ஊரடங்கு நாளன்று
போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி
ஊரடங்கு
நாளன்று போட்டித் தேர்வுகளுக்குச் செல்பவர்களுக்கு அனுமதி
வழங்கப்படும் எனத்
தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்
கரோனா
பரவலைத் தடுப்பதற்காக முழு
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஒன்றிய மற்றும்
மாநில அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (UPSC/TNPSC) நடத்தும்
தேர்வுகள், மற்ற போட்டித்
தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும்
வேலைவாய்ப்புக்கான நேர்முகத்
தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது
நிறுவனங்களின் அழைப்பு
கடிதம் ஆகியவற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள
அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுபோன்ற
முழு ஊரடங்கு நாட்களில்
நடைபெறும் போட்டித்தேர்வுகள் மற்றும்
நேர்முகத் தேர்வுகளுக்கு செல்லும்போது அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி
வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் ” என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,
UPSC மெயின் தேர்வு
2021 திட்டமிட்டபடி ஜனவரி
7, 8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும்
என்று மத்திய பணியாளர்
தேர்வாணையம் அறிவித்தது. அதேபோல்
வரும் ஞாயிறன்று (ஜன.8)
TNPSC தேர்வு நடைபெறுகிறது.