தாட்கோ திட்டத்தில் கடன் பெற அழைப்பு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் தாட்கோ
திட்டத்தில், நிலம் வாங்க,
நிலத்தை மேம்படுத்த மானியத்துடன் கடன்பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் வினீத்
அறிக்கை:தாட்கோ மூலம்,
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினருக்கு நிலம்
வாங்குவதற்கும், நிலத்தை
மேம்படுத்தவும், வங்கியுடன் இணைந்து, மானியத்துடன் கூடிய
கடன் வழங்கப்படுகிறது.ஆண்டு
வருவாய் இரண்டு லட்சத்துக்கு மிகாமல் ஈட்டவேண்டும்.
வயது,
18 முதல் 65க்குள் இருக்க
வேண்டும். இந்ததிட்டத்தில் அதிகபட்சம், 2.50 ஏக்கர் நஞ்சை
அல்லது 5 ஏக்கர் புஞ்சை
நிலம் வாங்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாதோரிடமிருந்து நிலம் வாங்கப்படவேண்டும்.பத்திரப்பதிவு கட்டணத்தை
அரசு தள்ளுபடி செய்துள்ளது. நிலம் வாங்கும் மொத்த
முதலீட்டில் 30 சதவீதம் (2.25 லட்சம்
ரூபாய் வரை) மானிய
தொகையாகவும், மீதி தொகை
வங்கி மூலம் கடனாக
வழங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு, நில
வளத்தை மேம்படுத்துதல், ஆழ்துளை
கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்தல், பம்ப்
செட் அமைப்பதற்காக, மொத்த
முதலீட்டில் 30 சதவீதம் (2.25 லட்சம்
ரூபாய் வரை) மானியமாகவும், மீதத்தொகை வங்கி கடனாக
வழங்கப்படும்.விவரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகம்,
அறை எண் 503ல்
செயல்படும், தாட்கோ மாவட்ட
மேலாளர் அலுவலகத்தை, 0421 2971112 என்ற
எண்ணில் அழைக்கலாம்.
http://application.tahdco.com/ என்கிற
இணையதள முகவரியில் உரிய
ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.