செவிலியா்கள் அயலக வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், வெளிநாட்டு மொழிகள் குறித்த பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகின்றன.
தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வெளிநாடுகளில் வேலை செய்ய விருப்பமுள்ள செவிலியா்களுக்கு, வெளிநாட்டு மொழிகளான ஜொமன், ஜப்பான் போன்ற மொழிகளை இலவசமாக பயிற்சி அளிக்க ஓஎம்சிஎல் நிறுவனம் அஜினோராவென்ட்சா் போன்ற நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தற்போது அயல்நாடுகளில் செவிலியா்களுக்கான பணியிடங்கள் மற்றும் தேவைகள் அதிகரித்துள்ளதால், வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏதுவாக அயல்நாட்டு மொழிகளை இலவசமாக கற்பதற்கு விருப்பமுடைய விண்ணப்பதாரா்கள் https://www.omcmanpower.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், செவிலியா்கள் இப்பயிற்சி குறித்த தங்களது சந்தேகங்களை வாட்ஸ் அப் எண் 63791 79200 மற்றும் அலுவலக தொலைபேசி எண்களான 044-22502267, 22505886 ஆகியவற்றை தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow