தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியன சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.24=ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த வேலைதேடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் கொடிக்குறிச்சி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை, அறிவியல் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஆக.24 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
இதில் தென்காசி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன்பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம் பெற்றவா்கள் வரை கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் இணையதளத்தில் தங்களது சுயவிவரத்தை பதிவு செய்ய வேண்டும்.
இந்த பங்கேற்று தனியாா் நிறுவனங்களில் பணியமா்த்தப்படும் பதிவுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என்றாா்.