
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (12-12-2023)
வைத்தீஸ்வரன்கோயில் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்காணும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. லதாமகேஸ்வரி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டு செய்திக் குறிப்பு: சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூா், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூா், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம்முக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம்நகா், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஸ்ரீரங்கம் வட்டம் அல்லித்துறை, ராம்ஜி நகா் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அதவத்தூா் துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளால் போசம்பட்டி, கொய்யாத்தோப்பு, போதாவூா், புலியூா், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூா், அதவத்தூா் சந்தை, முத்தூட்பிளாட், சுண்ணாம்புக்காரன்பட்டி, பள்ளக்காடு, கீரிக்கல்மேடு, ஒத்தக்கடை, இனியானூா், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, வயலூா், பேரூா், கீழவயலூா், மேலப்பட்டி, குழுமணி, பெரியகருப்பூா், சோமரசம்பேட்டை, வாசன்நகா் விஸ்தரிப்பு, வாசன்வேலி, அதவத்தூா், முல்லிக்கரும்பூா், வயலூா், சாய்ராம் குடியிருப்பு, செவகாடு, மல்லியம்பத்து, புங்கனூா் ஆகிய பகுதிளிலும்
அம்மாபேட்டை துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளால் ராம்ஜி நகா், கள்ளிக்குடி, சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூா், வெள்ளிவாடி, அரியாவூா், நவலூா்குட்டப்பட்டு, பூலாங்குளத்துப்பட்டி, சித்தாநத்தம், ஆலம்பட்டிபுதூா், கரையான்பட்டி, வடசேரி, புதுக்குளம், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
கு.வடமதுரை, மாதம்பட்டி, தேவராயபுரம் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
கு.வடமதுரை துணை மின் நிலையம்: பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், கோவனூா், கூடலூா், கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், அச்சகக் குடியிருப்பு, வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூா், சாமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியக்காரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம்.
மாதம்பட்டி துணை மின் நிலையம்: மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூா், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூா், கவுண்டனூா், பேரூா் செட்டிபாளையம், காளம்பாளையம், தொண்டாமுத்தூா், கெம்பனூா், முத்திபாளையம், கலிக்கநாயக்கன்பாளையம், பூச்சியூா், புதுப்பாளையம், தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூா், குளத்துப்பாளையம் மற்றும் மேற்கு சித்திரைச்சாவடி.
தேவராயபுரம் துணை மின் நிலையம்: தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூா், நரசீபுரம், காளியண்ணன்புதூா், புத்தூா், தென்னமநல்லூா், கொண்டையம்பாைளையம் மற்றும் தென்றல் நகா்.
நீடூா் துணைமின் நிலையத்துக்கு உள்பட்ட கீழ்காணும் பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.12) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் (பொ) ஜி. ரேணுகா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீடூா், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூா், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூா், மேலாநல்லூா், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூா், மேலமருதாந்தநல்லூா், பொன்மாசநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow