Join Whatsapp Group

Join Telegram Group

இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் – மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்

By admin

Updated on:

இடைத்தரகர்களை நம்ப
வேண்டாம்மருத்துவ பணியாளர்
தேர்வு வாரியம்

வேலைவாங்கித் தருவதாக பொய்யான வாக்குறுதி அளிக்கும் இடைத்தரகர்களை நம்ப
வேண்டாம் என மருத்துவ
பணியாளர் தேர்வு வாரியம்
கூறியுள்ளது.

தமிழ்நாடு
மருத்துவ பணியாளர் தேர்வு
வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் பணியாளர் தேர்வு
வாரியம், மருத்துவம் மற்றும்
மருத்துவம் சார்ந்த காலிப்பணியிடங்களை நிரப்பிட துறைத்தலைவர்கள் வழங்கும் தேவைக்குறிப்பின் அடிப்படையில் அந்தந்த பணிகளுக்குரிய கல்வித்
தகுதியுடன் கூடிய பொது
விதி மற்றும் சிறப்பு
விதிகளின்படி வெளிப்படையான அறிவிக்கை (Open Notification) வெளியிட்டு அதன் மூலம் மட்டுமே
பணியாளர்களை தேர்வு செய்யும்
அமைப்பாகும்.

எனவே
விண்ணப்பதாரர்கள் இவ்வாரிய
இணையதளத்தை (www.mrb.tn.gov.in) அவ்வப்போது பார்வையிடுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில்
வேலை வாங்கித் தருவதாகக்
கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக
இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்.

இதுபோன்ற
தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும்
எவ்வித இழப்புக்கும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்
எந்த விதத்திலும் பொறுப்பாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]