இன்றைய நிலையில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி என இருவருமே வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிதி நெருக்கடியில்லாமல் நடத்த முடியும் என்ற சூழல் பெரும்பாலான குடும்பங்களில் நிலவி வருகிறது. ஆனால் இவ்வாறு வீட்டையும் பார்த்துக் கொண்டு அலுவலகத்துக்கும் சென்று பணிபுரிய கூடிய சூழல் பல்வேறு குடும்பத் தலைவிகளுக்கு அமைவதில்லை.
ஆனால் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால், தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்து போதுமான அளவு பணம் ஈட்ட முடியும் என்று தான் பெரும்பாலான ஆர்வமுடன் இருக்கின்றனர். ஆனால் அதற்கான வழிமுறைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. இவ்வாறு வீட்டில் இருந்தபடியே செய்யும் வேலை தேடும் குடும்பத் தலைவிகளில் நீங்களும் ஒருவராக இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது.
டேட்டா என்ட்ரி: மிகக் குறைந்த அளவில் முதலீடு மற்றும் அடிப்படை திறமையை கொண்டே பார்க்கக்கூடிய வேலைகளில் ஒன்றாக டேட்டா என்ட்ரி வொர்க் உள்ளது. போதுமான வேகத்தில் கூடிய தட்டச்சு செய்யும் திறமை, அடிப்படை கணினி அறிவு, தடையற்ற இணைய சேவை ஆகியவை இருந்தாலே நீங்கள் டேட்டா என்ட்ரி வேலையில் கொடிகட்டி பறக்கலாம் . பல்வேறு ஆன்லைன் தளங்களும் டேட்டா என்ட்ரி வேலை செய்வதற்கான வாய்ப்புகளை அள்ளி வழங்குகின்றன அதில் சரியான, நேர்மையான தளத்தை கண்டறிந்து பணியாற்றினால் நீங்களும் வெற்றி பெறலாம்
ப்ளாகிங்: எழுத்தில் அதிக ஆர்வம் உடையவர்கள் ப்ளாகிங் செய்து பணம் ஈட்ட முயற்சி செய்யலாம் . நன்றாக கலைநயத்துடன் எழுதும் திறன் ஒன்றே இதற்கு முதலீடாகும். காபி ரைட்டிங், கன்டன்ட் ரைட்டிங், கோஸ்ட் ரைட்டிங்போன்ற பல்வேறு விதமான ரைட்டிங் வேலைகள் நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். பல்வேறு ஆன்லைன் நிறுவனங்களும் இந்த வேலைக்கு கணிசமான தொகையை ஊதியமாக அளிக்க ஆயத்தமாக உள்ளார்கள்.
யூட்யூப்: இது தற்போது மிகவும் பிரபலமான ஒரு பணம் ஈட்டும் வழியாகும். குறிப்பாக குடும்பத் தலைவிகள் பலதும் யுடியூப் மூலம் நல்லதொரு வருமானத்தை பெற்று வருகிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம்நீங்கள் அப்லோட் செய்யபோகும் வீடியோக்கள் எந்த வகையை சார்ந்தவை என்பதை கண்டறிந்து அவற்றை சரியான முறையில் ரெக்கார்ட் செய்து அப்லோட் செய்ய வேண்டியது தான். இதற்கு, அடிப்படை எடிட்டிங் திறமையும், வீடியோக்களை ரெக்கார்ட் செய்ய போதுமான தரத்தினாலும் கேமரா மற்றும் விடாமுயற்சியும் மட்டுமே மூலதனமாகும். உங்களுக்கு பிடித்த பார்வையாளர்களை அதிகம் கவரக் கூடிய வகையில் வீடியோக்களை உருவாக்கி அப்லோட் கொண்டே இருந்தால் விரைவில் நீங்களும் வெற்றிகரமாக யுடியூபராக மாறலாம்.
கைவினை பொருட்கள்: கைவினை பொருட்கள் சொல்வதில் ஆர்வம் உள்ள பலரின் நீங்களும் ஒருவராக இருந்தால் மிக எளிதாக வீட்டில்ருந்தபடியே உங்களால் பணம் ஈட்ட முடியும் . எம்ப்ராய்டரி ஒர்க், மண்பாண்டங்கள் போன்ற பல்வேறு விதமான கைவினைப் பொருட்கள் தயார் செய்து அவற்றை அவற்றை விற்பதன் மூலம் கணிசமான பணம் ஈட்ட முடியும். மேலும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கும் தற்போது பல்வேறு வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.
மொழிபெயர்ப்பு: நீங்க பன்மொழி புலமை பெற்றவராக இருந்தால் மிக எளிதாக வீட்டில் இருந்தபடியே மொழிபெயர்ப்பு வேலை செய்து பணம் ஈட்டலாம். குறிப்பாக ஆங்கிலத்தில் நல்ல ஒரு வல்லுநராகவும் இதை தவிர 2 அலது 3 இந்திய மொழிகளில் புலமை கொண்டிருந்தால் இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவராக இருப்பீர்கள். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட மொழியில் பட்டப்படிப்பை முடித்திருந்தால் மிக எளிதாக இந்த துறையில் பணம் ஈட்ட முடியும். கூகுள், பேஸ்புக் போன்ற பல நிறுவனங்களும் டிரான்ஸ்லேட்டர்களுக்காண ஆட்சேர்ப்பு நடவடிக்கையை அவ்வப்போது செய்கின்றன பெரும்பாலும் இவை அனைத்தும் வீட்டில் இருந்தபடியே செய்யும் வேலையாக மட்டுமே இருக்கும்.
விசுவல் அசிஸ்டன்ட்: தற்போது சமீப காலமாக விர்ச்சுவல் அசிஸ்டன்ட் எனும் வேலையானது மிகப் பெரும் அளவில் வெற்றி அடைந்து வருகிறது. நீங்கள் இணையவழியாக ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்திற்கு உதவியாளராக பணியாற்றுவீர்கள். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் பவர்பாயிண்ட் ப்ரெசண்டஷன் தயாரிப்பது, அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் செய்வது போன்ற வேலைகளை நீங்கள்.வீட்டில் இருந்தபடியே செய்து பணம் ஈட்ட முடியும்.