தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் (டி.இஎல்.இடி.) சேர மே 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து தஞ்சாவூா் அரசு மகளிா் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் வீ. வள்ளி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அரசு மகளிா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம் தஞ்சாவூரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2024 – 25 ஆம் ஆண்டுக்குரிய முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கை புதன்கிழமை தொடங்கியது.
இதில், சேர விரும்பும் மாணவிகள் https://www.tnscert.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவைச் சோ்ந்த மாணவிகள் ரூ. 500-ம், எஸ்.சி., எஸ்.டி. மாணவிகள் ரூ. 250-ம் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். சோ்க்கை விண்ணப்பத்துக்கான கடைசி தேதி மே 31 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியா் பயிற்சிப் படிப்பு மற்றும் இதர விவரங்களுக்கு முதல்வா், அரசு மகளிா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம், தஞ்சாவூா் என்ற முகவரியிலோ அல்லது 81228 63170, 96002 22062 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow