அவள் விகடன் நடத்தும் அட்வான்ஸ்டு மேக்கப் பயிற்சி
பெண்கள்
தினத்தை முன்னிட்டு பெண்கள்
தொடர்பான பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது அவள் விகடன். அந்த
வகையில் அவள் விகடன்
மற்றும் H3 Beauty Academy ஆகியவை
இணைந்து Basic to Advanced Makeup & Bridal
Styling என்ற பயிற்சியை வாசகிகளுக்கு வழங்கவுள்ளது.
அடிப்படை
முதல் அட்வான்ஸ்டு லெவல்
மேக்கப், சருமப் பராமரிப்பு, ஹேர் ஸ்டைல், காஸ்டியூம் தேர்வு செய்வது, காஸ்டியூம் கலர் தேர்வு செய்வது,
ப்ரீ வெடிங் மற்றும்
போஸ்ட் வெடிங் ஸ்டைலிங்
ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும்
மேக்கப்புக்கு சிறந்த
பொருள்களைத் தேர்வு செய்வது
பற்றிய தகவல்களும் அளிக்கப்படும்.
நான்கு
ஆண்டுகளுக்கும் மேலாக
மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றுபவரும் பிரைடல் மேக்கப்பில் அதிக
அனுபவம் பெற்றவருமான உமேஸ்வரி
மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக டிசைனராகப் பணியாற்றும் சினேகா சஜித் ஆகியோர்
பயிற்சியை வழங்கவுள்ளனர்.
5000 ரூபாய்
மதிப்புள்ள இந்தப் பயிற்சி
அவள் விகடன் வாசகிகளுக்காக ரூ.500 சலுகை கட்டணத்தில் வழங்கப்படும். மார்ச்
27, 28 ஆகிய தேதிகளில் நான்கு
பேட்ச்சுகளாக சென்னையில் பயிற்சி நடைபெறும். ஒரு
Batch.க்கு பத்து
பேர் மட்டுமே அனுமதி.
பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு ரூ.350
மதிப்புள்ள ஆர்கானிக் மேக்கப்
பொருள்கள் வழங்கப்படும்.
மாணவிகள்,
இல்லத்தரசிகள், மேக்கப்
ஆர்ட்டிஸ்ட், மேக்கப் கலையில்
ஆர்வமுள்ளவர்கள் என
யார் வேண்டுமானலும் இதில்
பங்கேற்கலாம்.
பங்கேற்க: Click
Here