இருளா் இன
இளைஞா்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
கிராமங்களில் வசித்து வரும் இருளா்
இன படித்த இளைஞா்கள்
பயன்பெறும் வகையில் பல்வேறு
வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம்
சுயவேலைவாய்ப்பு பெற
வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு
கிராமங்களில் இருளா்
இன பழங்குடியினா் வசித்து
வருகின்றனா். தற்போதைய நிலையில்,
பழங்குடியினா் இனத்தில்
படித்த இளைஞா்களுக்கு திறன்
பயன்பாட்டுப் பயிற்சி
அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பெறுவதால் எளிதாக சுய
வேலைவாய்ப்பு பெற்று
தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதே நோக்கமாகும். அந்த
வகையில், நிகழாண்டில் இத்திட்டம் மூலம் சமையல் கலை,
ஓட்டுநா் பயிற்சி, தையல்
பயிற்சி, மருத்துவப் பரிசோதனை
பயிற்சி, செவிலியா் பயிற்சி,
எலக்ட்ரீசியன் பயிற்சி
அளித்து சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனால்,
இப்பயிற்சியில் சேர
ஜாதிச் சான்று, ஆதார்
அட்டை நகல், கல்விச்
சான்று ஆகியவற்றுடன் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்
துறை, திருவள்ளூா் மாவட்டம்
என்ற முகவரியில் மேற்குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பம் செய்து
பயன்பெறலாம்.