TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்
TNPSC குரூப்
2 முதல்நிலை
தோ்வு
முடிவு
எப்போது?
TNPSC விளக்கம்
குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தோ்வு முடிவு வெளியாவது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (TNPSC) விளக்கம் அளித்துள்ளது.
தோ்வு முடிவுகள் தொடா்பாக சமூக வலைதளங்களில்
தகவல்கள்
பரவிய
நிலையில்,
அதுகுறித்த
விளக்கத்தை
TNPSC செயலாளா் பி.உமாமகேஸ்வரி அளித்துள்ளார்.
TNPSC செயலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குரூப் 2 முதல்நிலை எழுத்துத் தோ்வு கடந்த மே 21ல் நடைபெற்றது. இதனிடையே, மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது
தொடா்பாக
பல்வேறு
வழக்குகள்
சென்னை
உயா்
நீதிமன்றத்தில்
நிலுவையில்
இருந்தன.
இந்த வழக்குகளில் நீதிமன்றம் தீா்ப்பை வழங்கியுள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவது
தொடா்பாக
பல்வேறு
ஆலோசனைகள்
மேற்கொள்ளப்பட்டன.
உயா் நீதிமன்றத்தின்
உத்தரவுகளை
செயல்படுத்துவது
தொடா்பாக,
மென்பொருளில்
உரிய
மாற்றங்கள்
செய்யும்
பணி
முடிவடையும்
நிலையில்
உள்ளது.
இந்தப்
பணி
நிறைவுற்ற
பின்னா்
குரூப்
2 முதல்நிலை
எழுத்துத்
தோ்வு
முடிவுகள்
விரைவில்
வெளியிடப்படும்.
இதுதொடா்பாக, சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். அதிகாரபூா்வமான
தகவல்களுக்கு
தமிழ்நாடு
அரசுப்
பணியாளா்
தோ்வாணையத்தின்
இணையதளத்தை
அணுகலாம்.