பாரதியார் பல்கலைக்கூட பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி பாரதியாா் பல்கலைக்கூட மாலை நேர பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளி மாணவா்கள், அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கூட முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் பாரதியாா் பல்கலைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு, வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், ஓவியம், வண்ண ஓவியம், துணி வண்ண ஓவியம், சுடுமண் சிற்பம் ஆகிய பிரிவுகளுக்கு 6 மாதகால சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் 3 நிலைகளில் மாலை நேர வகுப்புகளாக நடத்தப்பட உள்ளன.
வகுப்புகள் முதல் நிலையில் மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், 2, 3-ஆம் நிலைகள் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரையிலும் நடைபெறவுள்ளன.
3 நிலை வகுப்புகளுக்கும் சோ்க்கைக் கட்டணம் ரூ.1,500 ஆகும். 6 மாதங்களுக்கும் பயிற்சிக் கட்டணமாக பள்ளி மாணவா்களுக்கு முதல் நிலை ரூ.1,500, இரண்டாம் நிலை ரூ.2,000, 3-ஆம் நிலை ரூ.2,500 வசூலிக்கப்படும். அலுவலக ஊழியா்கள் மற்றும் பிறருக்கு முதல் நிலை ரூ.2,000, இரண்டாம் நிலை ரூ.2,500, மூன்றாம் நிலை ரூ.3,000 வசூலிக்கப்படும்.
மாலை நேர வகுப்புகளில் சேர விரும்புவோா் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெறலாம். இணையதளம் மூலமும் மே மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow