அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச JEE பயிற்சி
அரசுப் பள்ளி மாணவர்களில் ஜேஇஇ தேர்வெழுத விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 26-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி, வெளியிட்ட சுற்றறிக்கை விவரம்: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் விருப்பமுள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 26 முதல் ஜனவரி20-ம் தேதி வரை இலவச பயிற்சிவகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சி அந்தந்த பள்ளிகளில்உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் வழங்கப்படும்.
அதன்படி கணிதம், வேதியியல், இயற்பியல் குறித்த அறிமுகப் பயிற்சிகள் டிசம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை காலை 9 முதல் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும். தொடர்ந்து அரையாண்டு விடுமுறைக்கு பிறகு ஜனவரி 2 முதல் 20-ம் தேதி வரை தேர்வுக்கான பாடங்கள் குறித்து தினமும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow