வேலை தேடுவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி – கோவை
கோவையில்
உள்ள மத்திய அரசின்
சிறு குறு மற்றும்
நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு அமைச்சகம், வேலை தேடுவோர்
மற்றும் வேலைக்கு செல்வோருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி
அளிக்கிறது.
மத்திய
அரசின் சிறு குறு
மற்றும் நடுத்தர தொழில்கள்
மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ்
இயங்கும், தொழில் நுட்ப
மேம்பாட்டு மையம், கோவை
பட்டேல் சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை
தேடுபவர்கள், வேலையில் இருப்பவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளவும், புதிய தொழில்
துவங்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின்
மத்திய அரசின் சான்றிதழ்களும் வழங்கப்படும். உணவு
தயாரித்து பதப்படுத்தும் பயிற்சி,
வரும் 5, 6 ஆகிய இரு
தினங்கள் காலை 9.30 முதல்
மாலை 5.30 மணி வரை
நடை பெறுகிறது.
இதில்
காய்கறி மற்றும் பழ
வகைகள், ஊறுகாய் தயாரிப்பு
மற்றும் பதப்படுத்துதல், தானியங்களை கொண்டு உணவு மற்றும்
ஸ்னாக்ஸ் தயாரித்தல், பழங்களை
கொண்டு ஜாம், ஸ்குவாஷ்,
மூலிகை பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சியும், நேரடி
களமேலாண்மையும் கற்றுத்தரப்படுகிறது.
மேலும்
விபரங்களுக்கு, 0422-2993949/
94880 79266/ 96007 76611 ஆகிய எண்களை தொடர்பு
கொள்ளலாம்.