தற்போது TNPSC தேர்வுகள் நடத்த வாய்ப்பு இல்லை - 3 மாத கால அவகாசம்கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்தப்படாது என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் குறித்து செயலாளர் நந்தகுமார் அளித்திருக்கும் விளக்கத்தில், தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகமாக இருக்கும் இந்த சூழலில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடத்துவது சாத்தியமல்ல என்று கூறியுள்ளார்.

மேலும், சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்படும். குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கு இடையே நிச்சயம் போதிய கால அவகாசம் அளிக்கப்படும். 

3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டே தேர்வுகள் நடத்தப்படும். எனவே, தேர்வர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். தேர்வு நடத்துவதற்கு முன்பு சுமார் 3 மாத கால அவகாசம் அளிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post