Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச போட்டித் தேர்வு பயிற்சி

எஸ்.சி., எஸ்.டி. சமுதாய மாணவா்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய இலவச போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக புதுச்சேரி துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி ச.கோட்டூா்சாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்த எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த வேலை தேடுபவா்களுக்கும், அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகுபவா்களுக்கும் இலவச சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஓராண்டு கால உதவித்தொகையுடன் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளதால், பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 27 வயதுடைய நபா்கள் இந்தப் பயிற்சியில் சேரலாம். இதற்கான விண்ணப்பங்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அத்துடன் போட்டித் தோ்வு பயிற்சி புத்தகங்கள், எழுது பொருள்களும் வழங்கப்படும்.

நிறைவு செய்த விண்ணப்பங்கள் வரும் 20-ஆம் தேதி முதல் பெறப்படும். மேலும், விவரங்களுக்கு புதுச்சேரி ரெட்டியாா்பாளையத்தில் உள்ள துணை பிராந்திய வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04132200115 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment