Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

கிண்டி அரசு மகளிர் ஐடிஐயில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி

கிண்டி அரசு மகளிர் ஐடிஐயில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி
கிண்டி அரசு மகளிர் ஐடிஐயில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி

கிண்டி அரசு மகளிர் ஐடிஐ-யில் கட்டிடக்கலை படவரைவாளர், தகவல் தொழில்நுட்பம், மின்னனு சாதனங்கள் பராமரிப்பு, தையல் தொழில்நுட்பம், அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம், நவீன ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தொழிற்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் 2024-2025-ம் கல்வி ஆண்டில் சேர மாணவிகளிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயிற்சிகளில், 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் சேரலாம். வயது வரம்பு கிடையாது.

பயிற்சி காலத்தில் மாதம் ரூ.750 வழங்கப்படும். மேலும், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 வரை படித்த மாணவிகளுக்கு கூடுதலாக மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும். ஷு, பஸ் பாஸ் ஆகியவையும் கிடைக்கும்.

பயிற்சியின்போது தொழிற்சாலையுடன் கூடிய இன்டர்ன்ஷிப் மற்றும் இன்-பிளான்ட் பயிற்சி அளிக்கப்படுவதுடன் பயிற்சி முடிந்ததும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜுன் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment