிப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய உடல்நல செயல்பாடுகள் மனநலனுக்கு உதவக்கூடும்.
Check Related Post:
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


