கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம்
சிறுபான்மையினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால
அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்தது:
பதினொறாம்
வகுப்பு முதல் பிஎச்.டி.,
படிப்பு வரை பயிலும்
சிறுபான்மையினர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி
உதவித்தொகை வழங்குகிறது. விருப்பமுள்ளோர் www.scholarships.gov.in ல்
தகுதியானவர்கள் விண்ணப்பிக்க ஜன.15 வரை அவகாசம்
நீட்டிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களின் விண்ணப்பத்தை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும் கல்வி
நிலையங்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும். பள்ளி
படிப்பு உதவித்தொகைக்கு ஜன.15,
பள்ளி மேற்படிப்பு, தகுதி
மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு ஜன.31
க்குள் விண்ணப்பத்தை சரிபார்த்து சமர்ப்பிக்க வேண்டும்.