கால்நடை உதவியாளர்
பணிக்கான நேர்முகத் தேர்வு
ஒத்திவைப்பு
கால்நடை
பராமரிப்பு துறையில் உதவியாளர்
பணிக்காக நடத்தப்படவிருந்த நேர்முகத்
தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக கால்நடை பராமரிப்புத்துறை இணை
இயக்குனர் சுப்பையா பாண்டியன்
தெரிவித்துள்ளார்.
கால்நடை
பராமரிப்புத் துறையில்
உள்ள கால்நடை மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் கால்நடை
பராமரிப்பு உதவியாளர் பணியிடங்கள் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் காலியாக உள்ளன. சுமார்
4 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கடந்த
சில ஆண்டுகளுக்கு முன்பு
பெறப்பட்டது. ஆனால் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடப்பில்
போடப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பித்த அனைவரையும் நேர்முகத்தேர்வில் பங்கேற்குமாறு கால்நடை பராமரிப்புத்துறை அழைப்பாணை
அனுப்பியது.
தேனி
மாவட்டத்தில் 42 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகள்
தேனியில் நடைபெறும் என்றும்
, ஜனவரி 10 முதல் 13 ஆம்
தேதி வரை இந்த
நேர்முகத் தேர்வு நடக்கும்
என்றும் கால்நடை பராமரிப்பு துறை அறிவித்திருந்தது.
ஆனால்
ஒமைக்கிரான் பரவலால் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு நேர
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும்
பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.எனவே கொரோனா
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில், கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட விருந்த நேர்முகத் தேர்வுகள்
ஒத்தி வைக்கப்படுவதாக கால்நடை
பராமரிப்பு துறை இணை
இயக்குனர் சுப்பையா பாண்டியன்
தெரிவித்துள்ளார்.