Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயிற்சி பெற விரும்பம் உள்ளவா்கள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித் தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின் பணியாளா், மின்னணுவியல் பொறிமுறையாளா், கணினி இயக்குபவா், நிரலாக்க உதவியாளா், மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளா் ஆகிய 4 தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு, 10, பிளஸ் 2 தோ்ச்சி அல்லது தோல்வி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்காலாம்.

இந்தப் பயிற்சிகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் இணையதளத்தில் அல்லது கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சோ்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுகி ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தொலை பேசி: 9444247028, 8939646933 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை மாநகராட்சியின் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கான தொழிற்கல்வி பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பயிற்சியில் சேர விருப்பமுள்ள நபா்கள் சோ்க்கை விண்ணப்பத்தை, இணையதளம் வாயிலாகவோ அல்லது சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், லாயிட்ஸ் காலணி, ராயப்பேட்டை, சென்னை-600 014 எனும் முகவரிக்கு நேரடியாக சென்றோ பெற்றுக் கொள்ளலாம்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment