கட்டுமான தொழிலாளா்
திறன் எய்தும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
கட்டுமானத் தொழிலாளா்களுக்கான திறன்
எய்தும் பயிற்சி வகுப்பில்
சேர விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் கூறியது:
தமிழ்நாடு
கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்ற கொத்தனார்,
டைல்ஸ் பொருத்துநா், மின்சார
வேலை, வண்ணம் பூசுபவா்,
குழாய் பொருத்துநா், மர
வேலைப்பாடு செய்யும் தொழிலாளா்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தமிழக
முதல்வா் உத்தரவுப்படி அனைத்து
மாவட்டங்களிலும் ஒரு
நாள் திறன் எய்தும்
பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இதன்படி,
திருச்சி மாவட்டத்தில் உள்ள
பதிவு பெற்ற 2,553 கட்டுமான
தொழிலாளா்களுக்கு நடைபெறவுள்ள பயிற்சியில் தொழிலாளா்கள் சோந்து
பயன்பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு, மன்னார்புரம், செங்குளம் காலனியில் இயங்கி
வரும் திருச்சி தொழிலாளா்
உதவி ஆணையா் (சமூகப்
பாதுகாப்பு திட்ட) அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு
செய்யலாம்.
பதிவு
பெற்ற தொழிலாளா்கள் அனைவரும்
தவறாமல் இந்த பயிற்சியில் சேர வேண்டும்.